நாள்: 33

நாள்: 33

இதெல்லாம் எப்டி ஒரு எபிஸோட் கணக்கா வரும்? மூணு ப்ரொமோவ ஒண்ணா சேத்த மாதிரியான ஒரு எபிஸோட். கைய விட்டு துழாவுனா கூட கால் ஸ்பூன் கண்டெண்ட் கிடையாது.

உள்ள எதுக்கு வந்தோம்னே தெரியாம வந்த தீபக், ப்ரியங்கா & மஞ்சரிய வெளிய தள்ளி கதவ சாத்துனானுங்க.

பெஸ்ட் பர்பார்மர் யாருன்னு சொல்ல சொன்னானுங்க. எதிர்பாராத விதமா பாருவே வியந்து போற அளவுக்கு அதிக வோட்டு விழுந்து இந்த வாரத்தோட பெஸ்ட் பர்பார்மரா அறிவிச்சானுங்க.

ஸ்டார் வாங்குன சபரி, ப்ரவீன் அப்பறம் பாரு & திவ்யா தலைவர் போட்டிக்கு போராடுவாங்கன்னு அறிவிப்பு.

பாருவால க்ரூப்பீஸம் க்ரூப்னு சொன்ன ஆளுங்க கூட பாருவுக்கு ஓட்டு போட்டாங்க. பிக்கி கூட பாருகிட்ட “க்ரூப்பீஸம் ஆளுங்க ஓட்டு போட்டு தான் நீ ஜெயிச்சன்னு சொன்னாப்ல. பாருவும் எல்லாருக்கும் நன்றி & சாரி பூரி கக்கூஸ் லாரின்னு சொல்லிட்டு உக்காந்தாங்க.

ஒர்ஸ்ட் பர்பார்மர்ல FJ-வும், சாண்டியும். ஜெயிலுக்கு போகனும்.

பெஸ்ட் பர்பார்மர்ல ப்ரஜின் பேர சொன்ன பாரு என்ன நெனச்சாங்களோ தெரியல திடீர்னு முன்ன வந்து “ப்ரஜின் மேல கைய போட்டதுக்கு என் கைய தட்டி விட்டதுல என் கையும், மனசும் ஹர்ட் ஆயிடுச்சு”ன்னு சொன்னாங்க.

அதுக்கு பதிலா ப்ரஜின் “என் மேல கையப் போடுறது எனக்கு பிடிக்காது. அதும் பாரு மாதிரி கண்டென்ட் தேடுற ஆளுங்க என் மேல கையப் போட்டா சுத்தமா பிடிக்காது. அதனால என் மேல கையப் போட வேணாம்”னு சொல்ல, பாருவோ “அண்ணனா நெனச்சு போட்டேன் கைய”ன்னு சொல்ல, ப்ரஜின் மண்டி போட்டு…”எனக்கு இங்க இருக்குற ஒரே ஒரு பொண்டாட்டி போதும், அக்கா, தங்கை யாரும் வேணாம்”னு சொல்லிட்டாப்ல.

FJ-வும், சாண்டியும். ஜெயிலுக்கு போனாங்க.

வியான்னா, சுபி & பாரு பேசிட்டு இருந்தாங்க.

வியான்னா: ஆமா எதுக்கு ப்ரஜின் மேல கையப் போட்ட?

பாரு: அண்ணனா நெனச்சு போட்டேன்

வியான்னா: சாண்டி கிட்ட போயி உன் புருஷன நான் சைட் அடிக்கிறேன்னு சொன்னியாமே? அப்டி ஏன் சொன்ன அண்ணனா நெனச்சா?

பாரு: அது வந்து…வந்து…! இது என்னோட கேரக்டர அஸாஸினேட் பண்ற மாதிரி இருக்குல்ல?

சுபி: ஆமா ஆமா…! அது சரி, நீ ஒரு வாட்டி எங்கிட்ட இங்க எனக்கு அக்கா, தங்கச்சின்னு யாரும் கிடையாதுன்னு சொன்ன?

பாரு: (மை.வா: எல்லாத்தையும் நியாபகம் வச்சுருக்காளே!) அது நான் அக்கா, தங்கச்சி தான இல்லேன்னு சொன்னேன்…அண்ணா இல்லேன்னு சொல்லலயே

வியான்னா: ஆனாலும் கேரக்டர் அஸாஸினேட் இந்த வார்த்தைய நீ நியாபகம் வச்சுக்கோ…எப்டியும் உனக்கு சீசன் முடியுற வரைக்கும் யூஸ் ஆகும்.

பாரு: நல்லா எடுத்துக் குடுக்குறா என் செல்லாக்குட்டி//

ஆனா பாருங்களேன்…விசே வந்து “ஒரு பொண்ண இப்டி டெலிவிஷன்ல எப்டி சொல்லப் போச்சு?”ன்னு ப்ரஜின தான் வந்து கடிக்கப் போறாப்ல. அனுமதி இல்லாம ஒரு பொண்ண தொடுறது தப்புன்னா…அனுமதி இல்லாம ஒரு ஆண தொடுறதும் தப்புதான? இத ஒரு பயலும் கேக்க மாட்டான்.

இந்த காலி பெருங்காய டப்பா சீசனுக்கு பெருங்காய டாஸ்க்குன்னு ஒண்ணு…இதுல விக்கல்ஸ் ஜெயிச்சாப்ல.

ஆக மொத்தம் இந்த சீசன் பாருவ நம்பிதான்னு பிக்கி முடிவு பண்ணிட்டாப்ல. பாருவ கடைசி வரைக்கும் சகிச்சுக்க கூடிய சகிப்புத்தன்மையை வளார்த்துக்க வேண்டிய கடமை நமக்கு இருக்குன்னு மட்டும் மறக்காதீங்க.

சகிப்புத்தன்மையை வளர்க்கும் உணவு முறைகள் இதோ உங்களுக்காக…

//சகிப்புத்தன்மையை வளர்க்கும் உணவுகள், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் (ஆப்பிள், முழு தானியங்கள்), நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் (சிட்ரஸ் பழங்கள், கீரைகள், பூண்டு, இஞ்சி) மற்றும் ஒட்டுமொத்த ஆற்றலை வழங்கும் புரதங்கள் நிறைந்த உணவுகள் (பருப்பு வகைகள், மீன்) ஆகியவற்றை உள்ளடக்கிய சமச்சீரான உணவின் மூலம் சகிப்புத்தன்மையை அதிகரிக்கலாம்.//

வண்டி வண்டியா கேக்க வேண்டிய நேரத்துலையே எங்க அண்ணன் விசே மவுன விரதம்தான் இருப்பாப்ல. ஆனா இந்த வாரம் கேக்குறதுக்கு எதுவுமே இல்லாத வாரம். விசேவுக்கு இந்த வார சம்பளம் போன்ஸ்தான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Series Navigation<< நாள்: 32நாள்: 34 >>

Author

Related posts

அனைவரும் சமம்

தம்பி சீனிவாசனின் எழுத்துகளைத் தேடி..

ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்