நாம நெனச்சதுதான் நடந்துச்சு. இந்த வாரம் கேக்குறதுக்கு ஒண்ணுமே இல்ல. ப்ரஜின், ப்ரவீன் & கமரு இவனுங்களோட சண்டை ப்ராங்க் அப்பறம் புதுசா உள்ள வந்த ஆளுங்கள பத்தி பழய ஆளுங்க கிட்ட கேக்குறது. இவ்வளவுதான். கூடவே ஒரு எவிக்ஷன். இதத்தான் …
சிறுவர் பாடல்கள்: அன்னை மொழி – அழ. வள்ளியப்பா
குருவி ஒன்று மரத்திலேகூடு ஒன்றைக் கட்டியேஅருமைக் குஞ்சு மூன்றையும்அதில் வளர்த்து வந்தது. நித்தம், நித்தம் குருவியும்நீண்ட தூரம் சென்றிடும்.கொத்தி வந்து இரைதனைக்குஞ்சு தின்னக் கொடுத்திடும். “இறைவன் தந்த இறகினால்எழுந்து பறக்கப் பழகுங்கள்.இரையைத் தேடித் தின்னலாம்”என்று குருவி சொன்னது. “நன்று, நன்று, நாங்களும்இன்றே …
ஏனுங்கா காடெல்லாம் ஒழவோட்டியாச்சா. இல்ல கண்ணு,நேத்து பேஞ்ச மழ கனமா போச்சு,ரண்டு நாளு காடு காஞ்சாதா ஒழவோட்டோனும்.. அடக்கெரவத்த, அக்கோட்ட ( அந்தப்பக்கம்) மழையே இல்லைங்கா.. மேகங்கண்ட பக்கம் பேஞ்சுட்டு போயிறுமாட்ட போ.. அதாம் பாருங்க. இங்க ஈரங்காயோனுங்கறீங்க. அக்கோட்ட காடு …
மாரீசன் மாயமான் உருவெடுத்து காடுகளில் அலைந்துக் கொண்டிருந்தான். உடல் தங்கமாகவும், கொம்புகள் மாணிக்கமும் பதித்தது போலவும், உடலில் புள்ளிகள் பலவண்ணமாய் ஒளிரும் மாயமானாக உருமாறி, அவன் மனம் இராமனின் முன் செல்வதை விரும்பவில்லை. உயிர் பயம் காரணமில்லை. சீதை என்னும் பெண்ணைக் …
அவர்கள் அவளிடம் சொன்னார்கள்அவள் ஒரு அழகி அல்ல என்று,அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்தலட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்று. அவளது உடலின் எடை அதிகமென்றார்கள்அவளது சிரிப்பு உரத்ததென்றார்கள்அவளது தோலின் நிறத்தைக் குறிப்பிட்டார்கள்அவளது கனவுகள் மிக உயரமானவை,ஒரு பெண் எட்ட முடியாதவை என்றார்கள். அவர்கள் ஒருபோதும் …
போன அத்தியாயத்தில் சட்டங்கள், மற்றும் அதனை ஆவணப்படுத்துதல் பற்றிச் சொல்லிருந்தேன். மேலும், புணர்வு அது சார்ந்த குற்றங்களைக் குறைக்க திருமணம் என்கிற கோட்பாடு உருவானது என்பதைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இந்தத் திருமணம் என்னும் கோட்பாடுதான் இன்றைய நவீன பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக …
கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பிஅதற்குக் குளிராது வேட்டி போர்த்திசுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சிமுத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்சம்பாரம் பயணிக்கிறது அத்தோடுமுற்றத்து முருங்கை சாம்பார் உசத்தியாம்கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்நடவு வயல் வீரர்களை நோக்கிகுழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி …