கவிதை

வழி நடத்தும் நிழல்கள்

மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றனதலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டிமேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.அதுவே சத்தியம் எனகூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.அவற்றின் காதுகள்பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமேசெவிமடுக்கப் பழகி விட்டன. செல்லும் பாதை குறித்து எந்தக் கேள்வியுமில்லைஅடைய வேண்டிய தூரம் பற்றி அளவீடு ஏதுமில்லைகோலை உயர்த்தி…

Read more

நல்லாச்சி – 12

This entry is part 12 of 12 in the series நல்லாச்சி

பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்குசூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்குதென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்துகருநாகம் போல் பின்னலிடும் வயது வரைவிதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்குழந்தை மீனாட்சியாய் வரித்துசுற்றிப்போட்டும் கொள்கிறாள் பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா எனதாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறதுஅந்தப்…

Read more

என் பேனா மையின் நிறம்

நன்னாளும் நன்முழுத்தமும் நன்கறிந்துபகை நாட்டார்க்குப் பறையறைந்துதூதன் சொல் கேட்டறிந்துசமாதானத்திற்கு வழியில்லை என்றுணர்ந்துஆநிரையும் முதியோரும் பிணியுடையோரும்அந்தணரும் குழவிகளும் பெண்டிரும்அரணுக்குள் பொத்திய பிறகு… குறித்ததொரு உதயப் பொழுதில்முரசறிவித்து படை நிறுத்திஅந்தி வரை சமரிட்டுஎதிர்ப்புறம் மடிந்த வீரர்கள்எரியூட்ட நேரங் கொடுத்துஇறுதியில் நிராயுதபாணியாய் சரணடைந்தோரைமரியாதையோடு சிறைப்பிடித்துஅறநெறியில் நிலம்…

Read more

க. அம்சப்ரியா கவிதைகள்

யாரோ ஒருவரின் திராட்சை ரசம் நான்பருகப் பருகக் கடக்கிறது காலம்ஒரு நாள் அது கசப்பின்அடையாளமாகிறதுபருகியவர்கள் எவரும்இது திராட்சை ரசமெனஒப்புக் கொண்டதில்லை என்பதுதான்…. எனது வேர்களிலும்கனிகள் விளையும்உரமொன்றைத் தயாரிக்கிறார்கள்எனக்கே எனக்கெனமெனக்கெட்டதாகதூற்றித் திரிகிறார்கள்அறுவடைக் காலங்களில்பள்ளத்தாக்கில் வீசப்படும்மீதக் கனிகள்விரும்பாவிட்டாலும் நஞ்செனப் பரவுகிறதுகனிகளற்ற கிளைகளில்வந்தமர்கிறதுவண்ணத்துப் பூச்சியின்இறகொன்று. அவர்களின்…

Read more

மகளே.. என் மகளே!

வீட்டுத் திண்ணையில் காலைச் சூரியன்அந்தி சாயும் வரைக்கும் என் கண் தேடும்,இத்தனை வருடம் காலடிச் சத்தம்கேட்டதெல்லாம் இப்போதேன் தூரம். ஊர் தாண்டி நீ போனதனால்,சுவரெல்லாம் நீ சாய்ந்த இடம்,பாயெல்லாம் நீ படுத்த நினைவுகள்,பேச ஒரு வார்த்தை இல்லையே நீயின்றி. பழைய சோற்றைக்…

Read more

அலங்கரிக்கும் தீபம்

மயங்கும் இருளை மறுக்கும் ஒளியாய்,மனங்களில் மேகம் களைக்கும் வான்மழையாய்,அழகு தீபம் அலங்கரித்ததோர் தருணம்,அறத்தை மொழியும் அகல் விளக்கமிது. இருள் வாழும் இடம் தெரியாது,ஓர் ஒளி வந்தால் தவம் முடியும்;அந்த ஒளியாம் இந்நாள் வாழ்த்து,அன்பெனும் வாசலில் அழைக்கின்றது. அரசர் குடியில் தீபமிட்டார்,ஆசையுடன் கூடி…

Read more

நல்லாச்சி – 11

This entry is part 10 of 12 in the series நல்லாச்சி

தீபாவளிக்கு ஆரோக்கிய அல்வா வேண்டுமெனஅரை மணி நேரமாய்எசலுகிறான் மாமன்அசையாமல் அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சிஎடையும் இடையும் பெருகாமல்எண்ணெய்யும் நெய்யும் தொடாமல்நாவினிக்க வேண்டுமாம் தீபாவளிஇத்தனை விதிகளைப் பரப்பினால்என் செய்வாள் அவளும் நல்லாச்சியின் பட்டியலைதலையசைத்து ஒதுக்குகிறான்பேத்தியின் பட்டியலையோகண்டுகொள்ளவேயில்லைபழைய மனப்பான்மை கொண்ட உங்களுக்குநவீன நடைமுறை தெரியாதெனகேலியும் செய்கிறான் ஆரோக்கிய…

Read more

கிளி ஜோசியம்

ஆலய வாசலின் முன்னிருந்தஆரவாரமிக்கப் பூக்கடைகளைத் தாண்டிவீதியின் அமைதியான ஓரத்தில்சாயம் போன குடைக்குக் கீழ்மூங்கில் கூண்டிற்கு உள்ளேசைகைக்காகக் காத்திருக்கிறது கிளி. வருவோர் போவோரைக் கவரும்வாய்கொள்ளாப் புன்னகையுடன்பச்சைக்கரையிட்ட மஞ்சள் வேட்டியும்இளஞ்சிகப்பில் சட்டையும், நெற்றியில்விபூதிப் பட்டையுடன் சந்தனமும் குங்குமமும்தரித்த ஜோஸியர்விரல்களைச் சொடுக்கவும்தாவிக் குதித்து வெளியே வருகிறது…

Read more

கி. சரஸ்வதி கவிதைகள்

காதல் கோள்கள் நாம் பூமியில் மட்டும்சந்தித்துக் கொள்ளவில்லை நண்பனே மின்னிக் கிடக்கும் பலகோடி நட்சத்திரங்கள்எப்படி வந்தன என்று கேட்டாய்நான் உடனே ஒரு முத்தம் தந்தேன்அவை ஆகின பல கோடியே ஒன்றுதாரகைகளெல்லாம் முத்தங்களெனில் நிலவு?அது சற்றே நீண்ட முத்தம் பால்வெளி நிரப்பிய காதலின்போதாமையில்…

Read more

ஆன்மாவின் கண்ணீர்..

எனது கண்ணீர் ஆன்மாவிலிருந்து வடிவதுஅதன் தூய்மைஒருவரைப் பகலிலும் தூங்க விடாததுஎத்தனை மைல்களுக்கு அப்பால்இருந்தாலென்னஎத்தனை காலத் தொலைவு இருப்பினும் என்னஇனி தேடவேண்டிய எந்த அவசியங்களுமில்லைநீயே உதிர்த்த சொற்கள்தான்நான் மாயங்களை நிகழ்த்துபவள்நீ எனை வந்து சேர்வாய் தேவ.

Read more