18
கடினமான உழைப்பு மட்டுமே லாபம் தந்து விடுமா?
நிச்சயமாக ஒருபோதும் அதுமட்டுமே உங்களுக்கு லாபத்தைக் கொண்டு வராது – நான் சொல்லப் போகும் இந்த 5 விசயங்களைக் கடைப்பிடிக்காமல். ( இது நேர்மையாக நேரடியாக அனுபவபூர்வமாக அறிந்த உண்மை )
உண்மையை ஒப்புக் கொண்டுத்தான் ஆகவேண்டும்.
லாபம்தான் எந்த வணிகத்திற்குமான உயிர்த்துடிப்பு.
இன்ஸ்டாகிராமில் நம்மை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையோ, ‘காஃபி ஷாப்’களின் சந்திப்புகளின் எண்ணிக்கையோ, “நான் எவ்வளவு ‘பிஸி’ தெரியுமா? ” என்பதோ அல்ல. மாறாக, உங்கள் லாபம் என்னவென்று கண்டறிதலே.
யாரும் உங்களிடம் சொல்லாத சிலவற்றைப் பகிர்கிறேன். வணிகத்தில் இதுதான் முதல் ஆண்டா?
அப்படியானால் அது பெரும்பாலும் பச்சிளம் குழந்தையைப் பாதுகாப்பது போலத்தான்.
நீங்கள் ஒரு வணிகத்தை மட்டும் உருவாக்கவில்லை. உங்கள் கணினியின் ‘எக்செல்’ தாளுடன் உங்கள் அன்றாடங்கள், பின்னடைவுகள், நடைமுறைகள் மற்றும் தீவிர உறவை உருவாக்குகிறீர்கள். ( கூடவே உடன் எழும் சந்தேகங்களையும் )
“அடடா! இது சரியாக வேலை செய்யும் போல” என்பதிலிருந்து, “அட! நாம் லாபம் சம்பாதிக்கிறோம்” என்பதை நோக்கி எப்படி நீங்கள் நகர்வீர்கள்?
1. உங்கள் எண்களை அறிந்து கொள்ளுங்கள் – முன்னரே மிக நன்றாக அறிமுகமானது போல.
உங்கள் வங்கிக்கணக்கின் நிலையைக் கவனிப்பது மட்டும் வேலைக்காகாது. உங்கள் அடக்க விலை, விற்பனை விலை, இரண்டுக்குமான வேறுபாடு, செலவுகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் கண்காணியுங்கள்.
நீங்கள் 150 ரூபாய்க்கு உற்பத்தி செய்யும் பொருளை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தால் அது “அழகான” தாராள மனப்பான்மை அல்ல. மாறாக, நன்கொடை
2. கட்டணம் வசூலிக்கப் பயப்பட வேண்டாம் (நீங்கள் ஒன்றும் தள்ளுபடிக்கடை நடத்தவில்லை)
நீங்கள் ஒரு மதிப்பை உருவாக்குகிறீர்கள். ஒரு சிக்கலைத் தீர்த்து வைக்கிறீர்கள். நீங்கள் மழையாகவோ, சூரிய ஒளியாகவோ பிரகாசிக்கிறீர்கள். எனவே சாலையோரச் சோளத்திற்காக நீங்கள் பேரம் பேசுவது போல, உங்கள் பொருளுக்கான விலையைப் பேரம் பேசுவதை நிறுத்துங்கள்.
3. உங்கள் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். அதற்காகக் கஞ்சத்தனம் வேண்டாம்.
கவனமாகச் செலவு செய்வது கஞ்சத்தனத்தில் வராது. கருவிகள், மனிதர்கள் மற்றும் அமைப்புகளில் முதலீடு செய்யுங்கள், அவை உண்மையில் நேரத்தையும் அளவையும் உங்களுக்காகச் சேமிக்கும் கருவிகள்.
4. வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து விற்பனை செய்யுங்கள்
உங்களிடம் இருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கம் போன்றவர்கள். அவர்களுக்காகக் கூட்டியோ குறைத்தோ விற்பனை செய்யுங்கள்.
மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் ஏற்கனவே உங்களை நம்புகிறவர்களாக இருப்பார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து வருவதன் மூலம் அவர்கள் உங்கள் போட்டியாளர்களிடம் செல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5. மதிப்பில் கவனம் செலுத்துங்கள் – அளவுகளில் அல்ல
எல்லாவற்றையும் செய்து முடிப்பதென்பதல்ல – ‘செய்வன திருந்தச் செய்’ என்பதுதான் இன்றியமையாதது.
நீங்களே எல்லாத் தளங்களிலும் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
ஒவ்வொரு ‘பேனலி’லும் போய்ப்பேச வேண்டும் அல்லது ஒவ்வொரு ‘கவர்ச்சிகரமான’ யுக்திகளுக்கும் ‘ஆம்’ என்று சொல்ல வேண்டும் என்பதில்லை.
புத்திசாலித்தனமாக தேர்வு செய்யுங்கள். லாபம் வேண்டுமென்றால் முழுகவனத்தையும் செலுத்துங்கள். லாபம் விரும்புவது அதைத்தான்.
நினைவில் கொள்ளுங்கள்,
வியாபாரமொன்றும் ஒரு வேக ஓட்டப் பந்தயமல்ல. அது ஆழமான உணர்ச்சிக் குவியல்களாலான ‘ரோலர் கோஸ்டர்’ அனுபவம்.
ஆனால், நீங்கள் லாபத்தைப் பார்க்கத் தொடங்கும் போது, அது சிறிய சொட்டாக இருந்தாலும் கூட, இந்தப் பிரபஞ்சம் இறுதியாக உங்களோடு ஒரு கை உயர்த்திக் கைதட்டுவது போல உணர்வீர்கள்.
உங்கள் வணிகத்தைப் புத்திசாலித்தனமாகக் கட்டியெழுப்புங்கள். உங்கள் பொருளுக்கான விலையைத் தைரியமாகத் தீர்மானம் செய்யுங்கள். அதன் மூலம் இலாபத்தை உருவாக்குங்கள்.