கொங்குவட்டாரவழக்கு: 8 – கொசலம்

This entry is part 5 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

#கொசலம்

புதுக்காட்டு வளுவு சென்னீப்பம்பய ராசுக்கு கல்யாணம் உறுதியாவறாப்ல இருந்துருக்குது.
இந்த சீமையே தேடி இப்பத்தா பொண்ணு படுஞ்சு வருமாட்ட.

அதையப் பொறுக்காம கொள்ளுகாட்டய்யம் பய நடுவளுவானிருக்கான்ல அவம் போயி புள்ளையூட்ல கொசலம் (காசிப்) வெச்சு கல்யாணத்தயே நிறுத்திப்போட்டான்.

அந்த கூடப்போட்ட காசி செரியான கொசலக்காரம் போ..

ரண்டு குடும்பத்துக்குள்ள ஏற்கனவே பிரச்சினை இருக்கு.அத கொசலம் பேசியே இன்னும் பெருசு பண்ணி உடறவங்களுக்கு பேரு கொசலமூட்டி..


குசலம் என்பதே கொசலம் என்று மருவியது. குசலம் என்பதற்கு தந்திரமாகப் பேசுதல் என்ற பொருளும் உண்டு. மேலுள்ள உரையாடல் சற்றேறக்குறைய அந்த பொருள்படும்படியானதாகும்.

குசலம் – அகராதி தரும் பொதுப் பொருள்
kucalam n. kušala. 1. Well-being, prosperity; க்ஷேமம் குசலவார்த்தை பேசி(உத்தரரா. சம்பு 37).

2. Virtue, goodness; நற்குணம் (பிங்.)

3. Excellence; மாட்சிமை (பிங்.)

4. Ability, skill, dexterity; சாமர்த்தியம்

5. Craftiness, cunning, wile, trickiness; தந்திரம் (J.)

6. Witchcraft, magic, sorcery; மாந்திரிகம் (J.)

Series Navigation<< கொங்கு வட்டார வழக்கு -7: சொலோர்னு<< கொங்கு வட்டார வழக்கு -6: கங்குகொங்கு வட்டாரவழக்கு – 11: பொழையாக்குப்பா >>கொங்கு வட்டாரவழக்கு – 10: திடும்பம் >>கொங்கு வட்டாரவழக்கு – 9: கட்டாப்பு >>

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19