கவிதை

மொழிபெயர்ப்புக்கவிதைகள் – சந்திரா மனோகரன்

ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையே!—– —————————————————————————ஆங்கிலம் : ஜார்ஜ் பார்க்கர்தமிழில் : சந்திரா மனோகரன் ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையேஓர் இதயம் மட்டுமே கேட்ட அழைப்பை போலசொற்களற்ற பாடல்கள் அந்த வெள்ளப்பரப்பில்எழுகின்றன!எல்லாவற்றிலும் நிரம்பியிருக்கும் ஆனந்தம்எழும்புகிறதுஒரு பட்சியின் சீழ்க்கையொலிபோல ஓ!…

Read more

பொன்னந்தி – பி.பி. போர்க்கர்(மராத்தி)

தமிழாக்கம்: சாந்தி மாரியப்பன் குஞ்சுகள் சிறகை விரிக்கின்றனஎங்கெங்கோ உள்ளன அவற்றின் கூடுகள்நமது பொன்மாலைநேரம் இப்போதுபொன்னொளிரும் மேகவிதானங்களுடன் எத்தனை கவலைகள் இருப்பினும் போயினும்மென்வெய்யில் பரந்து விரிகிறதுஇருள் அடர்ந்து நிலவாகிஅமைதியாக மலர்கிறது நேற்றைய நினைவுகளை முழுமுற்றாய் மறந்துவாழும் இன்றைய நினைவுகளைச் சேமிப்போம்குழந்தைபோன்ற தூய மனதோடுஇன்னொரு…

Read more

அதிசயங்கள் – வால்ட் விட்மன்

தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் அதிசயத்தைப் பற்றி யார் பெரிதாகப் பேசுகிறார்கள்?அதிசயங்களைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது, நான் மன்ஹாட்டன் வீதிகளில்நடந்தாலும் சரி, அல்லது வீடுகளின் கூரைகளுக்குமேல் விண் நோக்கிபார்வையைச் செலுத்தினாலும் சரி, அல்லது கடற்கரை ஓரத்தில்வெற்றுக் கால்களுடன்நீரின் விளிம்பில் நடந்தாலும் சரி,…

Read more

நல்லாச்சி – 29

This entry is part 29 of 32 in the series நல்லாச்சி

தோல்பாவைக்கூத்து தெருக்கூத்துஇரண்டும் வந்திருக்கின்றன கிராமத்திற்குஊர்த்திருவிழாவை முன்னிட்டுதெய்வங்களும் கொஞ்சம்உற்சாகமடைந்து புத்துணர்வு கொள்கின்றன நல்லாச்சியும் பேத்தியும்தினம் ரசிக்கின்றனர் இரு கூத்துகளையும்அர்ச்சுனன் தபசையும், நள தமயந்தியையும்அரிச்சந்திரனையும் பாஞ்சாலி சபதத்தையும்நல்லாச்சி சொன்ன இன்னபிற கதைகளையும்கூத்துவடிவில் பார்த்த பேத்திராஜாக்களையும் ராணிகளையும்பளபளக்கும் அரசவாழ்வையும்நிஜமெனவே நம்பத்தொடங்குகிறாள்இரவிலும் பகலிலும் வெவ்வேறாய்ச் சுழல்வதுஅவர்கள் உலகம்…

Read more

இரு கவிதைகள் – டு ஃபு

போர் ரதங்களின் பாடல் மூலம்: ”Ballad of the Army Carts” by Du Fuஆங்கிலத்தில்: David Lundeஆங்கிலத்திலிருந்து தமிழில்: ராமலஷ்மி ரதங்கள் உருளுகின்றன,கடகடவென அதிர்கின்றன.குதிரைகள் கனைக்கின்றன,சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டிஅணிவகுத்துச் செல்கின்றனர்.தந்தைமார், தாய்மார்,மனைவியர் மற்றும் குழந்தைகள்அவர்களை…

Read more

ஏப்ரல் – 1

பள்ளி முடிந்துஅவசர அவசரமாகவீட்டிற்கு வந்துஅம்மா வருவதற்குள்பேனா மைத்துளிகள்கோலமிட்ட சீருடையைசோப்பு நீரில்முக்கித் துவைக்கையில்… பறந்து உடையும்வண்ண நீர்க்குமிழிகளில்அன்றைக்கு சூதுவாதின்றிநண்பர்களுடன் ஏமாற்றிகொட்டமடித்த எண்ணங்கள்மின்னி மறையும்; பிள்ளைப் பருவத்தில்ஏமாந்த கோபத்திற்குநீர்க்குமிழியின் ஆயுள்,நீடித்த நட்பினில்கடுமைகள் ஏதும்பலநாள் தொடராது. மனதினில் எதனையும்நிறுத்திக் கொள்ளாதிருக்கஒரு முறையேனும்மீண்டும் வாராதோ…கள்ளமில்லா பிள்ளைப்பருவஏப்ரல் 1.

