அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
இருசியமுக மலை உச்சியில் இருந்த குகைக்குள் இருந்த சுக்ரீவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உளவறியச் சென்ற அனுமன் இன்னும் வரவில்லை. ஏற்கனவே ஒற்றர்கள் சொல்லியிருந்த செய்தி அவன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. இரு மானிடர்கள் பெரும் வில்லுடன் இருசியமுக மலையைத் தேடி வந்துகொண்டிருந்த செய்திதான்…