iyappan krishnan

அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)

This entry is part 22 of 30 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் அந்தப் பகுதி, மாலை முடிந்த முன் இரவுப் பொழுதில் ஒருவித இரம்மியமான நீல நிற ஒளியில் திளைத்திருந்தது. ஆகாயத்தை முட்டும் ஆச்சா மரங்களும், ஆகாயப் பந்தலில் ஊஞ்சலாடும் விழுதுகளும், சுற்றிப் படர்ந்த காட்டுக் கொடிகளும் என எல்லாம் சேர்ந்து நிலவின்…

Read more

அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.

This entry is part 21 of 30 in the series அசுரவதம்

​​சடாயுவின் உடல் தகனமான அந்தப் பாறையை விட்டு இராமனும் இலக்குவனும் நகர மறுத்தனர். எரியும் நெருப்பு அணைந்து புகையத் தொடங்கியிருந்தது. அந்தப் புகையில் இராமனுக்குத் தன் தந்தை தசரதனின் முகமும், தியாகத்தின் வடிவமான சடாயுவின் முகமும் மாறி மாறித் தெரிந்தன. சடாயுவின்…

Read more

அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்

This entry is part 20 of 30 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் பசுமைப் போர்வைக்கு மேலே, நீலக்கடலென விரிந்திருந்த ஆகாயத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது. தனக்கு மனிதர்களைத் தவிர யாராலும் அழிவில்லை என்ற மமதை தலைக்கேறியதால், வலியச் சென்று போரிட்டு குபேரனிடமிருந்து பறிக்கப்பட்டதும் தேவசிற்பி விஸ்வகர்மாவினால் வடிக்கப்பட்டதுமான அந்த புஷ்பக விமானம்,…

Read more

அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.

This entry is part 19 of 30 in the series அசுரவதம்

​பஞ்சவடியின் ஆகாயம் அன்று ஏனோ ஒரு விசித்திரமான கோலத்தைக் கொண்டிருந்தது. மேற்கே சாயத் தொடங்கியிருந்த கதிரவன், தன் பொற்கரங்களால் மேகங்களைத் தழுவிக்கொண்டிருந்தாலும், அந்த வானம் தங்க முலாம் பூசியதாகத் தோன்றவில்லை. மாறாக, போர்க்களத்தில் சிந்த இருக்கும் வீரர்களின் உதிரத்தை அள்ளித் தெளித்தது…

Read more

அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.

This entry is part 18 of 30 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, நடுப்பகலின் வெய்யில் தாக்கத்தில் பளீரென மின்னுவது போல ஒளிர்ந்திருந்தது. அந்த ஒளி இலக்குவனின் ஆணையை ஏற்று யாரும் அருகில் வர வேண்டாம் என்று எச்சரிப்பது போல பார்ப்பவரின் கண்கள் கூசும் வண்ணத்தில் இருந்தது. கோதாவரியின் அலைகளும் கூட ,…

Read more

அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்

This entry is part 17 of 30 in the series அசுரவதம்

ஆழ்ந்த வனத்தின் அமைதியைப் பிளந்துக் கொண்டு, “ஓ.. சீதா, ஓ.. இலக்குவா..” என்ற குரல் உதவிக்காகக் கெஞ்சும் அவல ஓசையாய் வெளிவந்தது. இந்தக் குரல் இராமனின் உயிரே அவனது உடலை விட்டுப் பிரிந்து செல்வதுபோல, கேட்பவர்களின் இதயத்தைக் கிழிக்கும்படி ஒலித்தது. ‘யார்…

Read more

அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்‌குவா

This entry is part 16 of 30 in the series அசுரவதம்

இராமன் குழப்பத்துடன் நின்றான். ​இப்போது தன் முன் நிற்கும் இந்த மான், தான் அழித்த மானேதானா? அல்லது மாரீசனின் மாய மான் வேட்டை முடிவுக்கு வந்த பின்பும், இந்த வனத்தில் வேறொரு தங்க மான் இருந்ததா? தான் எய்த அஸ்திரத்தின் வலிமைக்கு,…

Read more

அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்

This entry is part 15 of 30 in the series அசுரவதம்

கர-தூஷணர்களின் தாயான இராகா, இலக்குவனைச் சுட்டிக்காட்டி “உனக்கான மிகப்பெரிய தடையைப் பார்” என்றாள். விச்ரவஸ் முனிவருக்கும் அவளுக்கும் பிறந்தவர்களே கரனும் தூஷணனும். மகன்களின் அழிவுக்குப் பழிவாங்க, அவள் இப்போது இராவணனின் வருகையைச் சாதகமாக்கிக் கொண்டாள். கைகேசியின் தங்கையும் இராவணனின் சிற்றன்னையுமான இராகா. ​இராவணன்…

Read more

நீலஒளியின் ரகசியம்

கோடை மழை பெய்து ஓய்ந்திருந்தது. நெல்லூர்ப் பட்டியின் மண் ஈரத்தில் சிவந்து, இறந்த உடலைத் தழுவிய பச்சிலை வாசனை போலக் கனமாக நின்றது. மழையோடு வந்த காற்று, தனித்து பேயைப் போல கிளைகளை விரித்துக் கிடக்கும் இலுப்பை மரத்தின் சருகுகளைத் தொட்டு,…

Read more

அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!

This entry is part 14 of 30 in the series அசுரவதம்

மாரீசன் மாயமான் உருவெடுத்து காடுகளில் அலைந்துக் கொண்டிருந்தான். உடல் தங்கமாகவும், கொம்புகள் மாணிக்கமும் பதித்தது போலவும், உடலில் புள்ளிகள் பலவண்ணமாய் ஒளிரும் மாயமானாக உருமாறி, அவன் மனம் இராமனின் முன் செல்வதை விரும்பவில்லை. உயிர் பயம் காரணமில்லை. சீதை என்னும் பெண்ணைக்…

Read more