நாள்: 25

“ஆலுமா டோலுமா” பாட்டோட அதிரடியா ஆரம்பிச்சது எபிசோட். அதுல “கெத்த விடாத”ன்னு பார்வதி தனியா பாடும்போது “அத மொத கத்த விடாத”ன்னு பிக்பாஸ் கிட்ட சொல்லனும்னு நமக்கு நம நமன்னு நாக்கு அரிச்சது.

நார்மல் ஹவுஸ் திங்குற பொருட்கள பாத்து கனி “என் பேரே காரக்குழம்பு கனி CWC செட்டுல நாந்தான் அண்ணப்பூரணி…ஆனா இந்த வீட்ல நான் நல்ல சாப்பாடு சாப்ட்டு மாசக்கணக்காகுது. இப்டியே எலும்பும் தோலுமா வெளிய போனா வீட்டுக்குள்ள சேப்பானுங்களான்னு தெரியல….நாய் கண்டாலும் விடாது”ன்னு பொலம்பிட்டு இருந்துச்சு.

வழக்கம் போல வாட்டரு கேமராவ கற்பழிக்கும் பெர்பார்மண்ஸ ஆரம்பிக்க பின்னாடி கமரு கொஞ்சம் சேட்ட பண்ணான். மறுபடியும் இதுக்கு வாட்டரு ரியாக்ட் பண்றேன்னு லூசுத்தனமா பேச,

பாரு: யோவ், கொஞ்சம் சும்மாதான் இரேன்…வார்த்தையெல்லாம் வாந்தி மாதிரி வருது

வாட்டரு: வெளிய நாம இருந்த இருப்புக்கு வாந்தியெல்லாம் ஒரு விஷயமா? சாக்கடை லெவெலுக்கு நம்ம கிட்ட சரக்கு இருக்கு பாக்குறியா?

பாரு: நீ என்னய மிஞ்சிருவ போல…! உன் வாய் வெத்தல பாக்கு போடப் போறது உறுதி தான் போல….//

இதெல்லாம் சரி, பாருவுக்கும் கமருதீனுக்கும் என்ன பிரச்சனை? இவனுங்க எப்போ எதுக்கு சண்ட போட்டானுங்க? திடீர்னு காதலுக்கு மரியாத விஜய்- ஷாலினி மாதிரி நாம பிரிஞ்சிடலாம்னு முடிவு பண்ண மாதிரி பேசுறானுங்க? ஏண்டா எடிட்டர் இது என்ன கதைன்னு சொல்ல வேணாமா? எத காமிக்கனுமோ அத காமிக்காம காட்டு கத்தல் கத்துறதெல்லாம் காமிங்கடா.

திடீர்னு இங்குட்டு திரும்புனா வாட்டரும், கமரும் வழக்கம் போல அடிச்சுக்க, அப்பறம் பாரு கமருவ பாக்க…கமரும் பாருவ பாக்க மாறி மாறி முறச்சு மானங்கெட்டத் தனமா பேசிக்கிட்டானுங்க. பின்ன மறுபடியும் வாட்டரும், கமருவும் மாறி மாறி கடிச்சுக்க, “நான் குடுத்த மீதி சாப்பாடெல்லாம் இப்பிடி வார்த்தையா விழுகுதே”ன்னு தன்னோட ரெண்டு தூண்களும் ஒண்ணுக்கொண்ணு கடிச்சுக்குறதப் பாத்த பாரு “ரெண்டு பேரும் எங்காயவது போயித் தொலைங்கடா”ன்னு வாட்டர் பாட்டில கொண்டி எறிய…அவனுங்க ஓடியிருப்பானுங்கன்னு தான நெனைக்கிறீங்க? இல்ல….பாருதான் ரூமுக்குள்ள போயி அழுதுச்சு.

அப்பறம் பாரு திவாகர் கிட்ட,

பாரு: நேத்து வரைக்கும் நேரா நின்னு பாத்து பேச பயப்படுவான் இன்னைக்கு எங்கிட்டயே நான் ஒரு சைக்கோ சையான்னு பாட்டு பாடுறான்.

வாட்டர்: நான் வேணும்னா அந்த பாட்டுக்கு பிரபாஸ் மாதிரி ரீல்ஸ் பண்ணவா?

பாரு: மதியத்துக்குள்ள உன்ன கொல பண்ணவா?

வாட்டர்: அவன் என்ன மாதிரி ஒரு  பார்ன் ஸ்டாரயே மதிக்க மாட்டேங்குறான்

பாரு: எதே பார்ன் ஸ்டாரா?

வாட்டர்: ஆமா பிறவி நடிகன்

பாரு: அது Born Star…! நீ சொல்றது சீன் பட நடிகர்.

வாட்டர்: நேத்து சட்டைய கழட்டுனத பாத்தேல்ல? எந்தப் படம்னாலும் நான் நடிப்பு அரக்கன்…

