நாள்: 29

நாள்: 28 தொடர்ச்சி & 29

நைட்டு வாட்டரு, சுபி, விக்கல்ஸ் மூணு பேரையும் வெளிய படுக்க சொல்லிட்டானுங்க. கேமராவப் பாத்து “மக்களே உங்க நடிப்பு அரக்கன, வாசல்ல படுக்க வச்சு வாழ்க்கைய கெடுக்குறானுங்க”ன்னு வாட்டரு கதற, “படுக்குற நேரத்துல இந்தப் பரதேசி மூஞ்சியப் பாத்தா ஆகுமா”ன்னு கேமரா அந்தப் பக்கமா திரும்பிக்கிச்சு. “இந்த கொசுவுக்கும், உனக்கும் ஒரே ஒரு வித்யாசம்தான்….கொசு கடிச்சு இம்சை பண்ணும்…நீ நடிச்சு இம்சை பண்ணுவ. தள்ளிப் படுயா”ன்னு விக்கல்ஸ் தள்ளி விட்டான்.

சத்தமில்லாம ப்ரஜின் பாருவ போட்டுவிட்ட பஞ்சாயத்து ஓடிட்டு இருந்துச்சு

“ரெமோ பாரு”

பாரு: ஏண்டா கமரு என்கிட்ட மூஞ்சிய காமிக்குற?

கமரு: நீ பாத்த வேலைக்கு உன் மூஞ்சிக்கு முன்னாடி என் முட்டிய தான் காமிக்கனும்…

பாரு: கோவமா இருக்கியா? கனிய டீ போட சொல்லவா?

கமரு: சரி…இருந்து இருந்து வாட்டரு கிட்ட நம்ம மேட்டர எதுக்கு சொன்ன?

பாரு: எல்லாம் அந்த அரக்கிறுக்கனால வந்தது. தொட தொட மலர்ந்ததென்னன்னு பாட ஆரம்பிச்சேன்…தொட்டவனை மறந்ததென்னன்னு ரெண்டாவது வரிய எடுத்துக் குடுத்தான். உடனே நான் அதெல்லாம் மறக்கல கமருதீன் தான் தொட்டான்னு ஒரு ஃப்ளோவுல சொல்லிட்டேன். அத இந்த கூறுகெட்ட கேமரா வெளிய காமிச்சிருச்சு போல…சாரி டா…! இந்த பாருவ பாரு…

கமரு: உன் சங்காத்தமே வேணாம்….ஆள விடு….என்ன வாழ விடு//

29 வது நாள்

கமலா கலாசா பாட்டப் போட்டானுங்க.

ஊர் பிடாரிய  ஓண்ட வந்த பிடாரி கெடுத்த கதையா வாட்டரு கூட சேர்ந்து அமித்து ரீல்ஸ் பண்ணாப்ல. கர்ணன் ரீல்ஸ். இன்னும் வாட்டர எத்தனை நாளைக்கு தாங்கிக்கனும்னு தெரியல.

பாரு சும்மா இல்லாம திவ்யாவ & சாண்டிராவ கூப்ட்டு

“அம்பி பாரு”

பாரு: ஆமா வெளிய இந்த பாருவுக்கு பேரு எப்டி?”

திவ்யா: அதெல்லாம் நாறிப்போயி தான் இருக்கு…இந்த நான் ஸ்டாப் விஷயம் மாறிப்போகனும்னா இந்த விஷயத்துக்கு ஒரு ஃபுல்ஸ்டாப்ப வை…வீட்ல அம்மா பாத்தா என்ன நெனைப்பாங்க”

பாரு: அய்யோ அம்மாவா…அம்மா பாத்தா எவ்ளோ கஷ்டம். அதுவும் கமரு கூட.

சாண்டிரா: வேற யார் கூடயும்னா சரியாமா? அட ஏம்மா…பேசுறத கொஞ்சம் பாத்து பேசு.

பாரு: அச்சோ…இந்த லோகத்துல நேர்மை இல்ல, சத்தியம் இல்ல, யாரும் ஒழுங்கா இல்ல

திவ்யா: (மை.வா: இவளோட பெரிய தொல்ல) இங்க பாரு யாரு கூட கூட்டு சேந்தாலும் சரி…வீட்ல அம்மா பாத்தா என்ன நெனைப்பாங்க?

பாரு: பகவானே! அம்மா என் அம்மா…நீ பாத்தா நான் என்னாவேன் அம்மா//

மேக்கப் போட்டுட்டு இருந்த பாருவ நோக்கி திவ்யா வந்தாங்க…

“அன்னியன் பாரு”

திவ்யா: என்ன பாரு கொட்டிக்கலயா? நெனச்சத நடந்து கவலப்படுறியா?

பாரு: ஆமா நீ எங்கூட பேசுறப்போ எங்க அம்மாவ பத்தி எதும் சொன்னியா?

திவ்யா: உன்ன பத்தி உங்க அம்மா என்ன நெனப்பாங்கன்னு கேட்டேன்

பாரு: என்ன நெனப்பாங்க?

திவ்யா: அத உங்க அம்மாகிட்டதான கேக்கனும்?

