காலத்தின் ஆன்மா.
பேரன்பும் பெருங்கருணையும்ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்துபொங்கிப்பிரவாகித்துகரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்நினைவுகளெனில்புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம் வாழ்வெனும் காட்டாற்றின் நடுவேசிறுதுண்டு நிலமாய்காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்நறுமணத்தால் பேதலித்துகாலடி நிலம் நழுவவும்இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்ஓங்கியொலித்துஇறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்என நங்கூரமிட்டுவரிசையாய் நிற்கின்றன நினைவுகள்அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்நட்சத்திரங்களைப்போல்…