நல்லாச்சி – 17
வாழும் பல்லியும் மனைப்பாம்பும்அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியைபெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்சற்றும் பயந்ததில்லை அவள் கண்ணைக்குத்துவதாய்ச்சொல்லப்படும் சாமியிடமும்தூக்கிச்சென்றுவிடுவதாய்நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயெனபரிதாபமேயுண்டு அவளுக்குதேனீக்குப் பயப்படாத மாமன்குளவிக்கு அஞ்சும் விந்தையும்முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சிமருமகளிடம் காட்டும் பணிவும்என்றுமே புரிந்ததில்லை…