மருத்துவர் பக்கம் -8 : டெங்கு காய்ச்சல் – நீர்ச்சத்து இழப்பின் அபாயம்

This entry is part 7 of 8 in the series மருத்துவர் பக்கம்

காய்ச்சலின் போது ஆபத்தான நீரிழிப்பை எப்படி அறிவது??? எளிய வழிமுறை Capillary Refill timeஐ சோதனை செய்வது
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

—–
டெங்கு காய்ச்சலின் முக்கிய ஆபத்து அதீத நீரிழப்பு தான். (Extreme dehydration) முதல் மூன்று நாட்களான Febrile phase இல் அதீத நீரிழப்பு ஏற்படுவது என்பது அதற்கு பிந்தைய மூன்று நாட்களான Critical phase ஐ ஆபத்தானதாக ஆக்கி விடுகிறது.

எனவே , காய்ச்சல் அடித்தாலும் நாம் நீர்சத்தை முறையாக பராமரித்தால் நம்மால் இன்னல்களில் இருந்து காத்துக்கொள்ள முடியும் நீரிழப்பின் அளவு ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதை எப்படி அறிவது ???

காய்ச்சல் பாதித்த குழந்தைக்கு நீரிழப்பின் அளவை அறிந்து கொள்ளவும் நீரிழப்பு ஆபத்தான கட்டத்தில் இருக்கிறதா என்று அறிய இந்த எளிய சோதனை உதவும்

முதல் படம் :- தங்கள் குழந்தையின் கால்களில் உள்ள பெருவிரல்களை பிடித்து கொள்ளவும்


இரண்டாம் படம் :- கால் கட்டை விரல்களை நன்றாக அழுத்தவும்.


மூன்றாவது படம் :- அழுத்திய கட்டை விரலை சில நொடிகள் சென்ற பின் விடவும்


முதல் படத்தில் சிவப்பு நிறத்தில் இருந்த கட்டை விரல் அழுத்தி விட்டவுடன் அதாவது மூன்று டிகளுக்குள் மீண்டும் சிவப்பு நிறத்தை அடைய வேண்டும் . மூன்று நொடிகளுக்கு மேல் ஆகியும் வெள்ளை நிறத்தில் இருந்தால் அது எச்சரிக்கை மணி.


இதை capillary refilling time என்போம். இது எப்போதும் மூன்று நொடிகளுக்குள் நிகழ வேண்டும். மூன்று நொடிகள் ஆகியும் ரத்த நிறம் வரவில்லையெனில் பிரச்சனை இருப்பதை உணர்ந்து மருத்துரிடம் உடனே காட்டவும்

காய்ச்சலின் போது நீர் சத்தை பராமரிக்க எளிய வழிகள்

  1. ஓ ஆர் எஸ் எனும் Oral dehydration salt solution ஐ ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு பாக்கெட்டை கலந்து குடித்துக்கொண்டே இருப்பது நல்லது. நீரிழப்பு மற்றும் தாது உப்புகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வை சரிசெய்ய இதுவே போதும்.
  2. இளநீர் / உப்பு சேர்த்த மோர் / கஞ்சி / ஆப்பிள் / மாதுளை பழச்சாறுகள் போன்றவற்றை கொடுக்கலாம்.
  3. வாந்தி வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் உடனே சேர்ந்து ரத்த நாளங்களினூடே திரவ வழி (IV FLUIDS) சிகிச்சை பெற வேண்டும். தாமதமே ஆபத்து..
    தாமதம் உயிரைக் கொல்லும்.
Series Navigation<< மருத்துவர் பக்கம் 6:- வாயுத் தொல்லை

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19