நாள்: 31

நாள்: 30 தொடர்ச்சி & 31

அப்போ ஒரு மனசா இந்த சீசன ஒண்ணத்துக்கும் ஆகாத சீசன்னு அறிவிச்சிரலாமா?

பாத்தாலும் பாத்ததேன் ஆத்தாடி ஆத்தா இப்பிடி ஒரு மொக்க சீசன நான் பாத்தது இல்ல. பிக்கி டீமே ஒரு மாதிரி குழப்பத்துலதான் இருக்கானுங்க போல. குடுக்குற டாஸ்க்குல இருந்து, அதுக்கு செலெக்ட் பண்ற ஆளு வரைக்கும் எல்லாமே சொதப்பலா இருக்கு.

உள்ள வந்த ஆளுகளுக்கு அடுத்த நாளே எவனாச்சும் கேப்டன் பதவிய குடுப்பானா? ஆல்ரெடி இவனுங்க புதுசா வந்தவனுங்க மேல அவர்ஷன்லதான் இருப்பானுங்க. அப்றம் எப்டி கோ-ஆப்பரேட் பண்ணுவானுங்க. சரி, உடனே டாஸ்க் ஒண்ணு குடுத்து அதுக்கு மேனஜரா புதுசா வந்த ஆளயே போடுவானுங்களா? அதுவும் அசிஸ்டென்டா பாருவ, அது மேனஜரையே போட்டு பாக்கும். அதுபோக புதுசா உள்ள 3 பேர அனுப்பிட்டு அடுத்த நாளே இன்னும் 3 பேர உள்ள அனுப்புனா…இது என்ன பிக்பாஸ் வீடா? இல்ல பண்டார செட்டி மடமா?

ஆல்ரெடி உள்ள இருக்குறவனுங்கள ஒழுங்கா விளையாட வைக்க முடியாம இவனுங்க படுற சிரமம் நமக்கு துயரமா வந்து விழுகுது. இதுல இவிங்க வேற.

30ம் நாள் நைட்டு

என்னடா பொழுது போயிருச்சே பாருவும், வாட்டரும் யார்கிட்டயும் எந்த பஞ்சாயத்தும் இழுக்காம இருக்கானுங்களேன்னு நெனச்சுட்டு இருக்கும்போதே வாட்டரு ஆரம்பிச்சுட்டாப்ல.

வாட்டரு: என்ன மாதிரி ஒரு நடிகன பாத்தது இல்லேன்னு பாராமவுண்ட் பிக்சர்ஸ்ல இருந்து மெயில் வந்திருக்கு

வியான்னா: இப்டியே உளறிட்டு இருந்தேன்னா உன்ன ஜெயில்ல பிடிச்சுப் போடதான் மெயில் வரும்

வாட்டரு: நான் உன்னதமான நடிகன்னு தெரியாம நானா என்னய நடிகன்னு நம்பிட்டு இருக்குறதா சில பயித்தியங்கள் சொல்லுது

ப்ரஜின்: அத ஒரு பயித்தியமே சொல்லுது. தம்பி புறம் பேசுற பழக்கம் வச்சுக்கிட்டா உன் கரம் இழக்க வேண்டி வரும் பாத்துக்கோ

வாட்டரு: ஏங்க…நான் இங்க பேசிட்டு இருக்கேங்க உங்களுக்கென்ன?

ப்ரஜின்: என்னயப் பத்தி பேசுனா நாந்தாண்டா கேக்கனும்

வாட்டரு: பேசுனா எல்லாருக்கும் தான் கேக்கும். வியான்னாவுக்கு கூடதான் கேட்டுச்சு

திவ்யா: டேய்…நீங்க கத்திப் பேசுறது கெஸ்ட்டுக்கு கேக்குது. செத்த சும்மா இருங்க இல்ல வெளிய போயி பேசுங்க

வாட்டரு: வெளிய போயி பேசுனா யாருக்கும் கேக்காதே

திவ்யா: நாங்க யாரு சொன்னாலும் கூடதான் நீ கேக்க மாட்டேங்குற…அதுக்கு என்ன பண்றது?

