ஓய்வு பெற்றபின்னும் வாழ்க்கையை வாழ்வது எப்படி?

காலிக்கூடான எம்ப்ட்டி நெஸ்ட் பருவத்தை, எப்படி மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள அனுபவமாக மாற்றிக்கொள்வது? இதுநாள் வரை நாம் செய்ய நினைத்த சின்னச் சின்ன செயல்களை நமக்காகச் செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்வது எப்படி? “குழந்தைகள் சென்றுவிட்டனர், நான் தனியாக இருக்கிறேன்” என்பதை, “குழந்தைகள்…

Read more

எப்பொழுதும் பெட்டி கட்டுபவர்கள் – தமிழில் – யாழினி சென்ஷி

மலையாள மூலம்: பாபு பரத்வாஜ் (பிரவாசிகளுடே குறிப்புகள் புத்தகத்திலிருந்து) முதல் மாதச் சம்பளத்தில் ஹஸன் ஒரு பெட்டி வாங்கினான். அங்கு லேபர் கேம்பில் உடன் வேலை செய்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. “எதற்காக இவ்ளோ பெரிய பெட்டி? 2, 3 மாசம் தொலைவில்…

Read more

அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்

This entry is part 17 of 31 in the series அசுரவதம்

ஆழ்ந்த வனத்தின் அமைதியைப் பிளந்துக் கொண்டு, “ஓ.. சீதா, ஓ.. இலக்குவா..” என்ற குரல் உதவிக்காகக் கெஞ்சும் அவல ஓசையாய் வெளிவந்தது. இந்தக் குரல் இராமனின் உயிரே அவனது உடலை விட்டுப் பிரிந்து செல்வதுபோல, கேட்பவர்களின் இதயத்தைக் கிழிக்கும்படி ஒலித்தது. ‘யார்…

Read more

சாக்பீஸ் சூரியன் – (ஒன்பது குறுங்கவிதைகள்)

1.மிதக்கும் சோப்புக் குமிழிகள்அருகில் வண்ணத்துப்பூச்சிகள்பறக்கும் மகிழ்ச்சி. 2.பாதி கடித்த ஆப்பிள்விரியத் திறந்த கதைப்புத்தகம்வியப்புக்கு முடிவில்லை. 3.குழந்தை பென்சிலால் தட்டும் ஒலிஜன்னல் விளிம்பில் தத்தித் தாவும் குருவிகற்கின்றனர் இருவரும் சிறுகச் சிறுக. 4.மரத்தில் சிக்கிய காற்றாடிஅந்தியில் உயர ஏறும் நிலாவிழ மறுக்கின்றன இரண்டும்.…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் -12

போன அத்தியாயத்தில், சக்தி வாய்ந்த பொருளாதார மையங்களாகத் திகழ்ந்த வழிபாட்டு மையங்கள் எப்படி உருவாகி இருக்கும்? எனக் கேட்டிருந்தேன். ஒரு கட்டத்தில் பணப்பரிவர்த்தனை, வர்த்தகம், அது சார்ந்த வரிவசூலித்தல் ஆகியவை நிகழ்ந்து கொண்டு இருந்தன என்றுதான் பல சரித்திரப் புத்தகங்கள் சொல்லும்.…

Read more

“ம்..” 3

This entry is part 3 of 5 in the series "ம்.."

இந்த உச்சியிலிருந்து எல்லாம் பார்க்க முடிகிறது. சற்றுத் தூரத்தில் தேக்கு மரமொன்றில் நீலக்கழுத்து மஞ்சள் மூக்குப் பறவை ஒன்று தன் இணையுடன் அமர்ந்திருக்கிறது. அந்தப் பக்கம் சில பல காகத்தைப் போல பெரிய சைஸ் பறவைகள் அமர்ந்திருக்கின்றன. வெயில் ஏறிக் கொண்டிருப்பதைப்…

Read more

மாறியது நெஞ்சம்

“மணி..!” “அம்மா.. விளையாடிக்கிட்டிருக்கேன்.” அவன் கையில் வண்ணப் பந்து. “இது ஏது உனக்கு?” “பக்கத்து டவுனில் இருந்து பாட்டி வாங்கி வந்தாங்க.‌ ‘பூமராங்’ போல தூக்கிப் போட்டா திரும்பவும் நம் கைக்கு வந்துவிடும்” அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மகேஸ்வரியின் மகன்…

Read more

ஜப்பானியச் சிறுவர் கதைகள் 4 – மொழியாக்கம்

4. கின்தாரோ முன்னொரு காலத்தில், ஜப்பான் நாட்டில் அஷிகரா மலையில் ஒரு சிறுவன் அவனுடைய அம்மாவுடன் வாழ்ந்தான். அந்தச் சிறுவனின் பெயர் கின்தாரோ. ஜப்பானிய மொழியில் ‘கின்’ என்றால் தங்கம், ‘தாரோ’ என்பது ஆண் குழந்தைகளின் பொதுப்பெயர். கின்தாரோ மிகவும் வலிமையான…

Read more

காலிக்கூட்டின் தனிமை

காலை ஆறுமணிக்கு சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் 62 வயதான ராதா பால்கனியில் நின்று காபியைக் குடித்துக்கொண்டிருந்தார். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குத் தயாராகும் சத்தம் கேட்டது. “அம்மா, என் டிஃபின் பாக்ஸ் எங்கே?” “அப்பா, நான் இன்னிக்கு லேட் ஆகிட்டேன்!” இதே…

Read more

நல்லாச்சி – 16

This entry is part 16 of 27 in the series நல்லாச்சி

ஒட்டி இழையும் குஞ்சுகளையெல்லாம்எட்டித்துரத்தும் கோழியின் போக்குகொஞ்சமும் பிடிக்கவில்லை பேத்திக்குநல்லாச்சியிடம் வந்து அங்கலாய்க்கிறாள்‘பிள்ளேளுக்க தப்பை அம்மைதானே மன்னிக்கணும்அதுகளுக்கேது போக்கிடம்’ வெதும்பும் பேத்தியைதேற்றுகிறாள் நல்லாச்சி புன்னகையுடன்‘அட! கோட்டிப்பயபுள்ள.. குஞ்சுகளையெல்லாம்கோழி தவுத்துட்டுது’ என்கிறாள்‘தவிர்த்துவிட்டது’ எனத் தெளிவாயும் செப்புகிறாள்புரியாமல் தலைசொரியும் பேத்திக்குஇரைதேடல் முதல்இரையாகாமல் தப்புதல் ஈறாகப் பயிற்றுவித்தபின்குழந்தைகளைசுயமாய்…

Read more