அசுரவதம்

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 19:  புனரபி ஜனனம், புனரபி மரணம்..

This entry is part 60 of 61 in the series அசுரவதம்

நகருக்கும் கடலுக்கும் இடையே இருந்த இயற்கை அரண்கள் அனுமனால் அழிக்கப்பட்டதால், கடலின் இரைச்சல் அசோக வனத்தின் எல்லைகளைத் தாண்டி, எரிந்து சாம்பலாகிக் கிடந்த இலங்கையின் வீதிகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. தங்கம் உருகி வழிந்தோடிய வீதிகளின் மீது சாம்பலும் கரியும் படிந்துகிடந்தன. காற்றின்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 18: கருணையின் ஊற்று 

This entry is part 59 of 61 in the series அசுரவதம்

இலங்கை மக்கள் இதுவரை அறிந்திராத சோகத்தையும் அழிவையும் கண்ணெதிரே கண்டனர். உயிர்களின் அழிவு எண்ணிக்கை மிகக் குறைவுதான் என்றாலும் இலங்கை வாழத் தகுதியில்லாத நரகமாக மாறியிருந்தது. வானில் ஊழிக்கால மேகம் கறுத்து எங்கும் பரவியது போல, இலங்கையின் வானை முற்றிலுமாக விழுங்கியிருந்தது…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 17: பகை மூட்டிய புகை

This entry is part 58 of 61 in the series அசுரவதம்

புஷ்பக விமானத்தில் நின்றிருந்த இராவணனின் கண்கள், கீழே எரிந்துகொண்டிருக்கும் இலங்கையைப் பார்த்துக் கலங்கி நின்றன. இலங்கை, அவன் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய அவனது பெருங்கனவு. தேவர்களின் பொறாமையைத் தூண்டிய மாபெரும் பேரரசு. அசைக்க முடியாதது என்று அவன் நம்பியிருந்த அந்தக் கோட்டை,…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 16:  அணக்க நகரம்

This entry is part 57 of 61 in the series அசுரவதம்

“அது மரணத்தை விடக் கொடியது!” இராவணனின் அந்த வார்த்தைகள் அரக்கர் சபையில் ஒரு மாபெரும் ரத்தவெறியைத் தூண்டின. அனுமன் நகைத்தான். அதுவரை அனுமனின் வீரத்தைக் கண்டு உள்ளூர அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அரக்கர்களின் கூட்டம், இப்போது மாபெரும் ஆரவாரம் செய்தது. தங்களின் இயலாமையை,…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 15:  அட இராவணா

This entry is part 56 of 61 in the series அசுரவதம்

அனுமன் இராவணனை அழிக்கும் கோபத்துடன் கண்களில் கொலைவெறி தாண்டவமாடச் சற்று நிமிர்ந்தான். அவன் உடல் இறுகியது. ஒரு கணம் தன்னிலை இழந்த அனுமன், சட்டென்று தாவி இராவணனை அழித்துவிடவே நினைத்தான். அந்த நினைவில் தன் இரு கைகளையும் முன் கொண்டுவர முயன்றான்.…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 14:  காற்றின் போர்

This entry is part 55 of 61 in the series அசுரவதம்

வெம்மையின் பெருமூச்சுகளோடு தகித்துக் கிடந்தது அந்தப் பெருங்காடு. நூற்றாண்டுகளாக வானை முட்டி நின்ற பேராலங்களும், அரசுகளும் தன் நிலை முற்றும் இழந்திருந்தன. விண்ணில் இருந்து இறங்கிய பெரும் கரமொன்று வான்நோக்கி நின்ற மரங்களை அப்படியே தலைகீழாகப் பிடுங்கி எறிந்ததைப் போல, நிலப்பரப்பு…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 13:  நிலமே அம்மியாக, உடல் குழவியாக

This entry is part 54 of 61 in the series அசுரவதம்

இருள் நிறைந்து அடர்ந்து நின்றிருந்த மாபெரும் அசோகவனத்தின் பெரும்பகுதி சிதைக்கப்பட்டிருந்தது. வானுயர்ந்த மரங்கள் எல்லாம் சிதறித் துண்டாகிக் கிடந்தன. சிதைந்து வீழ்ந்து கிடந்த மரங்களின் கீழே பல நூறு அரக்க வீரர்கள் மாண்டு கிடந்தனர். அனுமன் திருப்தியாக அந்த இடத்தை சுற்றிப்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி

This entry is part 53 of 61 in the series அசுரவதம்

“கோழையைப் போல் தப்பித்து ஓடிவிடச் சொல்கிறாயா?” சீதையின் அந்தக் கேள்வி அசோகவனத்தின் நள்ளிரவு அமைதியைப் பிளந்துகொண்டு ஒலித்தது. அவளது கண்களில் தெரிந்த அந்தப் பெருநெருப்பு, இலங்கையையே சுட்டெரிக்கும் வல்லமை கொண்டதாக அனுமனுக்குத் தோன்றியது. சற்றுமுன் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்த ஒரு பேதைப்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 11: தாய்க்கு ஒரு தாலாட்டு

This entry is part 52 of 61 in the series அசுரவதம்

“இராமா… இராமா…” என்று அனுமன் தன்னை மறந்து கத்திய அந்தக் கூச்சல் சீதையைத் தவிர்த்து வேறு யாரும் கேட்டிருக்கவில்லை. திரிகூட மலையில் அனுமன் ஆழ்ந்து சிந்தித்த கணத்தில் பட்டாம்பூச்சிகள் இங்கே வழிநடத்தும் முன் ஒன்றை உணர்ந்திருந்தான். தன் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒற்றர்களால்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: ஒளியின் தவிப்பு!

This entry is part 52 of 61 in the series அசுரவதம்

எதைக் கண்டு அனுமன் அச்சத்தில் நின்றான்? அவன் அந்த வனத்துக்குள் வரும் முன்பு இராவணன் தூக்கம் தொலைத்து மஞ்சத்தில் வீழ்ந்திருந்தான். வானம் இன்னும் இருண்டு, “என்னைத் தொட்டு ஒட்டிக்கொள்” என்று பெண்களுக்குச் சொல்வது போல மையாய்க் கறுத்திருந்தது. அவன் கண்கள் ஆகாயத்தை…

Read more