பாரு: எதே எங்க அம்மா கிட்ட கேப்பியா? உங்கிட்ட எதயாச்சும் கேட்டா என்ன மதிச்சு பதில் சொல்ல கத்துக்கோ…உன் இஷ்டத்துக்கு வெளிய இப்டி சொல்றானுங்க, அப்டி சொல்றானுங்கன்னு சொல்லாத…!

திவ்யா: அடியே நீ கேட்டதாலதான சொன்னேன்…

பாரு: ஒரு பொண்ணு சத்தமா பேசுனா காது வலிக்குமா?

திவ்யா: இல்லயே

பாரு: ஒரே பொண்ணு 5 பேர் கத்துற அளவுக்கு கத்துனா?

திவ்யா: லைட்டா வலிக்கும்

பாரு: ஒரே பொண்ணு 5 பேர் கத்துற அளவுக்கு 5 தெரு கேக்குற மாதிரி கத்துனா?

திவ்யா: காது கிழியும்

பாரு: அதத்தான் நான் இங்க செஞ்சுட்டு இருக்கேன்.//

திவ்யாவுக்கு முக்கிருச்சு. அந்தப் பக்கமா போயி சாண்டிரா & ப்ரஜின் கிட்ட

திவ்யா: இவ சரியான சைக்கோ இல்ல…சரியாகாத சைக்கோ.

சாண்டிரா: இவள சரியா கவனிச்சியா? நாம பேசுறதுக்கு ஒடனே ரியாக்ட் பண்றது இல்ல…மறுபடியும் மண்டைக்குள்ள ரிப்பீட் போட்டு அதுல இருந்து பாயிண்ட் எடுத்துட்டு வரா

ப்ரஜின்: போகப் போக எதெயெல்லாம் எடுத்துட்டு வருவாளோ தெரியல…எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க//

இந்த வியான்னா வாயே பேச மாட்டேங்குதுன்னு சொன்னதுக்கு…இப்பல்லாம் வாய மூடவே மாட்டேங்குது. எதப் பத்தியாவது, எவங்கிட்டயாவது பேசிட்டே தான் இருக்கு. புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு மொளைக்கும்னு யாரு கண்டா…எல்லாம் இந்த பிக்கிய சொல்லனும்.

புதுசா வந்த நாலு பேருல ஒருத்தர கேப்ட்டன செலெக்ட் பண்ணூங்கன்னு சொல்ல, டாஸ்க்குல திவ்யா ஜெய்ச்சாங்க.

பதவி ஏத்துட்டு “இனி கத்திப் பேசாதீங்க…முடிஞ்சா பேசவே பேசாதீங்க, பாடி ஷேமிங்க் பண்ணாதீங்க, குறுக்க குறுக்க புகுறாதீங்க”ன்னு சொல்லிட்டு இருக்கும் போதே. “அதுக்குன்னு வாயில விரல வச்சுட்டு ஸ்கூல் புள்ளைங்க மாதிரியா இருக்க முடியும்?”னு வியன்னா கேக்க, “குறுக்க பேசாதன்னு சொல்லி வாய மூடல, வாய மூடிட்டா உக்கார முடியும்னு தூக்கிட்டு வர”ன்னு வாய மூட வச்சுச்சு. அங்க இங்கன்னு சில கரச்சல்கள் பண்ணானுங்க.

இனி பிக்கி வீட்டுக்குள்ள ரெண்டு ஹவுஸ் கிடையாது, சலுகைகளும் கிடையாது.

நாமினேஷன். ஓப்பனா நடந்தது. வழக்கம் போல பாருவுக்கும், வாட்டருக்கும் அதிக குத்து.

வினோத், ப்ரவீன், கமருதீன், ரம்யா, FJ, சபரி, வியான்னா, கெமி, விக்ரம், துஷார், பாரு & திவாகர்.

இன்னும் இந்த வாட்டரும் பாருவும் எப்ப நாமினேஷனுக்கு வந்தாலும் எங்கள ஏன் நாமினேஷன் பண்ணீங்கன்னு சண்ட போடுறானுங்க. இதுல அரோரா தப்பிச்சது நமக்கே கொஞ்சம் வருத்தந்தான்.

அடுத்து உள்ள வந்த நாலு பேர வச்சுட்டு “உனக்கு வந்தா ரத்தம்…எனக்கு வந்தா தக்காளி சட்னி”ன்னு சொல்லனும். மொத்தமா எல்லாரும் வந்தவனுங்க மேல வன்மத்த கக்குனானுங்க. குறிப்பா வாட்டரும், பாருவும் திவ்யா மேல வன்மயாயணமே வாசிச்சானுங்க. மடியில பூனைய கட்டிட்டு சகுனம் பாக்குற மாதிரி….பாருவயும், வாட்டரையும் வீட்டுக்குள்ள வச்சிக்கிட்டு இந்த வீடு சண்டையில்லாத பூமியா மாறும்னு நெனச்சுட்டிருக்குற அந்த மனசு தான் சார் முட்டா புண்ணாக்கு! முடிஞ்சது!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Series Navigation<< நாள்: 27

Author

Related posts

நாள்: 28

நாள்: 27

நாள்: 26