Read more

மாயக் கோடுகள்

சுவர்கள் எப்போதும்செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,சில நேரங்களில் அவை எண்ணங்களைசுவாசித்தும் எழுகின்றன.இயலாதெனும் தயக்கமும்வேண்டாமெனும் எச்சரிக்கையும்ஒரு முடிச்சாகப் பிணைந்துகாலத்தைக் கட்டிப் போடுகின்றன. நமது எல்லைகளால்ஆகாயம் சுருங்கிப் போகிறது.நமது சந்தேகங்களால்அடிவானம் மறைந்து போகிறது.நமது தடுமாற்றங்களால்திசை விளிம்பு குறுகிப் போகிறது. வெளிப்படுத்தாத வார்த்தைகள்மெளனச் சுவர்களாக உயருகின்றன.மாயக் கோட்டிற்குள்அவிழாத புதிர்களாக…

Read more

நல்லாச்சி – 28

This entry is part 28 of 32 in the series நல்லாச்சி

வெய்யில் வாட்டுகிறதாம் நல்லாச்சியைவருடந்தோறும் அதிகரிப்பதாய்ப் புலம்புகிறாள்மழையும் குளிரும் வெயிலும்அதிகரித்துகொண்டே போவதாய்ச்சொல்லிஅந்தந்த தெய்வங்களை ‘அர்ச்சிக்கிறாள்’ஒருவரையொருவர் நோக்கிக்கொள்கின்றன அவைபாவம்போல்குளிருக்கென்றோர் தெய்வம் இல்லாமல்தவித்துத் திரிகின்றன அர்ச்சனைகள் முற்றத்தைப்போர்த்திய தென்னங்கிடுகுசாளரங்களைத் திரையிட்ட வெட்டிவேர்குலைகுலையாய் நுங்கும் இளநீரும்கூடவே கொஞ்சம் மோரும் பானகமும்ஆயுதங்களுடன் தயாராகத்தானிருக்கிறாள்குட்டிச் சிப்பாய் பேத்தியுடன் அவ்வூரைக் கடக்குமட்டும்மேகத்தில்…

Read more

நல்லாச்சி – 27

This entry is part 27 of 32 in the series நல்லாச்சி

இருளென்றால் பயப்படும் பேத்திக்குஇரவும் ஆகாதுமூன்றுகண்ணன் வசிப்பதாய்முற்றத்திற்கும் செல்ல மாட்டாள்இரவின் நிறத்தைப் பூசியதால்கருமையும் ஒவ்வாததாயிற்று ஒரு எள்ளுருண்டையைப்போல்திரண்டிருக்கும் கன்றுக்குட்டிக்கோஅவளென்றால் தனிப்பிரியம்ஒதுக்கினாலும் விரட்டினாலும்அகலாது பிரியஞ்சொரியும் பேத்தியைத் தெளிவிக்கஇட்டுச்சென்ற நல்லாச்சிபலவும் சொல்லிப் போதிக்கிறாள்பிஞ்சு மனதைப் பக்குவப்படுத்துகிறாள்இரவின் கருமைக்குள்தான் நட்சத்திரங்கள்தம் முகவரியைத் தேடிக்கொள்கின்றனவெளிச்சம் ஓர் பிம்பம் எனில்இருள்…

Read more

என்ன செய்ய?

இருந்தபோது தெரியவில்லை இதயமும் இருப்பும்உணர்ந்துவிட்டான் இப்போது!கிடைக்கையில் உணரவில்லை கிட்டுவது பெரிதெனஅறிந்துகொண்டான் இப்போது! அன்பென அறிந்தே செய்தவனின் அலட்சியத்தைஅள்ளியெறிந்தான் இப்போது!தனிமையைத் துணைகொண்டவன் தவிக்கிறான்!அணங்கவளின் நினைவை என்ன செய்ய.

Read more