இலக்கியம்

அழகின் வெளிச்சம்.

வகுப்பறை கீதங்களில்வரவேற்றிடும்வாழ்த்து மழை. பிஞ்சுகளின் கரங்களில்தேகத்தில் பாய்கிறதுபனித்துளிகளின் குளிர்ச்சி. கொஞ்சிடும் பேச்சுகளில்ராகங்கள் கூட்டிடும்இசைச்சுரங்களின் சேர்க்கை. எண்ணங்கள் விரித்திடும்சின்னச் சின்னக் கனவுகளில்வகுப்பறையெங்கும்வண்ணத்துப்பூச்சிகள். குடும்பத்தை வினவுகையில்விழியும் மொழியும்விளிம்பிடும் உற்சாகம். புத்தகம் படிக்கையில்மத்தாப்புச் சிதறலெனபிறந்திடும் சிந்தனைகள். ஐயத்தை எழுப்புகையில்மனவாசனைகளில்நிரம்பிடும் தெளிவு. சித்திரங்களில் ஆடிடும்நிறங்களின் கலவைக்குள்மயில்தோகையின் பரிமாணம்.…

Read more

காலத்தின் ஆன்மா.

பேரன்பும் பெருங்கருணையும்ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்துபொங்கிப்பிரவாகித்துகரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்நினைவுகளெனில்புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம் வாழ்வெனும் காட்டாற்றின் நடுவேசிறுதுண்டு நிலமாய்காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்நறுமணத்தால் பேதலித்துகாலடி நிலம் நழுவவும்இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்ஓங்கியொலித்துஇறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்என நங்கூரமிட்டுவரிசையாய் நிற்கின்றன நினைவுகள்அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்நட்சத்திரங்களைப்போல்…

Read more

பால் வாசம் – (பத்து குறுங்கவிதைகள்)

1. சரசரக்கும் சருகுகள்கிளை தாவும் அணில்காற்றின் வேகத்தில். 2. அமைதியான பின்வாசல்அணிலின் வாலசைவு விளையாட்டுநடனமாடும் அசைவின்மை. 3. மரப்பட்டையைச் சூடேற்றும் வெயில்கொட்டையைக் கொறிக்கும் அணில்திட்டமிடும் குளிர்காலம். 4. புற்களில் காலைப் பனித்துளிநொடியில் மறையும் கால்தடங்கள்நிசப்தத்தைக் கைப்பற்றும் அணில்கள். 5. மிதக்கும் மேகங்கள்மரத்துக்கு…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 6 – மொழியாக்கம்

மூன்று ஆண்டுகள் உறங்கியவன் ( 三年寝太郎 – நெதாரோ) முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய கிராமத்தில் வயதான அப்பாவும் அம்மாவும் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் வளர்ந்து தன்னுடைய அப்பாவுக்கு உதவியாக விவசாயத்தில் உதவி செய்யாமல், எப்போதும் தூங்கினான்.…

Read more

புதுமைப்பெண்

சென்னையை அடுத்த புறநகர்ப்பகுதியான செங்குன்றத்தில் உள்ள ஒரு அரவைமில்லில் ஒரே போலீஸ் கூட்டம். நிறைய அதிகாரிகள், அதில் ஒரே ஒரு பெண் சாதாரண உடையணிந்து, பேசிக்கொண்டிருந்தாள். அவள் பெயர் மணிமேகலை. சொற்பத் தொகையான ரூபாய் 1,000/_க்கு, மணிமேகலையும் அவள் குடும்பமும் முழுக்க…

Read more

ஜப்பானியச் சிறுவர் கதைகள் 5 – மொழியாக்கம்

5. குரங்கும் நண்டும் ( 猿蟹合戦 ) முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு விளைநிலத்தில் குரங்கும் நண்டும் வசித்து வந்தன. ஒருநாள் நண்டு தன் கொடுக்கில் சோற்று உருண்டையைச் சுமந்து சென்றது. குரங்கு தன் கையில் சீமைப்பனிச்சை என்னும் பழத்தின் விதையை…

Read more

ஜப்பானியச் சிறுவர் கதைகள் 4 – மொழியாக்கம்

4. கின்தாரோ முன்னொரு காலத்தில், ஜப்பான் நாட்டில் அஷிகரா மலையில் ஒரு சிறுவன் அவனுடைய அம்மாவுடன் வாழ்ந்தான். அந்தச் சிறுவனின் பெயர் கின்தாரோ. ஜப்பானிய மொழியில் ‘கின்’ என்றால் தங்கம், ‘தாரோ’ என்பது ஆண் குழந்தைகளின் பொதுப்பெயர். கின்தாரோ மிகவும் வலிமையான…

Read more

மாறியது நெஞ்சம்

“மணி..!” “அம்மா.. விளையாடிக்கிட்டிருக்கேன்.” அவன் கையில் வண்ணப் பந்து. “இது ஏது உனக்கு?” “பக்கத்து டவுனில் இருந்து பாட்டி வாங்கி வந்தாங்க.‌ ‘பூமராங்’ போல தூக்கிப் போட்டா திரும்பவும் நம் கைக்கு வந்துவிடும்” அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மகேஸ்வரியின் மகன்…

Read more

சாக்பீஸ் சூரியன் – (ஒன்பது குறுங்கவிதைகள்)

1.மிதக்கும் சோப்புக் குமிழிகள்அருகில் வண்ணத்துப்பூச்சிகள்பறக்கிறது மகிழ்ச்சி. 2.பாதி கடித்த ஆப்பிள்விரியத் திறந்த கதைப்புத்தகம்வியப்புக்கு முடிவில்லை. 3.குழந்தை பென்சிலால் தட்டும் ஒலிஜன்னல் விளிம்பில் தத்தித் தாவும் குருவிகற்கின்றனர் இருவரும் சிறுகச் சிறுக. 4.மரத்தில் சிக்கிய காற்றாடிஅந்தியில் உயர ஏறும் நிலாவிழ மறுக்கின்றன இரண்டும்.…

Read more

உள்ளதைப் பேசு

காலிங் பெல் அடித்தது. கீதா எரிச்சலுடன் வந்து கதவைத் திறந்தாள். “மகாராணிக்கு இப்பதான் நேரம் கிடைச்சதா? இன்னும் கொஞ்சம் லேட்டா வரதுதானே?” என்று வெடுக்கென்று சொன்னாள். வாசலில் அமைதியாக நின்ற கமலா, “மன்னிச்சுக்கங்க அம்மா.. பாப்பாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல.. அதான்…

Read more