சஞ்சாரம் – யாழினி சென்ஷி

பிரக்ஞைகளை கூடுகட்டி பெருத்திருந்த வயிற்றின் தாரைகள் குறுக்கும் நெடுக்கும் பலதுமாய் சுருங்கிக்கிடக்கிறது
மௌனத்தின் மெய்கள்
பதப்படுத்திய வெளிச்சமாகினும்
அறை முழுவதும் அடக்கவியலா ஆழ்துயரங்களின்‌ கருக்கலில் ஒவ்வொரு முறையும் கருத்தரித்து விடுகிறேன்
பலவீனஙகளின்‌ சிறகை
நிமிட்டியபடி இம்முறையும்
விட்டில் பூச்சிகள்தான்
பிறந்திருக்கிறது

*******

பள்ளத்தில் மீந்திருந்த
மழை நீரில்
மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது
இரு மீன்கள்.
இலையோடு
உதிர்ந்த நிழலையும்
உள்வாங்கிய நீர்
மெல்ல வற்றியதும்
இலைகள் சிறகாகி
பறக்கத்தொடங்கியது
மீன்கள்

Author

Related posts

வழி நடத்தும் நிழல்கள்

நல்லாச்சி – 12

க. அம்சப்ரியா கவிதைகள்