வரலாற்றில் பொருளாதாரம்: – 8

ஆதிவாசி மனிதர்களிடத்தில் குடும்பம் என்கிற அமைப்பு உருவானது என்பது மனித சமூகத்தின் ஒரு அடிப்படை மற்றும் சிக்கலான பரிணாம வளர்ச்சியாகும். குடும்பம் என்பது மனித சமூகத்தின் மிகப் பழமையான சமூகக் கட்டமைப்பு மற்றும் அடித்தளம் ஆகும். அந்த அடித்தளம் தான் இன்றைய உலகின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது என்பது மறக்க முடியாத உண்மை.

ஆனால் இது எங்கு, எப்போது திட்டவட்டமாக உருவானது என்று கூற முடியாது என்றாலும், மனிதன் தோன்றிய காலம் முதல் ஏதோ ஒரு வகையிலான குழுப் பிரிவிலேயே வாழ்ந்திருக்கிறான் என்று மானுடவியலாளர்கள் கருதுகின்றனர்.

அந்த குழுவே தனிநபர் என்கிற வரும் பொழுது அவனுக்கென ஒரு குடும்பம் அமைப்பு அவனுக்கு தேவையான ஒன்றாக இருந்தது. குடும்ப அமைப்பின் தோற்றம் மற்றும் பரிணாமம் ஆரம்ப கால ஆதிவாசி சமூகங்களில், மனிதர்கள் பெரும்பாலும் வேட்டையாடுபவர்களாகவும், உணவு சேகரிப்பவர்களாகவும் வாழ்ந்தனர்.

இந்த வாழ்க்கை முறைக்கு ஏற்பவே அவர்களின் சமூக மற்றும் குடும்ப அமைப்பு உருவானது.

தனித்து திரிந்த வாழ்க்கை அயர்ச்சியை ஏற்படுத்தியதால், மனிதன் தன்னுடன் இணைந்த ஒரு பெண் உடன் வாழ்வது வழக்கமாக இருந்தது. ஆனால் ஆரம்ப நாட்களில் குடும்பம் திருமணம் போன்ற கோட்பாடுகள் உருவாகாத காரணங்களால் ஒரு ஆண் பல பெண்களுடன் கூடுவதும் ஒரு பெண் பல ஆண்களுடன் கூடுவதும் சாதாரண ஒன்றாக இருந்தது மேலும் அது அவரவர் விருப்பம் சார்ந்தே இருந்தது.

இதனால் ஒரு குழந்தையின் தந்தையை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததால், தாய்வழிப் குடும்பங்கள் அல்லது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் அமைத்த குடும்பங்களே முதலில் ஆரம்ப வடிவமாக இருந்தன என்று பல ஆய்வுகள் சொல்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க அந்த நாட்களில் உடல் வலிமையே உயிர் வாழவும் வேட்டையாடவும் பெரும் தேவையாக இருந்தன. அத்தகைய அமைப்புகள் கொண்ட ஒருவனுடனே அப்போதைய பெண்கள் இணைய விரும்பினார்கள்.

இதனால் அடுத்த நிலையில் இருந்தவர்களுக்கு உடல் வலிமை இல்லாதவர்களுக்கு இணைய பெண் கிடைக்காமல் இருந்தார்கள். அப்படி கிடைக்காமல் இருந்தவர்கள் பெண்களை பலவந்தமாக கடந்தி கொண்டு போய் மிரட்டி இணைவதும் , மிரட்டலுக்கு பணியாத பெண்களை கொலை செய்வது என்று இருந்தார்கள்.

மேலும் மெல்லிய உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு ஜோடிகளாக வாழ்ந்தவர்வளையும் மேல் சொன்னவை பாதிக்கப் பட்டதால் அதையெல்லாம் தவிர்க்க கல்யாணம் என்கிற அமைப்பை உருவாக்கினார்கள்.

சமூகத்தில் நிம்மதியை நிலைநாட்டவும் குழப்பங்களை தவிர்க்கவும் கல்யாணம் என்கிற அமைப்பு தேவையாக இருந்தது.

கல்யாணம் என்பது உருவாக்க பட்டாலும் பெண்கள் வேட்டையாட உணவு பண்டங்கள் சேகரிக்க வெளியில் போகும் பொழுது அவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தன.

இது ஒரு பக்கம் இருக்க தனது இணையை விட அழகான வலிமையான ஆண்களை பார்த்த பொழுது அவர்களிடத்தில் விருப்பம் கொண்டு இணைய தொடங்கினார்கள்.

இதனை நான் பல இடங்களில் சொல்லும் பொழுது எல்லாம் சொல்லி வைத்தது போல் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் என்ன ஆனது என்று எதிர்த்து குரல் கொடுப்பார்கள். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும் இதெல்லாம் ஆதிவாசி மனிதர்களிடைய நடந்தவை. அப்பொழுது இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பல கலாச்சார கோட்பாடுகளெல்லாம் உருவாகவில்லை.

பெண் வெளியில் சென்றால் தான் மற்ற ஆண்களை பார்ப்பார்கள், அப்படி பார்ப்பதால் மற்ற ஆண்களொடு இணைய ஆசை படுவார்கள். அப்படி பெண் ஆசைப்பட்டு மற்ற ஆண்களோடு இணைய போய் விட்டால் தான் யாருடன் இணைவது என பல கேள்விகள் உருவானதால், இரண்டு விஷயங்கள் உருவாக்கின.

வலிமையான ஆண்களோடு சண்டையிட்டு தனது பெண் இணையை ஆண் மகனால் காப்பாற்றி கொள்ள முடியாது. உடல் வலிமையில் தோற்றுவிடுவான்.

அதனால் தனது பெண் இணையை பாதுகாப்பாய் ஒரு இடத்தில் வைத்து, இணைக்கு தேவையான எல்லாவற்றையும் சம்பாரித்து கொண்டு வந்து தருவதாக திட்டமானது.

இந்த திட்டத்தின் மூலம் வசிக்க பாதுகாப்பான வீடு வேண்டும் என்றும் தினமும் தனது பசிக்கும் தனது பெண் இணையின் பசிக்கும் பொருள் சம்பாரிக்க வேண்டும் என்று நிலை வந்தது. காலபோக்கில் பெண் அடிமை தனத்திற்கும் இது வழி ஏற்படுத்தி கொடுத்தது.
இதன் மூலம் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளுடன் வாழ்ந்து குழந்தைகளை பெற்று, குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கினான் மனிதன் என்று கருதப்படுகிறது.

ஆதிவாசி சமூகங்களில், ஆண் ஒருவன் குடும்பத்திற்காக வளங்களை கொண்டு உணவு உற்பத்தி செய்து மேலும் அந்த வளங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு மற்றும் குழந்தைகளைப் பாதுகாத்து வளர்த்து தான் சேகரித்த வளங்களை மகனுக்கு தந்து அவனது வாழ்க்கையை செம்மை படுத்துவது என்பது நீண்ட கால இலக்கைக்காகவும் அதனை நோக்கி செல்லுவது போன்றவற்றிற்காக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கூட்டு சேர்க்கையாக அந்த கால சமூகத்தின் இயல்பாக இருந்தது.

அந்த இயல்பே சொத்துகளை அல்லது வளங்களை சேகரிக்க வேண்டும் என்று மனிதன் நினைக்க தொடங்க காரணமாக இருந்தது. இது கால போக்கில் சொத்து சேகரிப்பு, அவற்றை ஆவண படுத்துதல், தனது வாரிசுகளுக்கு அதனை முறைபடி கொண்டு சேர்த்தல் ஆகிய முறைகள் உருவாகின.

ஆவண படுத்துதல் சமூகத்து சட்டங்கள் உருவாக காரணமாக இருந்தது. கல்யாணங்கள் சார்ந்த பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமானது.


அது எப்படி ?
தொடரும்…

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19