நாள்: 19

நாள்: 18 தொடர்ச்சி & 19ம் நாள்

நாம எதிர்பார்த்த மாதிரியே சுபி பாருவுக்கு ஃப்ரீ பாஸ தர மட்டேன்னு சொல்லிருச்சு. இதக் கேட்ட பாரு, இஸ்ரேல் குண்டுகள வாங்குன காசா நகரமாச்சு.
பாரு: இந்தாம்மா நீ எனக்கு ஃப்ரீ பாஸ் தரேன்னு சொன்னதால தான உனக்கு ஆதரவா ஜட்ஜிங்க் பண்ணேன்
சுபி: ஆமாந்தான் ஆனா இப்போ யோசிச்சு பாக்குறப்போ நோகாம நொங்கு தின்ன உனக்கு குடுக்கலாமா? இல்ல குப்புற விழுந்து பாட்டில பொறுக்கிட்டு வந்து எங்கிட்ட குடுத்த உழைப்பளிகளுக்கு குடுக்கலாமா?னு யோசிக்கிறேன்
பாரு: அடியே ஆனா அந்த பாட்டில அப்ரூவ் பண்ணது நாந்தான?
சுபி: ஆனா அந்த பாட்டில குடுத்ததே உழைப்பளிகள் தான…! அது மட்டுமில்லாம உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேய்யா…அட ஹோயான்னு தலைவரே பாடி இருக்காரே
பாரு: பாடியாயிருவ பாத்துக்க. நல்லா யோசிச்சு சொல்லு ஃப்ரீ பாஸ் குடுப்பியா? மாட்டியா?
சுபி: குடுக்க மாட்டேன்
பாரு: இதுதான் நீ நல்லா யோசிக்குறதா? சரிடி…நீ நடத்து. எங்க இந்த வாட்டர? டேய்…
வாட்டரு: இந்தா இன்னைக்கு உன் முட்டைய நான் எடுக்கல
பாரு: எது முட்டைய எடுக்கலையா? டேய் சுபி என்னய மொட்ட அடிச்சுட்டாடா…
வாட்டரு: எனக்கு மட்டும் அடிக்கல நானும் ஜட்ஜ்தான…இரு கோவமா கேட்டுட்டு வரேன்
பாரு: இவன் லூஸா இல்ல லூஸு மாதிரி நடிக்கிறானா? டேய் நாந்தான் அப்போவே சொன்னேனே….ரம்யாவ ஜெயிக்க வைடான்னு…ஒரு கப்பு மாதுளைக்கு ஆசப்பட்டு சுபிய ஜெயிக்க வச்ச…இப்ப அவ ஃப்ரீ பாஸ் இல்லேன்னு சொல்றாடா
வாட்டரு: சரி….ஃப்ரீயா வேணாம், அமவுன்ட்டுக்கு எதும் குடுப்பாளான்னு கேட்டுட்டு வரவா?
பாரு: இப்போ உனக்கென்ன, அவ கிட்ட போயி பேசனும் அதான? போ…அப்டியே ஓடிரு//
கமருதீன், வினோத் ரெண்டு பேரும் பாருவுக்கு சப்போர்ட் பண்ணி வாட்டர வம்பிழுக்க. வினோத் சும்மா இல்லாம “மரத்துக்கு சேல கட்டுனா கூட நீ ப்ஃரீயா பிசியோதெரபி பாப்ப”ன்னு சொல்ல. வாட்டரு டென்சனாகிட்டாப்ல.
உள்ள குடு குடுன்னு ஓடிப்போயி எல்லாரையும் கூப்ட்டு “இவன் சுபிக்கு சேல கட்டி கூட்டிட்டு வந்ததப் பத்தி தப்பா பேசுறான்”னு சொல்லிட்டாப்ல. வினோத் பதறிப் போயி “அய்யோ நான் மரத்துக்கு சேல கட்டின்னு சொன்னேன்”னு சொல்ல, “அப்ப சுபிய நீ மரம்ன்றியா?”ன்னு வாட்டரு கேக்க, ஓரே கலவரம்.
இதுல கமருதீன் கூட ஒரு வாய்க்கா தகராறு. அவன் இந்த வாட்டி வாட்டர நெருக்கி கைய ஓங்கிட்டான். பிசிறு தட்டி இருந்தா வாட்டரு வாட்டர் பாக்கெட் மாதிரி தெரிச்சிருந்திருப்பாப்ல.
நைட்டு இப்டியே ஓடி ஒரு வழியா முடிஞ்சது.
19 வது நாள்.
உலகமே இன்னைக்குதான் புதுசா உருவாச்சு…நாமளாம் இன்னைக்கு தான் பொறந்தோம்….நேத்தெல்லாம் ஒண்ணுமே நடக்கலன்ற மாதிரி டான் பாட்டுக்கு டங்கு டங்குன்னு குதிச்சிட்டு இருந்தானுங்க.
