நட்சத்திரப் பூத்தையல் காலத்தறி நெய்த இன்னுமொரு இரவு. கண் திறவா பிள்ளையின் இதழ் சிரிப்பாய் வெள்ளி குழைத்த நிலாத்துண்டு.
Category:
கவிதை
எத்தனை யுகங்கள் கடந்திருக்கும் இந்த பிரியத்தின் மழைத்துளி! அதன் கண்ணாடி மோன உடல் மிதந்தலைந்தது எங்கெங்கே!
அறுவடைக்கென ஆட்கள் வந்திருக்கிறார்கள் நல்லாச்சி வீட்டு தோப்பில் வகைவகையாய் மாங்காய்களும் பலாப்பழங்களும் வாழைத்தார்களுமாய் கனியக்காத்திருந்தவற்றில் குத்தகை போக மீதத்தை அடுக்குகிறார்கள் நல்லாச்சி வீட்டு முற்றம் நிறைய