நாள்: 25 தொடர்ச்சி & 26ம் நாள்
25ம் நாள் நைட்டு…
அய்யப்பனும் கோஷியும்
வாட்டரு: பாராசூட் மாதிரி பெருசா இருந்தாலும் பந்து அளவுக்குக் கூட உனக்கு தைரியமில்லையே விக்கலு…ஏன் பயப்படுற அண்ணனத் தவிர எல்லாருமே வேஸ்ட்டுன்னு சொல்ல வேண்டியதுதான?
விக்கல்: நக்கலு…! பாத்தியா உன் ஓவர் கான்பிடென்ஸ் ஒன்னய எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்குன்னு! இன்னும் நீ பிக் பாஸ மட்டுந்தான் ஒரண்டை இழுக்கல
வாட்டரு: இருந்தாலும் நீ பயப்படுறத பாத்தா எனக்கு பாவமா இருக்கு…பர்பார்மென்ஸ்ல தான் நீ என்னய விட டம்மின்னு பாத்தா…வீரத்துல என் விரலுக்கு வர மாட்ட போலயே
விக்கல்: இன்னொரு தடவ பயப்படாதன்னு எங்கிட்ட சொல்லாத…அப்பறம் பயப்படாம உன்ன கொன்னுடுவேன்.
வாட்டரு: அப்டில்லாம் செய்யக் கூடாது…வேணும்னா வீரம்னா என்னன்னு தெரியுமா கமல் சார் டயலாக்க ரெண்டு பேருல யாரு நல்லா நடிச்சு காமிக்குறான்னு பாக்கலாமா? அந்த கேமராவுக்கு போகலாமா?
விக்கல்: ஒரு நாள் உன்னய கேமரா இல்லாத இடமா கூட்டிட்டுப் போயி கும்மி எடுக்கப் போறேன்…அப்பறம் இருக்கு//
இதுல ஓட்டிங்க்ல உன்னய தோக்கடிச்சுருவேன்னு போனாப்ல. ஆனாலும் நம்ம வாட்டருக்கு ஓவர் கான்பிடன்ஸ் ரொம்பவே ஓவராத்தான் இருக்கு.
இதயக்கனி
கனி: பாரு வாழக்கையில வேலைன்னு பேப்பர்ல கூட எழுதி பாத்தது இல்ல போல…இந்த வீட்ல இருக்குறது ரெண்டே ரெண்டு டீம் தான் . ஆனா எந்த டீம்ல இருந்தாலும் வேலைன்னு வந்துட்டா நொள்ளக்காரன் மாதிரி நொள்ள சொல்லிட்டு தான் இருக்கா…வேலைய மட்டும் பாக்குறதே இல்ல
கெமி: அவள கமருதீன் இல்லேன்னா வாட்டரு இல்லாம நான் பாத்ததே இல்ல.
கனி: பேரு மட்டும் பாரு…ஆனா மத்தவங்க மேல அள்ளி எறியுறது பூராம் சேறு//
ஆவேஷம்
ரம்யா: எனக்கு சாப்ட்டு தூங்குறது யாருன்னு கேட்டப்போ உன் பேர சொல்ல விருப்பமே இல்ல…ஆனா ஊரே உன் பேர எதுக்கெடுத்தாலும் சொல்றப்போ நாமளும் சொல்லுவோமேன்னு தான் சொன்னேன்
பாரு: அடி பாதகத்தி…! பாக்க ரவுடி மாதிரி இருக்க…ஆனா லைட்டா பயம் கண்ணுல தெரியுதே
ரம்யா: ஆனா வாயில தெரியாது…! பேட் வேர்ட்ஸ் பேசுறதுல நான் PHD வாங்குன ஆளு…! இன்னும் நான் உன்னயெல்லாம் வண்ட வண்டயா கேக்காம இருக்குறது எனக்கே ஆச்சர்யம்…//
26ம் நாள்
ரகிட ரகிட பாட்டுக்கு ஏதோ செஞ்சானுங்க.
சங்கீத ஸ்வரங்கள்
கதை சொல்ல வாங்கடான்னு கூப்ட்டது ஒரு குத்தமாடா…? FJ ரெண்டு மணி நேரம் கத சொன்னான். சபரியும் ஈக்குவலா உளறுனான். கடசியில நல்லா கத சொன்ன ஆளு, போரிங்கா கத சொன்னது, யாரு இத சரியா யூஸ் பண்ணிகலன்னு ட்விஸ்ட் பண்ணி கேட்டு கடைசியா நல்லா கத சொன்னதுல கலை & கனி செலக்ட் ஆனாங்க. ரெண்டு பேருக்கும் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடச்சது. பாருவுக்கோ பத்திட்டு எரிஞ்சது.
அக்னி பறவை
வாட்டர்: என்ன பாரு? தம்மடிக்காமயே உன் வாயில இருந்து புகை வருது?
கலை: அது ஒண்ணுமில்ல அக்கா வயித்துக்குள்ள வல்கனோ தொறந்துக்குச்சு
பாரு: நானும் சுத்தி சுத்தி எட்டெல்லாம் போட்டு காமிக்கிறேன்…ஒரு பயலும் பாஸ் குடுக்க மாட்டேங்குறான். ஒரு வேள சோத்தப் பொங்கிப் போட்டு அசால்ட்டா பாஸ் வாங்கிக்கிறா? எப்டிதான் முடியுதோ…
வாட்டர்: இப்ப காதுலயும் வருதே புகை?
கலை: குனிஞ்சு பாரு அவ காலுல கூட வருது…//
லாக்கர் டாஸ்க் முடிஞ்சது…! எல்லாரும் உள்ள போயி எல்லா பொருட்களையும் எடுத்துட்டானுங்க.
இது சத்தியம்
மனச தொட்டு சொல்லுங்கடா திங்குற சோத்துக்கு ஒழுங்கா விளையாடாம இருக்குறது யாரு? ஒழுங்கா ஒரு பக்கமா வந்து உக்காருங்கன்னு சொன்னதும்
சபரி, கனி, ரம்யா, சுபி, கலை, FJ, வியான்னா, வாட்டரு இவங்கள்லாம் வந்தாங்க. இப்ப அவனுங்க கிட்ட இன்னும் உங்க பக்கம் வர வேண்டிய ஆளு யாருன்னு கேட்டதுக்கு ப்ரவீன், துஷார், அரோரா, கமருவ சொல்லி கூட சேந்து உக்காந்துக்கிட்டாய்ங்க.
பாவம் பிக்கி. இன்னும் இவனுங்க காலுலதான் விழுகல. இதுக்கும் மேல ஷோவ ஒழுங்கா கொண்டு போகலேன்னா அப்டியே பின் கதவு வழியா வெளிய அனுப்பிருவேன்னு அழுதுட்டாப்ல. பாவம்.
அஞ்சாதே
இன்னைக்கு விசே வருவாரு!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^