நாள்: 34

நாம நெனச்சதுதான் நடந்துச்சு. இந்த வாரம் கேக்குறதுக்கு ஒண்ணுமே இல்ல. ப்ரஜின், ப்ரவீன் & கமரு இவனுங்களோட சண்டை ப்ராங்க் அப்பறம் புதுசா உள்ள வந்த ஆளுங்கள பத்தி பழய ஆளுங்க கிட்ட கேக்குறது. இவ்வளவுதான். கூடவே ஒரு எவிக்ஷன். இதத்தான் சுத்தி சுத்தி விக்ஸ்ன்னு எழுதி இருந்தானுங்க.

விசே மறுபடியும் மறுபடியும் பண்ற ஒரு பிழை…ஹவ்ஸ்மேட்ஸ் கூட இன்டராக்ஷன்ன்னு ஒண்ணு இல்லவே இல்ல. இவரு சொல்ல வேண்டியத மட்டும் சொல்லிட்டு (அதயுமே தெளிவா சொல்றது இல்ல…சும்மா கடிச்சு கடிச்சு பேசுறாப்ல) உக்காருன்னு சொல்லிடுறாப்ல.

நடந்த விஷயத்துல ஒரு பாதிய மட்டும் எடுத்து பேசுறாப்ல. இது மொத வாரத்துல இருந்து தொடருது. ஆனா இந்த எபிஸோட்ல கொஞ்சம் சர்காஸம் ஒர்க் அவுட் பண்ணாப்ல. அதுவும் நல்லா வந்துச்சு.

வந்ததும் நேர உள்ள போன விசே ப்ரஜின், ப்ரவீன் & கமரு இவனுங்கள தனியா உக்கார சொல்லிட்டு இவனுங்க சண்டையப் பத்தி சொல்லுங்கன்னு சொன்னாப்ல.

பெரும்பாலும் பயந்துட்டோம்னு சொல்ல பாரு, “ஏங்க அந்த நேரமா பாத்து குளிச்சுட்டு இருந்தேன்….இல்ல நான் இல்லாத நேரமா பாத்து சண்டைய போடனும்னு முடிவு பண்ணானுங்களான்னு தெரியல”ன்னு சொல்ல…! “அதான நாம இல்லாம என்னடா சண்ட…இந்த குடும்ப அமைதிய கெடுக்க நம்மளத் தவிர எவண்டான்னு நீ நெனைக்கிறது புரியுது”ன்னு விசே சர்காஸம் பண்ண…”அதெல்லாம் இல்லங்க”ன்னு சொன்ன பாருகிட்ட “பாரு நீ யாருன்னு எனக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும் ஆனா உங்கூட சுத்துற ரெண்டு மக்குகளுக்கு மட்டுந்தான் தெரியாது அதனால நடிக்காத”ன்னு சொல்லிட்டாப்ல.

வாட்டருக்கும் ரெண்டு ஏறு விழுந்துச்சு. அப்பறம் “இந்த சண்டையப் பத்தி எல்லாருக்கும் உண்மைய சொல்லுங்க நான் வந்து பேசுறேன்”னு உள்ள போயிட்டாப்ல. இங்க இவனுங்க இது ப்ராங்க் சண்டைன்னு சொல்ல எல்லாருக்கும் அதிர்ச்சி ப்ளஸ் கோவம்.

இதுல வாட்டரு சாண்டி கிட்ட போயி “இது ப்ராங்க்லாம் இல்ல…இவனுங்க உண்மையா சண்ட போட்டோம்னு சொன்னா ஷோவுக்கு கெட்ட பேருல, அதான் ப்ராங்க்குன்னு சொல்லி கேஸ முடிக்கிறானுங்க”ன்னு ஷங்கர் படத்துல கூட்டத்துல பேசுற கேரக்டர் மாதிரி அவரோட ஆராய்ச்சி பேப்பர சம்மிட் பண்ணாப்ல.

ப்ரேக் முடிஞ்சு வந்த விசே வாட்டர எழுப்பி வாங்கு வாங்குன்னு வாங்குனாப்ல. “இப்ப ப்ராங்குன்னு தெரிஞ்சப்பறம் நீங்க என்ன சொல்ல வறீங்க?”ன்னு கேட்டாப்ல. பாவம் விசேவப் பத்தி தெரியாம எல்லாரும் ஆர்வமா பொங்கலா பொங்கி கருத்த சொன்னா, அதுக்கு ஒரு எதிர்கருத்த சொல்லி இப்ப நாம ஏண்டா கருத்து சொன்னோம்ன்ற லெவெலுக்கு ஆக்கிவிட்டாப்ல.

வினோத்: சார் கட்டைய குடுத்தீங்கன்னா முட்டைய உடைக்கிற மாதிரி இவனுங்கள பொளந்துருவேன்

விசே: அப்பறம் நான் உன்னயே பொளந்துருவேன். அதெல்லாம் நீ பேசாத…. உக்காரு

கெமி: நடிப்புக்காக ப்ராங்க் பண்றவனுங்க நடிப்புக்காக இன்னும் என்ன என்ன பண்ண மாட்டனுங்க

விசே: நடிப்பு கிடிப்புன்னு பேசக்கூடாது…நடிகர்கள நடிக்கக் கூடாதுன்னு சொல்லக்கூடாது….உக்காரு

கனி: சார் இருந்தாலும் இத பண்ணாம இருந்திருக்கலாம்

விசே: சுகர் கோட்டடா சொல்லக்கூடாது…உக்காரு//

இப்டியே புல்லி பண்னாப்ல. ஆனா இன்னைக்கு சரியான சம்பவம் அரோராவுக்கு தான். இத விட ஒரு மனித ஜென்மத்தால அசிங்கப்படவே முடியாது. ரொம்ப டைரக்ட்டாவே வச்சு செஞ்சாப்ல விசே. ஆனா அது இன்னும் “எனக்கு வலிக்கலையே” மோட்ல தான் இருக்கு.

