This entry is part 6 of 13 in the series கொங்கு வட்டார வழக்கு
ஏனுங்கா காடெல்லாம் ஒழவோட்டியாச்சா.
இல்ல கண்ணு,நேத்து பேஞ்ச மழ கனமா போச்சு,ரண்டு நாளு காடு காஞ்சாதா ஒழவோட்டோனும்..
அடக்கெரவத்த, அக்கோட்ட ( அந்தப்பக்கம்) மழையே இல்லைங்கா..
மேகங்கண்ட பக்கம் பேஞ்சுட்டு போயிறுமாட்ட போ..
அதாம் பாருங்க. இங்க ஈரங்காயோனுங்கறீங்க. அக்கோட்ட காடு காஞ்சு போயி ஒழவு ஓட்டமுடியாம கெடக்குது. மானத்துக்கு என்னதா போங்காலமோ.