பாரு: எங்க அண்ணன் பேசுனா நான் கேப்பேன்

ப்ரஜின்: எப்டி அசிங்க அசிங்கமாவா?

திவ்யா: இந்தா வந்துட்டா…சண்ட போடுறதயே சாஸ்திர சம்பிரதாயமா வச்சிருக்கா…ஒரு நாள் ஒரு பொழுது இவளால இந்த வீடு நிம்மதியா இருக்க முடியுதா?

பாரு: நிம்மதி…தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த//

இதுல FJ-வ வேற போற போக்குல வம்பிழுத்துட்டுப் போனாப்ல வாட்டரு.

திவ்யா கூட வியான்னா, சுபி உக்காந்து பேசிட்டு இருந்தாங்க.

திவ்யா: ஏம்மா…வெளிய ப்ரொமோ கட்ல எல்லாத்துலையும் பாருதான் இருக்கா…அவளத் தவிர யாரும் வெளிய தெரியல

வியான்னா: அப்ப போன வாரம் நான் போட்டுருந்த பீச் கலர் டாப்ஸ யாரும் பாத்திருக்க மாட்டாங்களா?

திவ்யா: அதுக்கு உன்னய மொத பாத்திருக்கனுமே! உன்னயெல்லாம் விசே வரப்போ பாக்குறதோட சரி

சுபி: நான் பீட் பாக்ஸ் பண்ணது?

திவ்யா: நீயா? நீயெல்லாம் இருக்கேன்னே எனக்கு உள்ள வந்துதான் தெரியும். ஆமா யாருமே பாருகிட்ட கேக்க மாட்டீங்களா?

சுபி: கேட்டோமே

திவ்யா: என்னன்னு?

வியான்னா: வாட் இஸ் த ப்ரொசியூஜர் டூ சேஞ்ச் த வீடுன்னு //

31ம் நாள்

விடிஞ்சதும் நான் ரெடிதான் வரவான்னு பாட்டு. இந்த லூசு பிக்கி புதுசா திரும்ப யாரயாச்சும் அனுப்பிருவாப்லயோன்னு அள்ளு விட்டுருச்சு. பொதுவா விடியும் போது சூரியன் வரும்…இந்த வீட்ல விடியும் போது பஞ்சாயத்து தான் வருது.

கெஸ்ட் 3 பேரும் திவ்யாவ கூப்ட்டு “ஒருத்தனும் ஒரு வேலையும் பாக்குற மாதிரி தெரியல”ன்னு சொல்ல, வெளிய வந்த திவ்யா எல்லாரையும் கத்த, எல்லாரும் யூனிபார்ம மாட்டிட்டு ரெடியானானுங்க.

பிரியங்கா செக் அவுட் பண்ணாங்க. இப்போ பிக்கி கூப்ட்டு டீம் மீட்டிங் போட சொன்னாரு. இந்தம்மாவும் போட்டுச்சு. பிக்கி வந்து “ஒருத்தனும் ஒண்ணும் கழட்டுன மாதிரி தெரியல. அதனால மேனேஜர மாத்திப் பாப்போம்…திவ்யா, பாரு யார மாத்தலாம்?”னு கேக்க…எல்லாரும் ஒரு மனசா திவ்யாவ சொல்லிட்டானுங்க. திவ்யா பதவி இறக்கம் செய்யப்பட்டு விக்கல்ஸ் புது மேனஜரா பதவி ஏத்தாப்ல.

திவ்யா & சாண்டிரா

திவ்யா: எப்டி ட்ரிக்ஸா என்னய தூக்குனானுங்க பாத்தியா? பாரு கூட தப்பிச்சுட்டா

சாண்டி: பாருகிட்ட இருந்து நீ தப்பிச்சுட்டன்னு சொல்லு

திவ்யா: அதுவும் சரிதான்…இவனுங்க எப்டியும் புதுசா வந்த நம்மளதான் தூக்க நெனப்பானுங்க…அதுலயெல்லாம் நல்லா ஒற்றுமையாதான் இருக்கானுங்க. நம்ம 3 பேரும் தான் இவனுங்க டார்கெட்டு

சாண்டி: 3-ஆ? நாம நாலு பேருல?

