நாள்: 18


நாள்: 17 தொடர்ச்சி & 18ம் நாள்

அதேதான்…அதேதான்! அப்டியே நேத்து விஷயமே தான். ஆனா செகண்ட் ஆப் கொஞ்சம் காப்பாத்துச்சு.

டாஸ்க்கோட இறுதிக்கட்டம். மறுபடியும் வாட்டரோட மண்டைய கழுவி ரம்யாவுக்கு சப்போர்ட் பண்ணுவோம்னு போராடுச்சு பாரு. ஆனாலும் “சுபியையும் நாம பாக்கணுமே?”ன்னு வாட்டர் நேர்மையின் இன்னொரு பேர் ஹமாம் சோப்பா மாறி நிக்க. “சரி, இன்னைக்கு ரெண்டு பேரையும் டிரா பண்ணி விடுவோம்”னு ஒரு சேர முடிவெடுத்தானுங்க. சுபியும், ரம்யாவும் டிரா.

அப்பறம் எல்லாரும் உள்ள போயி காயினுக்கு கணக்கு சொல்லிட்டு வந்தானுங்க. தன்னோட ஜட்ஜ் பதவிய ராஜினாமா பண்ணதால ஊருக்குள்ள கடையடைப்பு, பஸ் எரிப்பு, உருவ பொம்மை எரிப்புமக்கள் புரட்சி ன்னு எதுவும் நடக்காததாலையும் கூடவே பிக்பாஸ் டீம்ல எவனும் ஜட்ஜிங்க் உள்ள போக விடாததாலையும், பாருவே வந்து பிக்பாஸ் கேமராகிட்ட “சார், நான் ஜட்ஜா சார்ஜ் எடுத்துக்க வேண்டிய நேரம் வந்துருச்சு…ஐ ஆம் அப்பாயிண்டட் சார்”ன்னு உருட்டிட்டு போச்சு.

பாருவும் ரம்யாவும் மறுபடியும் டீல் பேசிக்கிட்டாங்க. பாரு ரம்யாவ நேரா வாட்டருகிட்ட இழுத்துட்டு வந்து “தலையால அடிச்சுக்கிட்டேன்…இந்த தகர டப்பா எதுக்கும் ஒத்து வரல. யோவ் நாளைக்காச்சும் இந்த பொண்ணுக்கு பாட்டில கரெக்ட் பண்ணி எனக்கு பாஸ வாங்கிக் குடுயா”ன்னு சொல்லிட்டுப் போச்சு.

18 வது நாள்

சுபி மறுபடியும் பாரு கிட்ட டீல் பேச, பாருவும் “சரி எப்டியாச்சும் பாக்குறேன்…ஆனா பாஸ் பத்திரம்”ன்னு சொல்லிட்டு போச்சு. “இன்னைக்கு முழுக்க ஓம் சாந்தி ஓஷானா மோட்லயே இருக்கப் போறேன். ஆனா என் வாஸ்து சரியில்லாத வாயால என்ன ஆகப்போகுதுன்னு தெரியல”ன்னு பாரு சொல்லிட்டு சுத்துச்சு.

இந்தப் பக்கம்

துஷார்: ஏம்பா கமரு, வேலை கீல எதாச்சும் செய்யலாம்னு பாத்தா ஆளே சிக்க மாட்டேங்குறியே?

கமர்: டேய் நான் இங்கதான இருந்தேன்…நீதான் தூங்கிட்டு இருந்த?

துஷார்: பாத்தீங்களா? நீங்களே சொல்றீங்க…நான் தூங்கும் போது எப்டி நீங்க தெரிவீங்க. அப்போ நீங்க இல்லேன்னுதான அர்த்தம்

கமர்: அடேய் கண்ண மூடிட்டு இருந்தது நீ

துஷார்: அய்யா, கண்ண மூடுனது நானாவே இருக்கட்டும் ஆனா இல்லாமப் போனது நீங்கதான//

இப்டியே பேசி பேசி ரெண்டு பேரும் கைய ஓங்கிட்டானுங்க. கண்டிப்பா சீக்கிரம் இந்த வீடு ரத்தம் பாத்துரும்.

