- அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3
- கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2
- சீராட்டு: – கொங்கு வட்டார வழக்கு – 3
#சீராட்டு.
கொங்கு வழக்குல சீராட்டுனா கோவிச்சுட்டு பேசாம இருக்கறது.
இப்ப நம்ம புள்ளைங்க நம்மட்ட எதும் கேக்கறாங்கனா நாம வாங்கிதரலனா கோவிச்சுக்கிட்டு பேசாம இருப்பாங்கள்ல அப்ப பயன்படுத்தற வார்த்தை. அவ சீராட்டு போட்டு போய்ட்டா,போய் சீராட்டு தெளிய வெய்ங்கனு சொல்வாங்க.சீராட்டு தெளிய வெய்ங்கனா சமாதனாப்படுத்தறதுனு அர்த்தம்.
புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்ட கோவிச்சுட்டு, அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டாலும்,அவ சீராட்டு போட்டுகிட்டு அவங்கப்பனூட்டுக்கு போய்ட்டாம்பாங்க..
பொதுவா சீராட்டினா கொண்டாடினு பொருள் வரும்ல. ஆனா கொங்கு வட்டாரவழக்குல சீராட்டுனா கோவம்.
ஏனுங்கா மல்லீக்கா மருமவ,இங்கில்லியாமா,சீராட்டு போட்டுட்டு அவங்கம்மா ஊட்டுக்கு போயிட்டாளாமா..
பின்ன என்ன சரசாயா கல்யாணமாயி எத்தன நாள் ஆயிப்போச்சு இப்ப எப்ப பாரு ஊட்டுக்கு தூரமாயிட்டா, நூணாயமே பேசறாளாமா மல்லி. எத்தன நாளைக்கு அந்தப்புள்ள கேட்டுகிட்டே இருப்பா, அதா நேத்து சண்டைக்கு போயிட்டாளாமா, அதுக்கு அந்த ராசுப்பய புடுச்சு அடுச்சுப்போட்டானாட்ட இருக்குது.
அப்பவே கீழ போற பஸ்சு 12.30 க்கு வருமுல அதுல ஏறி ஊருக்கு போறனு சீராட்டு போயிட்டாளாட்டிருக்குது.
#சீராட்டு