இப்ப ஒர்ஸ்ட் பர்பார்மெர்ஸ். இதெல்லாம் ஒரு கேள்வியா? பெரும்பாலும் எல்லாரும் பாரு & கமருதீன சொன்னானுங்க. வாட்டரு கூட நெருக்கி வந்தாப்ல…ஆனா ஜஸ்ட் மிஸ். பிக்கி ரெண்டு பேரையும் உடனே ஜெயிலுக்கு அனுப்ப சொன்னாரு. பாருவுக்கு தாங்க முடியாத மன உளைச்சல். இதுல இன்னும் கொஞ்சம் விரல பாச்சுற மாதிரி கலை இன்னைக்கு பாருவ நல்லாவே வெறுப்பேத்துனான். அதாவது கலைக்கு, FJ-வே பரவால்லன்னு பாருவே சொல்ற அளவுக்கு செஞ்சுட்டான்.
கிழக்கே போகும் ரயிலு….இந்தப் பக்கமா இருக்கு ஜெயிலுன்னு கனி அக்கா கூட்டிட்டுப் போயி உள்ள தள்ளுச்சு.
க்ளையண்ட் இன்டெகரேஷன். மேக்கப் போட்டு ராம்ப் வாக் பண்ணனும். இந்த தடவ 3 டீமா. (என்ன ஒரு புதுமை) அரோரா டீம் ஜெயிச்சுச்சு.
பாரு: ஆமா இப்ப அவனுங்க உள்ள என்னடா செஞ்சுட்டு இருப்பானுங்க?
கமர்: ரவை நெறைய இருந்துச்சு….உப்மா செய்வானுங்கன்னு நெனைக்கிறேன்.
பாரு: நீ வேற ஏண்டா என்னய செய்யுற? அவனுங்க உள்ள என்ன பேசுவானுங்கன்னு கேட்டேன்
கமர்: நான் மட்டும் என்ன மை போட்ட பாக்க முடியும்? உன் கூடத்தான இருக்கேன்
பாரு: அதுவும் சரிதான்…!
வினோத் அங்க வர…
பாரு: சீக்கிரம் நமக்கு நல்லதே நடக்கும் டா
வினோத்: நல்லதே நடக்காது….கண்டிப்பா நடக்காது
பாரு: ஒரு நல்ல வார்த்தை வருதாடா உனக்கு…! ஏண்டா எங்களுக்கு நல்லதே நடக்காது?
வினோத்: ம்ஹூம்….உங்கள இப்டி பண்ண எவனுக்கும் நல்லதே நடக்காதுன்னு சொல்ல வந்தேன்
பாரு: இத இந்த ஆர்டர்லயே சொல்லி இருக்கலாமேடா? ஆர்டர மாத்தி அற சொல்லா சொல்றியே…ஆமா வாட்டரு என்ன பண்றான்?
வினோத்: 3 க்ளாஸ் ஆரஞ்சு ஜூஸ், 2 ஆப்பிளு, ஜீனி கம்மியா ஒரு காப்பி, காலையில மீதி இருந்த ஒன்றை இட்லி சாப்ட்டு லஞ்சுக்கு அடுப்பு பக்கத்துலையே வெயிட் பண்ணிட்டு இருக்காப்ல.
பாரு: (மை.வா: இவன் கூடயா இவ்வளாவு நாள் சகவாசம் வச்சிருந்தோம்?) பாத்துடா பக்கத்துல போயிராத…வாட்டுன ஆடுக்கால்ன்னு நெனச்சு வாயில வச்சு உன்ன கடிச்சிரப் போறான்//
இப்ப எல்லாரையும் வெளிய உக்கார வச்சு யாரு பெஸ்ட்ன்னு கேக்க….ரம்யா வந்து கமரும், பாருவும் தான் பெஸ்ட்ன்னு சொல்ல, பாரு அங்க துள்ளிக் குதிக்க….”சும்மா ப்ராங்க் பண்ணேன்” சொல்லி மூடக் கெடுத்துச்சு. எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி விக்கல் & ப்ரவீன சொன்னாங்க. சோ கேப்டன்ஸி டாஸ்க்குல விக்கல், ப்ரவீன் & கனி. முடிஞ்சது.
அய்யய்யோ சனிக்கிழமை….!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


Series Navigation<< நாள்: 16

Author

Related posts

நாள்: 20

அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு

கொங்கு வட்டாரவழக்கு – 11: பொழையாக்குப்பா