# மினிமலிசம்: அர்த்தமுள்ள வளர்ப்புக்கான வழிகாட்டி இன்றைய வேகமான உலகில், குழந்தைகளை வளர்ப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. பிறந்தநாள் பரிசுகள், வாராந்திர ஷாப்பிங், பிராண்டட் உடைகள், திரையரங்க பொழுதுபோக்கு, துரித உணவுகள்—இவை அனைத்தையும் அன்பின் வெளிப்பாடாகக் கொடுக்கிறோம். ஆனால், இந்த…
தமிழில் எண்ணற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து இக்கட்டுரை சற்று வேறுபட்டதுதான். ஏ ஐ என்றால் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரையும் போலவே எனக்கும் அது மட்டும்தான் தெரியும். இருந்தாலும் ai பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பேசப் போகிறேன். ஒரு பார்வையற்றவனின் கோணத்தில் அன்றாட வாழ்வில் சேர்க்கை நுண்ணறிவின்மூலம் நான் பெற்றதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
குப்பைகளைத் தரம்பிரிக்க
கற்றுக்கொடுத்திருக்கிறார்களாம் பள்ளியில்
மக்கும் குப்பை மக்காக் குப்பை என
உதட்டுக்குள்ளேயே அடிக்கடி
சொல்லிப்பார்த்துக்கொள்கிறாள் பேத்தி
#கூடப்போடறது..#கொங்குவட்டாரவழக்கு. என்னனு தெரில ரண்டு நாளா இந்த வார்த்த உருட்டீட்டே கெடக்கு. கூடப்போடறது- தொலச்சறது, இழப்பது இப்படி நேரத்துக்கு,எடத்துக்கு தகுந்தமாதிரி பொருள் கொள்ளலாம். ஏனுங் சுப்பாயக்கா,மாப்ள எங்கியோ வெளிநாடு போறதா சொல்லீட்டு இருந்தாரு கெளம்பீட்டாப்ளயா.. அட ஏனப்புனு நீ வேற.. வெளிநாடு…
இணையத்தில் தமிழ்க்குழுமங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து “பண்புடன்” என்ற சொல்லுக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. குழும உறுப்பினர்களுக்குக் ‘கட்டற்ற சுதந்திரம்’ என்ற தாரக மந்திரத்துடன் கூகுள் குழுமத்தில் ஆரம்பிக்கப்பட்ட ”பண்புடன்” குழுமம், பல்வேறு விவாதங்களை, மோதல்களை, கதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை, உள்ளடக்கிய…
தோல்வி ஒரு நாட்டை கண் மண் தெரியாத வேகத்தில் முன்னேற்றுமா? அதுவும் ஒரு விளையாட்டில் ஏற்பட்ட தோல்வி!
2017 மே மாதம், சீனாவின் வுஜென் நகரில் ஒரு பழமையான விளையாட்டு மைதானம் பரபரப்பில் திளைத்தது. உலகின் தலைசிறந்த Go விளையாட்டு வீரர் கே ஜீ, கூகுளின் DeepMind உருவாக்கிய AlphaGo எனும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) செயலியுடன் மோதினார். இது வெறும் விளையாட்டல்ல; மனித மூளைக்கும் இயந்திர மூளைக்கும் இடையே ஒரு புரட்சிகர சவால்.
எத்தனை யுகங்கள்
கடந்திருக்கும்
இந்த பிரியத்தின்
மழைத்துளி!
அதன் கண்ணாடி
மோன உடல்
மிதந்தலைந்தது
எங்கெங்கே!
நட்சத்திரப் பூத்தையல்
காலத்தறி நெய்த
இன்னுமொரு இரவு.
கண் திறவா
பிள்ளையின்
இதழ் சிரிப்பாய்
வெள்ளி குழைத்த
நிலாத்துண்டு.
1980களின் இறுதியில் இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேச வேண்டுமானால் அது மிகக் கடினம். ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டில் தொலை பேசி இணைப்பு இல்லை. அண்ணனின் அலுவலகத்தில் அழைத்தால் கூட ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். முதல் நிமிடமே $2.25 எனக் கட்டணம் மிக அதிகம். இப்போது போல இலவசமாக கூப்பிட இயலாது. ஆனால், இப்போது அப்படியில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் குளிர்காலங்களில் பொதுவாகவே ஒருவித மன அழுத்தம் வந்து சேரும்.