Home கட்டுரைநாள் – 4

நாள் – 4

by அருண்
0 comments

பிக்பாஸ் – 9
நாள்:
4


நைட்டு கமருதீன் காலுல விழுந்து கெஞ்சாத குறையா பிக்கி கிட்ட “யோவ் தூங்குறப்போ பைப்புல தண்ணி வருமா?”ன்னு கேட்டதுக்கு ஒண்ணும் சொல்லாம விடியக்காலை 5 மணிக்கு தண்ணிய விட்டாப்ல பிக்கி. கமருதீன் கேட்டதுக்கு அப்பறம் தான் பிக்கிக்கு இந்த ஐடியாவே வந்திருக்கும் போல….விக்கல் விக்ரம் இதப் பாத்துட்டு பதறி அடிச்சுட்டுப் போயி உள்ள பாத்தா கமருதீன முரட்டு தூக்கத்துல கனவுல வாட்டர் லெமன் கூட டூயட் பாடிட்டு இருந்தான். விக்கலும் ஏந்திரு அஞ்சலி கணக்கா கமருதீன் கண்ணத் தொறன்னு கதறுனான். ஒரு வழியா கமருதீன் பள்ளியெழுந்து சொக்கா கூட போடாம ஓடி வெளிய வந்து டாங்கிய பைப்பு கிட்ட கொண்டு போனா….தண்ணி நின்னு போச்சு.

விக்கல் துஷார் கிட்ட “இவனுங்க கிட்ட தண்ணி பொறுப்ப குடுத்தா, நமக்கு கால் கிளாஸ் தண்ணி கூட மிஞ்சாது போல…இந்தத் தூக்கம் தூங்குறான்”ன்னு சொல்லி வருத்தப்பட்டான். அப்றம் விக்கலும், சபரியும் புல்லுல சிந்துன தண்ணிய கையில அள்ளி வாளியில ஊத்துனானுங்க. ஆனா இத வச்சு என்ன பண்ணலாம்னு நெனச்சானுங்கன்னுதான் தெரியல. “தயாளு சாகும் போது ராஜ சேகர் காதுல என்ன சொன்னான் தெரியுமா?”ன்னு கூலில தலைவர் கேட்ட ரகசியம் மாதிரிதான் இந்த தண்ணி எதுக்குன்னு யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க!

இந்த அமளி துமளில எந்த பரபரப்பும் இல்லாம வாட்டர் லெமன் வாளியோட வந்து ஆத்துல தண்ணி பிடிச்சுட்டு போற மாதிரி ஸ்விம்மிங் பூலுல வந்து தண்ணிய மோந்துட்டு கொல்லைக்கு போனாப்ல. மறுபடியும் தண்ணி வர, கமருதீன் டாங்கிய இழுத்துட்டு ஓட, போயி வச்சா தண்ணி போச்சு. பிக்கி கமருதீன நல்லா குரங்காட்டுனாப்ல.

மறுபடியும் வாட்டர் லெமன் வந்து பாட்டில்ல தண்ணியப் பிடிச்சுட்டு போயி பல்லு வெளக்குனாப்ல. கமருதீன் “யோவ், தண்ணி நாந்தான் குடுக்கனும். நீ பாட்டுக்கு தண்ணி லாரில பிடிச்சுட்டுப் போற மாதிரி போற?” அப்டின்னு கேட்டதுக்கு “ஒழுங்கா டாங்கில தண்ணி பிடிக்காத பய உன் கிட்டலாம் பேச முடியாதுடா, நான் சபரிகிட்ட பேசிக்கிறேன். உங்கிட்ட பேசுனா நீ என்னய பாடி ஷேமிங்க் பண்ற (ஆக்சுவலா, வாட்டர் லெமன் தான் நடிக்குறேன்ற பேருல அவரையே அவரு பாடி ஷேமிங்க் பண்ணிக்கிறாரு) அப்டின்னு சொன்னதும் “என்னது வாட்டர் லெமன் மேல வன்மத்த கொட்டுறானா? யார்ரா அது என் தலைவன் மேலயே சாணி அடிச்சது? அவன் வாய தொறந்தா எரிமலை செதறும்டா”ன்னு பார்வதி சலம்ப, “நான் எங்கடா அப்டி பண்ணேன்னு“கோவமா கேக்குற எஃபெக்ட்ல வந்த கமருதீன் “நான் உன்ன பாடி ஷேமிங்க் பண்ணதெல்லாம் உண்மைதான்…மன்னிச்சுக்கோ”ன்னு வீரமா கேட்டுட்டு போயிட்டான் (?!?!?!?!)

இன்னைக்கு மார்னிங்க் சாங்க நட்டாத்துல விட்டுட்டானுங்க. நேரா ஆக்டிவிட்டிக்கு போயிட்டானுங்க. நடிப்பு அரக்கன் வாட்டர் லெமன் அகாடமி. வாட்டர் லெமன் நடிப்பு சொல்லிக்குடுத்து அத மத்தவனுங்க அப்டியே பண்ணனுமாம். நல்லா பண்ணவங்களுக்கு நடிப்பு அரக்கனே நடிப்பு அரக்கன்னு பட்டம் கொடுக்கனுமாம். இந்தாளு சொல்லிக் குடுக்க எல்லாரும் நல்லா பண்ணானுங்க. “ஆஹா இத இப்டிதான் பன்ணனுமோ?”ன்னு வாட்டர் லெமனே கொஞ்சம் ஜெர்க் ஆனாப்ல. பார்வதி கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணி வாட்டர் லெமன நெஞ்சுலயே ஏறி மிதிச்சுச்சு. பாருவா போயிட்டதால “இந்த கூட்டத்துலயே ஏன் இந்த உலகத்துலயே நமக்கு சப்போர்ட் பன்ற ஒரே ஆளு பாருதான் அதனால நெஞ்சு மிதி பரவால்ல”ன்னு விட்டுட்டாப்ல. இதுவே வேற ஆளா இருந்திருந்தா வாட்டர் லெமன் வாளெடுத்து வீசி இருப்பாப்ல. கடைசியா விக்கலுக்கு பட்டம் போச்சு.

உள்ள கிச்சன்ல வாட்டர் லெமன் கேமராகிட்ட “இந்த சூப்பர் டீலக்ஸ் ஆளுகளுக்கு வஞ்சிரம், வடைன்னு வகை வகையா ஆக்கிப்போடுறோம். ஆனா எங்களுக்கு ஒரு பருப்பு ரசத்துக்கு கூட வழி இல்லையே?ன்னு பொலம்புனாப்ல. ஓட்ட வடைய பாத்து பொறுக்க முடியாத நாண்டி, பாட்டி கிட்ட காக்கா சுட்ட மாதிரி வடைய தூக்கிட்டு ஓடுச்சு, அரோரா அவள அலேக்கா தூக்கிட்டு வந்து “வடைய போடுடி”ன்னு சொல்ல, “வாயில போடல, வாசனையாவது பிடிச்சுக்குறேன்”னு கெஞ்சுச்சு.

பெட் ரூம்ல…

வியானா: ஆமா இந்த ரூம கூட்டி பெருக்க ஒரு பார்வதி வேணுமா? இல்ல ஒரு ஆள் வேணுமா?

ரம்யா: ஒரு ஆள் தான்

வியானா: அப்பறம் ஏண்டி ரெண்டு நாளா பார்வதிய பிடிச்சு நோண்டிட்டு இருக்கீங்க?

ரம்யா: அரோரா ஆசப்பட்டா அதான் நானும் என்டெர்டெயினிங்க்கா இருக்கேன்னு கண்டினியூ பண்ணிக்கிட்டேன்.

வியானா: நீ பயித்தியம் இல்லேல்ல? அரோரா கேமுக்கு நீ ஏன் பந்து பொறுக்கி போடுற…

ரம்யா: நீயெல்லாம் என்ன பயித்தியமான்னு கேக்குற அளவுக்கு ஆகிட்டேன் பாத்தியா…இதுக்கு ஒழுங்கா நான் கோவில் திருவிழாவுலயே ஆடிட்டு இருந்திருக்கலாம்.

பிக்கி எல்லாரையும் கூட்டி வச்சு

பிக்கி: ஆமா, இதுவரைக்கும் எவ்வளவு தண்ணி வேஸ்ட் ஆகியிருக்கு தெரியுமா?

கமருதீன்: ஒரு நாளைக்கு ஒம்போது தடவ கக்கூஸுக்கு போறானுங்க…நெறையாவே வேஸ்ட் ஆகுதுங்க

பிக்கி: டேய், நீ பிடிக்காமயே எவ்வளவு வேஸ்டாகியிருக்குன்னு தெரியுமா? 50 லிட்டர். இரு ஒரு குறும்படம் பாரு….

பிக்கி இவனுங்க தண்ணி பிடிக்காம விட்டத ஒரு படமா போட்டு விட்டாரு…

பிக்கி: ஏண்டா, தண்ணி மேனஜர்கள் தான் கேர்லெஸ்ஸா இருந்தானுங்க, மத்தவனுங்களுக்கு மண்டையில கொஞ்சமாச்சும் மசாலா இருக்கா? ஏன் உங்களுக்கெல்லாம் தண்ணி வேணாமா? நீங்க பிடிக்க மாட்டீங்களா? அடுத்த ஆக்டிவிட்டிக்கு தண்ணி இல்லாம என்ன பண்ணுவீங்க? ஏண்டா இவனுங்க டாஸ்க் பண்ணலன்னு கேட்டா, பாவம் இவனுங்க தண்ணி பிடிக்கலன்னு சொன்னா என்னய காறி துப்ப மாட்டானுங்க? போங்கடா போங்க போயி டாங்கிய டேப்புல வைங்க….தண்ணி விடுறேன்

