1980களின் இறுதியில் இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேச வேண்டுமானால் அது மிகக் கடினம். ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டில் தொலை பேசி இணைப்பு இல்லை. அண்ணனின் அலுவலகத்தில் அழைத்தால் கூட ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேச …
பண்புடன் இதழ் - 1
நட்சத்திரப் பூத்தையல் காலத்தறி நெய்த இன்னுமொரு இரவு. கண் திறவா பிள்ளையின் இதழ் சிரிப்பாய் வெள்ளி குழைத்த நிலாத்துண்டு.
பெண் படைப்புலகம்
-
1980களின் இறுதியில் இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேச வேண்டுமானால் அது மிகக் கடினம். ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டில் தொலை பேசி இணைப்பு இல்லை. அண்ணனின் அலுவலகத்தில் அழைத்தால் கூட ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். முதல் நிமிடமே $2.25 எனக் கட்டணம் மிக அதிகம். இப்போது போல இலவசமாக கூப்பிட இயலாது. ஆனால், இப்போது அப்படியில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் குளிர்காலங்களில் பொதுவாகவே ஒருவித மன அழுத்தம் வந்து சேரும்.
-
நட்சத்திரப் பூத்தையல்
காலத்தறி நெய்த
இன்னுமொரு இரவு.
கண் திறவா
பிள்ளையின்
இதழ் சிரிப்பாய்
வெள்ளி குழைத்த
நிலாத்துண்டு.
-
எத்தனை யுகங்கள்
கடந்திருக்கும்
இந்த பிரியத்தின்
மழைத்துளி!
அதன் கண்ணாடி
மோன உடல்
மிதந்தலைந்தது
எங்கெங்கே!
-
தோல்வி ஒரு நாட்டை கண் மண் தெரியாத வேகத்தில் முன்னேற்றுமா? அதுவும் ஒரு விளையாட்டில் ஏற்பட்ட தோல்வி!
2017 மே மாதம், சீனாவின் வுஜென் நகரில் ஒரு பழமையான விளையாட்டு மைதானம் பரபரப்பில் திளைத்தது. உலகின் தலைசிறந்த Go விளையாட்டு வீரர் கே ஜீ, கூகுளின் DeepMind உருவாக்கிய AlphaGo எனும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) செயலியுடன் மோதினார். இது வெறும் விளையாட்டல்ல; மனித மூளைக்கும் இயந்திர மூளைக்கும் இடையே ஒரு புரட்சிகர சவால்.
-
பழநி மலை அடிவாரத்தில் உள்ள வடமதுரை கிராமத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. முருகன், ஒரு இளைஞன், சைக்கிளை மிதித்தபடி கோயிலுக்கு விரைந்தான். அவனுக்கு முருகர் மீது அளவற்ற பக்தி. சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும் என்று கடுமையாக நம்பினான். அசைவம் உடம்பில் பட்டால் பாவம் என்று அவன் மனம் சொல்லிக் கொண்டிருந்தது.
-
டயானாவின் அதீத அழகு அவளைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆண்களைப் போல இடதுபுறம் வகிடு எடுத்து மற்ற முடிகளை ஆங்காங்கே துண்டு துண்டாக வெட்டி பின்புறம் லேசாக ஒட்ட வெட்டிய அவளின் ஹேர்கட்தான் டயானாவின் அழகு மேலும் தனித் தன்மையோடு மிளிரக்காரணம் என்று நினைத்தாள். விதவிதமான ஓவர் கோட்டுகளுடன் முட்டி வரையிலான ப்ராக் அணிந்து அதற்கு மேட்சான சிறிய வகை தோடுகள் கைப்பைகள் கழுத்தில் முத்துப் பெண்டன்ட் என அவள் ஒரு ட்ரண்ட்செட்டராக வலம் வந்த காலத்தை அவள் புகைப்படமாக இருப்பதை எங்கே பார்த்தாலும் சேகரித்து வைத்துக் கொள்வாள்.
Featured Tech In This Week
1980களின் இறுதியில் இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேச வேண்டுமானால் அது மிகக் கடினம். ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டில் தொலை பேசி இணைப்பு இல்லை. அண்ணனின் அலுவலகத்தில் அழைத்தால் கூட ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேச …