நல்லாச்சி – 24
உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சிநட்புகளுடன் விளையாடும் பேத்தியைஉச்சிப்பொழுதின் வெப்பம்வாட்டுமென்ற அக்கறையில்கலந்தாலோசித்த பட்டாளம்திருவிழா விளையாட்டைத் தேர்கிறதுஅறங்காவலராக்குகிறது நல்லாச்சியை செங்கற்களே மூர்த்தங்களாய்அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்வடிவெடுக்கிறது சப்பரம்பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்காற்றில் ஒருவன் கொட்டுமுழக்கதாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறதுஏதும் கொணராத ஒருத்தியைவிலக்குகிறது கூட்டம் பதைக்கிறாள்…