டாஸ்க் ஆரம்பிச்சது. பாட்டில பொறுக்க போனானுங்க. ப்ரவீன் பாட்டில வச்சு ரம்யா கிட்ட காயினுக்கு டீல் பேசுனான். பாருகிட்ட இந்த டீல் வந்தப்ப “இத நீங்களே பேசிக்கோங்க”ன்னு சொன்னாலும், ரம்யா மேல அதுக்கு ஒரு டவுட் இருந்தது. அப்பறம் “டேய் வாட்டரு, நேத்து வாயக் குடுத்து உன்ன நல்லா திட்டி விட்டேன். இந்த வீட்ல எனக்கும் ஒரு நல்லது நடக்க விடுடா…இன்னைக்கு நான் சொல்றத மட்டும் கேளு, உன் காலுல கூட விழுகுறேன்”ன்னு 4 தடவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுச்சு.

இருந்திருந்தாப்ல எங்க இருந்தோ என்னவோ பிரச்சனை ஆரம்பிச்சு அது வாட்டர்-கமருதீன் சண்டையா மாறுச்சு. மறுபடியும் கமருதீன் பேசக்கூடாத வார்த்தைகளத்தான் பேசுறான். இந்தக் கடுப்புல வாட்டரு வந்து ஜட்ஜுகளுக்கு யாரும் ஃபேவர் பண்ண வேணாம். உங்க இஷ்டத்துக்கு ஃப்ரீ பாஸ குடுங்க”ன்னு சொல்லிட்டாப்ல.

இப்போ ஜட்ஜிங்க் வந்தானுங்க. ரம்யாவோடத ரொம்ப பொறுப்பாப் பாத்து ரிஜெக்ட் பண்ணி, சுபியோட பேசுன டீலுக்கு பாருவும், வாட்டரும் சுபிய வின்னராக்கிட்டானுங்க.

இங்க இந்த சுபி – விக்ரம் – வியான்னா 3 பேரும் ஒரு டீல்ல இருந்திருக்காங்க. கூடவே கனி கிட்ட 60-40% பேசி இருக்கு. அதாவது காயின்ஸ இவங்களுக்கு பிரிச்சு குடுத்திரலாம்னு சுபி நெனச்சிருக்கு. ஆனா பதட்டத்துல 4 காயின்ஸ மட்டும் எடுத்துட்டு வந்துச்சு. இந்த டீல்ஸ பத்தி பார்வதிக்கு தெரியாது.

வெளிய ஒர்க்கர்ஸுக்கு காயின குடுங்கன்னு பிக்கி சொன்னதும் ஆளாளுக்கு குடுக்க..சுபி வந்து கனிக்கு 1 காயின குடுக்க, கனி உடனே “நீ ஃப்ரீ பாஸ எப்டியும் எனக்கு தர மாட்ட, அத நீ உன் நண்பர்கள் விக்கி, வியான்னாவுக்கு குடு. ஆனா எங்கிட்ட பேசுன 60-40% டீல்ல என்னோட ஷேர் இந்த ஒரு காயின் தானா?ன்னு கேக்க, சுபிக்கு அதிர்ச்சியோ இல்லையோ பாருவுக்கு பேரதிர்ச்சி.

கட் பண்ணா ஒர்க்கர்ஸ்ல ப்ரவீன் வின்னராகி நாமிநேஷன் ஃப்ரீ பாஸ் வாங்கி சூப்பர் டீலக்ஸ் வீட்டுக்கும் போறான். முடிஞ்சது.

சுபி காயின கனிக்கும், விக்கிக்கும் குடுக்க, இப்ப வியான்னாவுக்கு காயின் இல்ல. சோ இப்ப சுபி இந்த ஃப்ரீ பாஸ தன்னோட அன்புத் தோழி வியான்னாவுக்கு குடுக்கப் போறாங்களா? இல்ல பேசுன டீல் படி பாருவுக்கு குடுக்கப் போறாங்களா?


Series Navigation<< நாள்: 16

Author

Related posts

நாள்: 20

நாள்: 19

அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு