குழந்தைகள் உலகம்

சிரிப்போம்! பாடுவோம்! மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!
சிறுவர்கள் உலகில் – மகிழ்ச்சி மலரட்டும்

வானவில் போல் கனவுகள் தொடரட்டும்
வாழ்க்கையில் இன்பம் நிறைந்து பரவட்டும்
குயில் பாட்டுடன் நாமும் பாடுவோம்
மயிலுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக ஆடுவோம்

பசுமை மரத்தில் பறவைகள் பள்ளிக்கூடம்
மழைத் தூறல் தரும் ராகம்
புத்தியில் உரைத்திட கேள்விகள் ஓடும்
பதில்கள் தேடி நம் பயணம் போகும்!

பூவும் பறவையும் நண்பர்கள்தானே?
புன்னகை பூத்த முகத்துடன் ஆடுவோம்
வண்ணத்துப்பூச்சி பறப்பது போல
வெற்றியுடன் பறந்து திரிந்து மகிழ்வோம்

மழையில் நனைந்து மகிழ்வோம்
மரங்களைச் சுற்றி ஓடி விளையாடுவோம்
பாட்டும், நடனமும் நம் மகிழ்வின் தாக்கம்
பார்ப்போர் அனைவரும் சேர்ந்து மகிழ்வர்

சிரிப்போம்! பாடுவோம்! மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!
சிறுவர்கள் உலகில் – மகிழ்ச்சி மலரட்டும்

Author

  • தமிழின் மீதும், தமிழ்ப்புத்தகங்கள் மீதும் தீராப்பற்றுடைய ருக்மணி வெங்கட்ராமன், M.A.,M.Sc., B.Ed. பட்டங்கள் பெற்றவர். சில வருடங்கள் பண்ருட்டியில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும், பின்னர் நெய்வேலியில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றியவர். 20 ஆண்டு காலம் கல்வித்தொண்டு புரிந்த இவர் சிறந்த எழுத்தாளர். நுட்பமான எழுத்திற்குச் சொந்தக்காரர். இது வரை 16 கதைத்தொகுப்புகளில் எழுதியுள்ளார்.

Related posts

அனைவரும் சமம்

வாழ்த்துகிறோம்

வானவில் பூ