ராமலக்ஷ்மி

மன்னிப்புக் கோர மறுப்பவள்

அவர்கள் அவளிடம் சொன்னார்கள்அவள் ஒரு அழகி அல்ல என்று,அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்தலட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்று. அவளது உடலின் எடை அதிகமென்றார்கள்அவளது சிரிப்பு உரத்ததென்றார்கள்அவளது தோலின் நிறத்தைக் குறிப்பிட்டார்கள்அவளது கனவுகள் மிக உயரமானவை,ஒரு பெண் எட்ட முடியாதவை என்றார்கள். அவர்கள் ஒருபோதும்…

Read more

வழி நடத்தும் நிழல்கள்

மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றனதலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டிமேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.அதுவே சத்தியம் எனகூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.அவற்றின் காதுகள்பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமேசெவிமடுக்கப் பழகி விட்டன. செல்லும் பாதை குறித்து எந்தக் கேள்வியுமில்லைஅடைய வேண்டிய தூரம் பற்றி அளவீடு ஏதுமில்லைகோலை உயர்த்தி…

Read more

கிளி ஜோசியம்

ஆலய வாசலின் முன்னிருந்தஆரவாரமிக்கப் பூக்கடைகளைத் தாண்டிவீதியின் அமைதியான ஓரத்தில்சாயம் போன குடைக்குக் கீழ்மூங்கில் கூண்டிற்கு உள்ளேசைகைக்காகக் காத்திருக்கிறது கிளி. வருவோர் போவோரைக் கவரும்வாய்கொள்ளாப் புன்னகையுடன்பச்சைக்கரையிட்ட மஞ்சள் வேட்டியும்இளஞ்சிகப்பில் சட்டையும், நெற்றியில்விபூதிப் பட்டையுடன் சந்தனமும் குங்குமமும்தரித்த ஜோஸியர்விரல்களைச் சொடுக்கவும்தாவிக் குதித்து வெளியே வருகிறது…

Read more