என்ன செய்ய?

இருந்தபோது தெரியவில்லை இதயமும் இருப்பும்
உணர்ந்துவிட்டான் இப்போது!
கிடைக்கையில் உணரவில்லை கிட்டுவது பெரிதென
அறிந்துகொண்டான் இப்போது!

அன்பென அறிந்தே செய்தவனின் அலட்சியத்தை
அள்ளியெறிந்தான் இப்போது!
தனிமையைத் துணைகொண்டவன் தவிக்கிறான்!
அணங்கவளின் நினைவை என்ன செய்ய.

Author

Related posts

வரலாற்றில் பொருளாதாரம் – 23

சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 10

தொப்புள் கொடி பந்தம்