கவிதை

அன்பின் துளிகள்..

மண்பட்ட பாவாடையோடு மண்ணிலே விளையாடினாய்விறகடுப்பில் பூத்த புகையில் கண் சிவந்து சிரித்தாய்இந்தக் கிராமம்தான் என் உலகம்என் குடும்பம்தான் என் சந்தோஷம்இந்தச் சிறு வட்டமே என் வானம்உனக்கும் இங்குதான் இடமென்றுஇத்தனை வருடங்களாய் நான் வாழ்ந்தேன்வெளியிடம் வேறு தேசம் தெரியாமலேஎன் வாசல் தாண்டிப் போகாதே…

Read more

நல்லாச்சி – 10

This entry is part 11 of 12 in the series நல்லாச்சி

ஐந்தாறு நாட்களாய்அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கிறது வீடுபருப்புப்பொடியும் ஊறுகாய்களும் இன்னபிறவும்பாட்டிலில் அடைபட்டுக்கொண்டிருக்கின்றனஆரவாரம் கண்டு புருவமுயர்த்துகிறாள் பேத்தி‘அண்ணன் வெளிநாட்டுக்குப்போறாம்லா’குறிப்பறிந்து கூறுகிறாள் நல்லாச்சி பத்தில் ஒரு பங்கைச் சேமித்து வைஅன்றாடம் கணக்கெழுதுநிர்வாகப்பாடத்தை மூளையில் திணிக்கின்றனர்அப்பாவும் அம்மாவும்வம்புவழக்கில் போய் விழாதேஅறிவுரையுடன்தலைவலி வாசனாதி திரவியங்களுக்குதுண்டு போட்டு வைத்தாயிற்று அக்கம்பக்கத்தினர்தாத்தா கிணற்றடியில்துணி வெளுக்கக்…

Read more

நல்லாச்சி -9

This entry is part 9 of 12 in the series நல்லாச்சி

வயலில் நடக்கும் அறுவடையை
மேற்பார்வையிடவென
தொற்றிக்கொண்டு கிளம்பினாள் பேத்தியும்
கேள்விகளும் பதில்களுமாய்
வழிப்பாதையை நிரப்பிக்கொண்டே சென்றாலும்
அறுவடை என்பது ஒரு வடையல்ல என்பது
சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது அவளுக்கு

Read more

நல்லாச்சி -8

This entry is part 7 of 12 in the series நல்லாச்சி

கைபேசியில் தற்படமெடுக்ககற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்திகால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள் பூக்களின் பின்னணியில் ஒன்றுபூவுடன் முகம் பொருத்தி ஒன்றுகன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்றுகலர் கோழிக்குஞ்சைதலையிலமர்த்தி மற்றொன்றெனகைபேசியின் மூளையைபடங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள். சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்ததாத்தாவைக்கூடசெய்தித்தாள் வாசிக்கும்அசந்த நேரத்தில்காலையொளியின் பின்னணியில் படமெடுத்தாயிற்று ‘எல.. போட்டோ புடிச்சா ஆயுசு கொறையும்’என நழுவிக்கொண்டிருக்கும்நல்லாச்சிக்கும்ஆசை…

Read more

நல்லாச்சி – 6

This entry is part 6 of 12 in the series நல்லாச்சி

தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்கரேலென்றிருக்கும் வானத்தில்ஆட்டுக்குட்டிகளாய்மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம் தலைப்பிரசவம்போல்எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்மழையின் வீச்சிலிருந்துநெல்லைக்காப்பாற்றும் முகமாய்சாக்குப்பையில்மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சிஉழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்திகேட்கிறாள்மழை எப்போது பெய்யுமென ‘மழை பெய்யறதும் மக்க பொறக்கறதும்மகேசன் கணக்குல்லா’பதிலாகவும் புலம்பலாகவும்ஒரே நேரத்தில் சொன்னபடிமெலிதான இடிச்சத்தத்தைச் செவிமடுக்கும் ஆச்சியைதாக்குகிறது…

Read more

பாட்டுக்கு பா! -3

திண்ணையில் பேச்சென்றுத் தேர்போல் அசைந்தாடிவண்ணமாய் வந்தமர நேரமில்லை – கண்பார்த்துவாதி பிரதிவாதி வம்பு வழக்கெல்லாம்காதிலவன் சொன்ன கதை பதில் சொல்லத் தெரியாது விழித்திட்டவேதியனைச் சிறையிட்டத் தன்மகனை வேண்டிட்டஆதிசிவன் மண்டியிட பிரணவத்தின் விரிவுரையேகாதிலவன் சொன்ன கதை! ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காணாதுவீதியிலே சென்றவனை…

Read more

படத்துக்கான பா – 2

1 – வேதம் படித்தவர்க்கும் வித்தை அறிந்தவர்க்கும்நாதம் இசைப்போர்க்கும் நல்கவில்லை – பேதமில்லாபாதங்கள் பட்டநிலம் பார்த்தது மோட்சமதுமாதவன் தானுண்ட மண் 2 – சிலிக்கன் வழிவந்த சில்லுப் புரட்சிகலிகாலம் ஆளும் கம்ப்யூட்டர் ஆதியெங்கே?பாதாதி கேசத்தில் அண்டம் அளந்திட்டமாதவன் தானுண்ட மண்! 3…

Read more