இலக்கியம்

நீல நிலவு

ஈரநிலவின் நறுமணம் கசியும் வெளியில்இந்த இரவின் கிளைகளில்வெண்முத்துப்பரல்களாய்க் குலுங்கும்ஓராயிரம் நிலாமொட்டுகளின் நெற்றியில்தன் மென்விரல்களால்காற்றைத்தொட்டுமுத்தமாய்ப் பதிக்கிறதுஒளித்துகள்களால் நெய்யப்பட்ட கவிதையைஆடையாய் உடுத்த இரவு ஆசைகளின் அடர்ந்த மெளனத்தில்தூங்காதிருக்கும் கவிதைகள்இரவின் காதில் ரகசியமாய் மொழிபவற்றைதன் யாழில் சேமித்துக்கொள்கிறான்யாரோ ஒரு பாணன் அப்பாடல்களின் வெளிச்சம்பட்டுசுடரின் முத்துகளெனநீ தந்த…

Read more

அறிவெழுச்சி: 11

This entry is part 11 of 12 in the series அறிவெழுச்சி

கிரேக்கத்திலிருந்து ரோம்வரை: அஸ்பாசியாவின் நினைவு எவ்வாறு பயணித்தது? “ஒரு நாகரிகம் மற்றொரு நாகரிகத்தை வெல்லலாம்; ஆனால் அறிவு எப்போதும் எல்லைகளைக் கடந்து பயணிக்கும்.” முன்னுரை அஸ்பாசியா வாழ்ந்த காலத்தில், உலகின் அறிவுசார் மையமாக ஏதென்ஸ் விளங்கியது. அப்போது ரோமாபுரி இன்னும் வளர்ச்சியடைந்து…

Read more

ஞான நூல்கள் – 20 & 21

This entry is part 10 of 11 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 20 ஹெசியோட்டும் திருவள்ளுவரும் – உழைப்பும் நீதியும் இணையும் இடம் உலகின் பழமையான ஞானநூல்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு வாசிக்கும்போது, கிரேக்கத்தின் ‘வொர்க்ஸ் அண்ட் டேஸ்’ (Works and Days) நூலும் தமிழின் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான ஒற்றுமைகளை வெளிப்படுத்துகின்றன. இவ்விரு…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 9

நவீன வரலாற்றாய்வில் பாகோஸ் – கொடூரமான சதிகாரரா அல்லது மிகைப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரியா? பாகோஸைப் பற்றிய நவீன வரலாற்றாய்வின் முக்கியமான கேள்வி, பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய ஆசிரியர்கள் உருவாக்கிய உருவகம் எவ்வளவு வரலாற்று உண்மையைப் பிரதிபலிக்கிறது என்பதாகும். டியோடோரஸ், ஜஸ்டின்…

Read more

வேர்கள்

முற்றத்தில் நின்றிருந்த அந்த ஒற்றை வேப்பமரம், அதிகாலைப் பனியில் நனைந்து சொட்டிக் கொண்டிருந்தது. மாரிமுத்துவின் கையில் இருந்த பழைய இரும்புப் பெட்டி அப்படியொன்றும் கனக்கவில்லை. திணிக்கப்பட்ட ஒன்றிரண்டு துணிமணிகள் என்ன கனத்து விடப்போகின்றன? வீட்டின் கதவை இழுத்துப் பூட்டியபோது எண்ணெய் இடப்படாமல்…

Read more

அழகிய கண்களைக் கொண்ட மனிதன் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

… எங்கள் வாழ்நாள் முழுவதும்
இப்படிப்பட்ட விஷயங்கள்
நடந்து கொண்டிருக்குமோ என்று—
இப்படிப்பட்ட
வலிமையுடனும் அழகுடனும்
யாரும் இருப்பதை
எவரும் விரும்ப மாட்டார்களோ என்று— …

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 12

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: ஆச்சர்யம்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: ஒளியின் தவிப்பு!

This entry is part 52 of 54 in the series அசுரவதம்

எதைக் கண்டு அனுமன் அச்சத்தில் நின்றான்? அவன் அந்த வனத்துக்குள் வரும் முன்பு இராவணன் தூக்கம் தொலைத்து மஞ்சத்தில் வீழ்ந்திருந்தான். வானம் இன்னும் இருண்டு, “என்னைத் தொட்டு ஒட்டிக்கொள்” என்று பெண்களுக்குச் சொல்வது போல மையாய்க் கறுத்திருந்தது. அவன் கண்கள் ஆகாயத்தை…

Read more

இலக்கியம் என்னும் பாதை 

அன்பதன் தோற்றம் என்ன?… ஆற்றலின் ஏற்றம் என்ன?மன்பதை வாழ்வு தன்னில்… மாண்பமை நோக்கம் என்ன?இன்பமே வேண்டும் யார்க்கும்…ஏற்படும் துன்பம் ஏன்ஏன்?என்பன கேள்வி என்றால்….இலக்கியம் காட்டும் இங்கே மண்ணிதில் விதையாய் வீழும்…. மழையென அதுவே மீளும்கண்ணதன் உறுப்பாய்க் காணும்… கருவிழிப் படலம் ஆகும்பெண்ணவள்…

Read more