இதுல பாருவும் கமருவும் ககூஸ் ஏரியாவுல

பாரு: அப்போ எல்லாமே ப்ராங்க்கா?

கமரு: அப்டி சொல்ல முடியாது, ப்ரவீன ரெண்டு ஊமக்குத்து குத்துனேனே அதெல்லாம் ரியல் தான்

பாரு: நான் கேட்டது…..எல்லாமே ப்ராங்க்கா?

கமரு: அப்டி சொல்ல முடியாது…ப்ரஜின வேற ரெண்டு திருகு திருகுனேன் அது உண்மைதான்

பாரு: நான் கேட்டது….எல்லாமே ப்ராங்க்கா?

கமரு: அப்டி சொல்ல முடியாது …ப்ரவீன 4 பேடு வேர்ட்ஸ் சொல்லி திட்டுனேன் அதுவும் ரியல் தான்

பாரு: அப்போ நீ இந்த சண்டைய ப்ராங்க் பண்ணவே இல்ல…ப்ரவீனையும், ப்ரஜினயும் தான் ப்ராங்க் பண்ணியிருக்க

கமரு: அய்யய்யோ…உளறிட்டேனே!

பாரு: நான் கேட்டது என் கூட சிரிச்சுப் பேசி, பழகி, பத்து மணிக்கு மேல பலான மேட்டர் பேசுனது எல்லாம் ப்ராங்க்கான்னு ஃப்ராங்கா சொல்லு

கமரு: அப்டி சொல்ல முடியாது…

பாரு: அடிங்க! அப்டி சொல்ல முடியாதுக்கு பொறாந்தவனே…//

பின்ன விசே வந்து, “சண்டை நடக்காம பாத்துக்கோங்கடான்னு உள்ள அனுப்புனா சண்டைய வச்சே எவனாச்சும் ப்ராங்க் பண்ணுவானாடா…என்னடா லுச்சாத்தனமா இருக்கு. இனிமே இப்டி பண்ணாதீங்க”ன்னு சொன்னாப்ல.

சரி உள்ள வந்தவங்களப் பத்தி சொல்லுங்கன்னு சொன்னதும்

வரிசையா வந்து வத்தி வச்சானுங்க. “கடலா வந்தவனுங்க…கப்பு தண்ணியா போயிட்டானுங்க”ன்னு சொன்னானுங்க.

சரி இன்னைக்கு எலிமினேஷனுக்கு வருவோம்னு சொல்லிட்டு துஷார தூக்குனானுங்க. அவன் இன்னைக்குதான் திருவாய் மலர்ந்து நாலு வார்த்தை கோர்வையா பேசுனான். வெளிய வாப்பா தம்பின்னு சொல்லி கூப்ட்டுக்கிட்டாங்க.

அவன் போனதும் அரோரா ஆறுதலா கமரு மேல சாஞ்சுக்கிச்சு…

கமரு: சரி…எல்லாரும் ஒரு நாள் போகத்தான போறோம்

அரோரா: அதுக்கில்ல…ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

கமரு: சரி அழாத…எல்லாம் நடக்குறதுதான்

அரோரா: அதுக்கில்ல…ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

கமரு: இருக்கட்டும்…வெளிய போயி பாத்துக்கலாம்

அரோரா: அதுக்கில்ல…ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

கமரு: அட விடும்மா….நான் வேற ரொம்ப நேரம் கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருக்க முடியாது…

அரோரா: அதுக்கில்ல…நீதான் வெளிய போவன்னு ஃபுல் கான்பிடன்ஸ்ல இருந்தோம்….ஆனா அவன் வெளிய போயிட்டான்….ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

கமரு: அடி பாதகத்தி….! அவன் வெளிய போனது இப்ப உனக்கு பிரச்சனையில்ல…நான் போகல அதான் உனக்கு பிரச்சனை

அரோரா: அதுக்கில்ல…ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ//

வெளிய வந்த துஷார கட்டிப்பிடிச்சு அனுப்புற நேரத்துல “அப்பறம் எனக்கும் அரோராவுக்கும் ஒண்ணுமில்லங்க”ந்னு சொல்ல, “இப்பதாண்டா தெரியுது நீ ஏன் வாயத் தொறக்க மாட்டேங்குறன்னு. உன் வாய்தான் உனக்கு எதிரி. இனி திறக்காத போ”ன்னு அனுப்பி விட்டாப்ல. ஆனா இத்தன வாரத்துல இன்னைக்குதான் ஒரு எலிமினேஷன் சரியா நடந்திருக்கு.

கடைசியா பாரு வந்து கேமராகிட்ட வந்து க்ளோஸப்ல நின்னு அவங்க அம்மா கிட்ட அழுதுட்டே பேசுச்சு…யாரு பாவம்னு தான் தெரியல.

முடிஞ்சது!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Series Navigation<< நாள்: 33நாள்: 35 >>

Author

Related posts

அனைவரும் சமம்

தம்பி சீனிவாசனின் எழுத்துகளைத் தேடி..

ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்