பாரு: இவன் கூட சகவாசம் வச்சுக்கிட்டதுக்கு என்னய நானே கழுத்த நெறிச்சுக்கனும்//

அடுத்து கல்லுளி மங்கன்னு ஒரு டாஸ்க். அத்தான் – செத்தான்னு சாப்பிடும் பொருளும், சாப்பிட சகிக்காத பொருளும் வரும். அதுல அவனுங்க சாப்புடுற எக்ஸ்பிரஷன வச்சு அது அத்தானா இல்ல செத்தானான்னு சொல்லனும். இதுக்கு ப்ளேயர்ஸ செலெக்ட் பண்ற பிரச்சனையில வாட்டரு “சூப்பர் டீலக்ஸ்ல நீதி செத்துப்போச்சு, நியாயம் பொத்துப்போச்சு…என்னய சேத்துக்க மாட்டேங்குறானுங்க, ஒரு நல்ல ப்ளேயர்னு ஏத்துக்க மாட்டேங்குறானுங்க…சாப்பாடு விஷயத்துல கூட சீட் பண்றானுங்க”ன்னு சொல்ல..சபரி பொங்கிட்டான். “சொல்லனுமேன்னு எதயாச்சும் சொல்லக் கூடாது. பக்கத்து செட்டு சாப்பாட கூட சேர்த்து சாப்டுற ஆளு நீ…ப்ரொடக்ஷன்ல காக்கைக்கு சொவத்து மேல வச்ச மொத உருண்டை சோத்தை கூட நீ களவாண்டது கேமரால இருக்கு. ஓடிரு”ன்னு சொல்ல அடங்குனாப்ல.

சண்ட போட்டு டாஸ்க் பண்றேன்னு போயிட்டு வெற்றிகரமா தோத்துட்டு வந்தாப்ல வாட்டர். டாஸ்க்குல நார்மல் ஹவுஸ் ஜெயிச்சானுங்க.

கமரு: நடிப்பு அரக்கன்னு சொல்றான்…ஆனா அரக்கிறுக்கன் மாதிரிதான் பண்றான்

பாரு: யோவ், உன்னயத்தான் சொல்றான்

வாட்டரு: அதான் நான் கண்டுக்காத மாதிரி போறேன்ல…பேசாம இரு

பாரு: அவன் என்ன சொல்ல வர்றான்னா…

வாட்டரு: வேணாம் அவனாச்சும் சிம்பிளா சொல்லுவான்….ஆனா நீ ரணகளமா பேசி, உசுப்பேத்தி என்ன அழ வப்ப…!//

நார்மல் ஹவுஸ் எடுத்தது முழுக்க அவனுங்களுக்கான பொருட்கள் தான்.

இப்போ யார்ரா அந்தப் பையன்?ன்னு ஒரு ஆக்டிவிட்டி. ஒவ்வொரு ஆளா கண்ணாடி சட்டில இருக்குற சீட்ட எடுத்து படிக்கனும்.

என்ன ஆனாலும் அரோகரான்னு இருக்குற அரோரா மொத ஆளா வந்து எடுத்ததப் பாத்த பிக்கி “திரையரங்கம் செதறனும்” பாட்டு மட்டும்தான் பாடல…புகழ்ந்து தள்ளிட்டாப்ல.

அரோரா: எங்க சண்ட நடந்தாலும் காக்கா மாதிரி கூடுற ஆட்கள்? – வாட்டரு, பாரு & கலை

கலை: உன் நல்லதுக்கு சொல்றேன்னு முன்னால சொல்லிட்டு பின்னாடி பேசுற விஷ பாட்டிலு? – வினோத்

வினோத்து: அத்தான், செத்தான் யாரு? – கனி & கலை

கமரு: மேல் மாடி காலி யாருக்கு? – பாரு & வாட்டரு

வாட்டரு: முகத்துக்கு முன்னாடி சிரிச்சிட்டு பின்னாடி பிசுனாரித்தனம் பண்றது யாரு? – வினோத் & ப்ரவீன்

கனி: வேலை செய்யுற மாதிரி பாவலா யாரு பண்றா? – வாட்டரு & பாரு

கெமி: நடிப்பு அரக்கனுகே டஃப்பு குடுக்குறது யாரு? – பாரு & வியான்னா

விக்கல்: பேமன்டே வேணாம்…பஸ் சார்ஜ் போதும்ன்ற ஆளு யாரு?

இந்த கேள்விக்கு பாசிட்டிவா விக்கல்ஸ் பதில் சொல்ல முயற்சிக்க…”நீ இந்த வேலைக்கு சரி பட்டு வர மாட்ட கிளம்பு”ன்னு கிளாப்பி விட்டதும் அத FJ பதில் சொல்ல எடுத்து – வாட்டரு, கலை, துஷார சொன்னான்.

மறுபடி FJ அவனோட சீட்ட எடுத்து படிச்சான். ஆனா படிக்க விடாம வாட்டரு அட்டிராசிட்டி பண்ணிட்டு இருந்தாப்ல. இன்னைக்கு பாரு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருந்ததப் பாத்துட்டு வாட்டரு ஃபுல்பார்ம்ல பாருவுக்கும் சேர்த்து பெர்பார்ம் பண்ணிட்டு இருந்தாப்ல. பின்ன ரம்யா வந்து சொன்னப்பயும் இதே வாட்டரோட பஞ்சாயத்து. பாருவும் சேந்துக்கிச்சு. நமக்கு காது கிழிஞ்சதுதான் மிச்சம். கடைசியா வியான்னா வந்து ஜெயிக்கிற குதிர மேல சவாரி பண்றது கனி, சபரி, FJ அவங்களுக்குள்ள விளையாடிக்கிறானுங்கன்னு சொல்ல “இன்னைக்கு தான் நீ உனக்கே புரியுற மாதிரி பேசியிருக்கன்னு பிக்கி பாராட்டுனாப்ல. குரூப்பிஸத்தின் முகத்திரையைக் கிழிக்க வந்த மாடர்ன் ஜான்ஸி ராணியேன்னு பாருவும், வாட்டரும் கோட்டர் அடிச்ச குரங்கு போல குதிச்சிட்டு இருந்துச்சுங்க. முடிஞ்சது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Series Navigation<< நாள்: 24நாள்: 26 >>

Author

Related posts

நாள்: 27

நாள்: 26

வறுமையும் விழாக் காலத் தனிமையும்