உன் உழைப்பால் சிகரம் தொடு!

அடுத்தவரின் உழைப்பை அபகரித்தல் முரணே!
தடுத்ததனை தவிர்ப்பதே தருமத்தின் முறையே!
எடுக்கின்ற காரியத்தில் எதிர்வரும் தடைகள்
முடுக்கிவிடும் திறனை முயற்சிக்கு முதற்கல்!

உழைக்கின்ற சுயமும் உள்ளத்து உறுதியும்
விழைகின்ற யாவிலும் வெற்றிக்கு வழியே!
உடன் உழைப்போர்க்கும் வழியை விடு!
உன் உழைப்பால் சிகரம் தொடு!

Author

Related posts

வலைப்பூ – 3

அம்மா மாறி விட்டாள்

நல்லாச்சி – 28