திவ்யா: அமித்த சொல்றியா? அங்க பாரு அவன…ஆல்ரெடி 100 நாள் இவனுங்க கூட இந்த வீட்ல இருந்த மாதிரி கேசுவலா திரியுறான். நேத்து நைட்டு கூட வாட்டரு கிட்ட மச்சான் புதுசா வந்த 3 பேர தூக்கனும்னு சொல்லிட்டு இருக்கான்//

இருக்குற கரச்சல் பத்தாதுன்னு பிக்கி சாண்டிய கூப்ட்டு “உனக்கு ஒரு சீக்ரெட் டாஸ்க் தரேன். எவன் கூடயாச்சும் கூட்டு சேர்ந்து யாரவது ஒரு ஆள பதவி மாற்றமோ, ராஜினாமா பண்ணவோ இல்ல பதவி நீக்கம் செய்ய வைக்கனும். அப்டி செஞ்சா ரெண்டு பேருக்கும் நாமிநேஷன் ஃப்ரீ பாஸும், யாரயாச்சும் சேவ் பண்ற பாஸும் கிடைக்கும். பண்ணலன்னா நாமிநேஷனுக்கு டைரக்டா போயிடுவ”ன்னு சொல்லி அனுப்ப…அது நேரா கணவர் ப்ரஜின் கிட்ட வந்துச்சு…

சாண்டி: ப்ரஜின், பிக்கி என்னய தனியா கூப்ட்டாப்ல

ப்ரஜின்: அடிங்க…இரு அவன பேத்துட்டு வரேன்

சாண்டி: டேய்…கூப்ட்டு சீக்ரெட் டாஸ்க் குடுத்தாருடா…அது என்னன்னா

ப்ரஜின்: சீக்ரெட்டுன்னு சொல்லிட்டு எங்கிட்ட சொல்ற?

சாண்டி: சீக்ரெட்டாதான சொல்லப் போறேன்

ப்ரஜின்: சீக்ரெட்ட சீக்ரெட்டா சொன்னாலும் அது சீக்ரெட் இல்லாம போயிரும்ல?

சாண்டி: ஆமாண்டா…ஆனா நான் இத உனக்கு சொல்லலாம்

ப்ரஜின்: சீக்ரெட்ட யார்கிட்ட சொன்னாலும் அது அப்பறம் சீக்ரெட்டா இருக்காது. வேணும்னா நீ சீக்ரெட் சொல்றப்போ நான் காத மூடிக்கிறேன். சோ அது சீக்ரெட்டாவே இருக்கும்…

சாண்டி: ஆனா உன்னய கட்டுனதுக்கு ஒரு குடிசைய கட்டி இருந்தா கூட நிம்மதியா வாழ்ந்திருக்கலாம்…காத குடுடா கிறுக்குப் பயலே…//

சாண்டி அவங்கிட்ட டாஸ்க்க பத்தி சொல்லுச்சு. அவனும் என்னமோ பெருசா புரிஞ்ச மாதிரி போனான்.

இப்ப பிக்கி வீட்ல லைவ் கவுண்டர் ஓப்பன் ஆகுமாம். அதுல கெஸ்ட்ட என்டெர்டெயின்மென்ட் பண்ணி கவனிக்கனுமாம். சபரி வீட்ல உள்ள மத்தவங்கள மாதிரி செஞ்சு காமிச்சான். முடிஞ்சது. இந்த வாரம் இப்டியேதான் போகப் போகுது காய்ச்ச்ச்….!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Series Navigation<< நாள்: 30நாள்: 32 >>

Author

Related posts

அனைவரும் சமம்

தம்பி சீனிவாசனின் எழுத்துகளைத் தேடி..

ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்