படத்துக்கான பா – 1

1 – என்னதப்பு செய்தாலும் ஏச்சுக்கள் ஏதுமின்றிஇன்னுமிது கூடாதென் றின்முகம் மாறாதுதன்னோடு சேர்த்துபின் தக்கபுத்திச் சொல்லுகையில்அன்பை அளிப்பாள் அணைத்து.— பிரசாத் வேணுகோபால் 2 – வாதம் பலசெய்வாள் வக்கணையாய் எப்பொழுதும்பேத மிலாமலே பேத்தியவள் என்னிடமேபுன்னகைப்பூ தொக்கிநிற்கப் பொற்கரத்தால் மெல்லிழுத்துஅன்பை அளிப்பாள் அணைத்து–கண்ணன் ராஜகோபாலன்…

Read more

கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2

This entry is part 1 of 3 in the series கொங்கு வட்டார வழக்கு

#கூடப்போடறது..#கொங்குவட்டாரவழக்கு. என்னனு தெரில ரண்டு நாளா இந்த வார்த்த உருட்டீட்டே கெடக்கு. கூடப்போடறது- தொலச்சறது, இழப்பது இப்படி நேரத்துக்கு,எடத்துக்கு தகுந்தமாதிரி பொருள் கொள்ளலாம். ஏனுங் சுப்பாயக்கா,மாப்ள எங்கியோ வெளிநாடு போறதா சொல்லீட்டு இருந்தாரு கெளம்பீட்டாப்ளயா.. அட  ஏனப்புனு நீ வேற.. வெளிநாடு…

Read more

அசுரவதம் : 2 – காலகேய தானவன்.

This entry is part 2 of 4 in the series அசுரவதம்

காமவள்ளி தன் எச்சரிக்கையை மீறி தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்த இளைஞன் சட்டென்று தன் இடையில் இருந்த அந்தக் குறுவாளை எடுத்து அவளை நோக்கி வெகு  வேகமாக வீசினான்.    அந்நேரத்தில் ஒரு பெரிய  ஆண் சிங்கம் காமவள்ளியின் பக்கவாட்டில்…

Read more

சூழலினால் ஏற்படுத்தப்படும் தனிமை

இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை மூன்று காரணத்தால் தனிமையில் இருப்பதாகப்  பார்த்தோம். அதில் முதல் பிரிவினரைப் பார்ப்போம் – அதாவது சூழ்நிலையால் தனிமையில் வாழ நேரிடுபவர்கள். இது நமக்கு மிகவும் பழக்கமானது, ஆனால் அதன் ஆழத்தை நாம் முழுமையாக உணரவில்லை. சில சமயம், நாம் அறிந்திருந்தாலும், நம்மை பாதிக்காதவரை அது நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரு வித மறுப்பில் (denial) இருப்போம்.

Read more

பறந்து போ – திரையனுபவம்!

’பறந்து போ’ இயக்குநர் ராமிடமிருந்து வந்திருக்கும் ஒரு வித்தியாசமான படம். பொதுவாக தீவிரத்தன்மை கொண்ட படங்களையே பெரும்பாலும் தந்து வந்த அவர் மிக மென்மையான,  குதூகலமான ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைத் தந்து பார்வையாளர்களை  ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். நடுத்தர வர்க்கம் என்றோர் இனமுண்டு,…

Read more

எங்கள் மேசையிலிருந்து

இணையத்தில் தமிழ்க்குழுமங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து “பண்புடன்” என்ற சொல்லுக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. குழும உறுப்பினர்களுக்குக் ‘கட்டற்ற சுதந்திரம்’ என்ற தாரக மந்திரத்துடன் கூகுள் குழுமத்தில் ஆரம்பிக்கப்பட்ட ”பண்புடன்” குழுமம், பல்வேறு விவாதங்களை, மோதல்களை, கதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை, உள்ளடக்கிய…

Read more

ஏஐ உலகில் சீனாவின் ஏற்றம்!

தோல்வி ஒரு நாட்டை கண் மண் தெரியாத வேகத்தில் முன்னேற்றுமா? அதுவும் ஒரு விளையாட்டில் ஏற்பட்ட தோல்வி!

2017 மே மாதம், சீனாவின் வுஜென் நகரில் ஒரு பழமையான விளையாட்டு மைதானம் பரபரப்பில் திளைத்தது. உலகின் தலைசிறந்த Go விளையாட்டு வீரர் கே ஜீ, கூகுளின் DeepMind உருவாக்கிய AlphaGo எனும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) செயலியுடன் மோதினார். இது வெறும் விளையாட்டல்ல; மனித மூளைக்கும் இயந்திர மூளைக்கும் இடையே ஒரு புரட்சிகர சவால்.

Read more

மழைக் கவிதைகள்

எத்தனை யுகங்கள் 

கடந்திருக்கும்

இந்த பிரியத்தின் 

மழைத்துளி!

அதன் கண்ணாடி 

மோன உடல்

மிதந்தலைந்தது 

எங்கெங்கே!

Read more

இன்னுமோர் இரவு

நட்சத்திரப் பூத்தையல்

காலத்தறி நெய்த

இன்னுமொரு இரவு.

கண் திறவா 

பிள்ளையின் 

இதழ் சிரிப்பாய்

வெள்ளி குழைத்த

நிலாத்துண்டு.

Read more