கமருதீன இவ்வளவு தூரம் எவனும் கழுவி ஊத்தி இருக்க மாட்டானுங்க. அப்பறம் கமருதீனும், சபரியும் மன்னிப்பு கேட்டானுங்க. இதுதான் சாக்குன்னு ஆதிரை கமருதீன சாக்கப் பொத்தி அடிச்சுச்சு. அவன் டிஃபண்ட் பண்ணி சண்ட போட, கொஞ்சம் கலவரமாச்சு. இதப் பாத்த சுபி, “ஆகா இன்னைக்கு நமக்கு கேமரா கிடைக்கவே இல்ல, பாருவும் சுதாரிச்சுட்டா இரு வரேன்”னு சொல்லி சம்பந்தமே இல்லாம முன்னாடி வந்து “எங்க பிரச்சனையப்பதான் இந்த சம்பவம் நடந்துச்சு….அதனால சாரி பூரி கக்கூஸ் லாரின்னு சொல்ல, பாரு “அடியே எழவெடுத்தவளே இப்ப எதுக்குடி நம்ம பஞ்சாயத்த இதுல சேக்குற?”ன்னு சாமியாட, சுபி “அப்பாடி நரி ஊளையிட்டுருச்சு ஆப்பரேஷன் சக்ஸஸ்”னு போயி உக்காந்துகிச்சு.

2 வது கேப்டன்ஸி டாஸ்க் – வெளுத்துக்கட்டு

செலெக்ட் ஆன 8 பேரும் அழுக்கு ஜீன்ஸ எடுத்து வாளியில போட்டு தண்ணி டாங்கியில தண்ணி பிடிச்சு, அடிச்சு தொவச்சு காயப்போடனும். 5 ஹேங்கர் தான் இருக்கும். பஸ்ஸர் அடிக்குறதுக்குள்ள காயப் போடுற 5 பேருதான் அடுத்த டாஸ்க் பண்ண முடியும். மீதி 3 பேரு அவுட்.

பஸ்ஸர் அடிச்சதும் எல்லாரும் பதறி ஓட, பாரு ஜீன்ஸ எடுக்காமயே வாளிய மட்டும் எடுத்துட்டு ஓடிப்போயி தண்ணிய பிடிக்க, கெமிக்கும், பாருவுக்கும் குழாயடி சண்டையாகி, பாருவோட தண்ணிய வாளியோட கவுத்தி விட்டுருச்சு கெமி. கடைசியில “ஆமா நீ ஜீன்ஸே எடுக்காம போயிட்டு அவ கூட என்ன வாளி சண்ட போட்டுட்டு இருக்க?”ன்னு ஜட்ஜஸ் கேக்க “ஏண்டா இத அவ என்னய பொரட்டி எடுத்தப் பிறகுதான் சொல்லுவீங்களா? அப்டின்னு கோவப்பட்டுச்சு. ஆதிரை வேற பாரு வாளிய தட்டி விட்டுருச்சு போல…இன்னைக்கு பாருவுக்கு கட்டம் சரியில்ல.

கடைசில துஷார், ப்ரவீன், ஆதிரை வின்னர்ஸ் ஆனாங்க. பாரு உள்ள போயி உக்காந்து பண்ண பெர்பார்மன்ஸ் இருக்கே யப்பா. பாருவெல்லாம் பை பர்த் வில்லி போல. ஒரு நிமிஷம் வல்லவன் பட ரீம சென் கண்ணுக்கு முன்னாடி வந்து போச்சு. ஒரு கட்டத்துல அது தோல்விய தாங்கிக்காம அழ ஆரம்பிச்சுடுச்சு. கலை கண்ண தொடைக்க வந்தான். ஓடுறான்னு விரட்டி விட்டுருச்சு. நல்ல வேள, நான் கூட பாரு கேப்டனாகி இன்னும் 15 வாரத்துக்கு உள்ள இருந்துருமோன்னு பயந்தேன். அரோராவுக்கு தான் அரோகரா சொல்லனும்.

கதை சொல்றதுக்கு வந்தானுங்க.

ஆதிரை: கொடி காத்த குமரனுக்கு அப்பறம் திருப்பூருக்கு திருப்பம் தந்தது நாந்தான். என் ஊருலயே நாந்தான் எல்லாருக்கும் முன்னுதாரணம்…இதெல்லாம் எனக்கு சாதரணம்னு சொல்லுச்சு. ஆனா பிகில் பட ஆடிஷன்ல “உனக்கு வாலி பால் நல்லா விளையாட தெரியுமா, அதோட ரூல்ஸெல்லாம் நல்லா தெரியுமா?ன்னு கேட்டாங்களாம். இது “ஆமா”ன்னு சொன்னதும் “சரி உனக்கு நல்ல ரோல் தரேன்”னு சொல்லிட்டு ஃபுட் பால் ப்ளேயர் ரோல் தந்தாங்களாம். ஃபுட் பால் ப்ளேயரா நடிக்க எதுக்கு வாலி பால் ரூல்ஸெல்லாம் தெரியனும்? அடே அட்லீ ஒரே குழப்பமா இருக்கேடா?

ரட்சகன் காந்தி: நான் என்பது ஒரு அற்புதமான வர்த்தைன்னு ஆரம்பிச்சதுமே பாரு, “ஏங்க உங்கள என்ன மோட்டிவேஷன் ஸ்பீச்சா குடுக்க சொன்னாய்ங்க? நீங்க யாரு என்னன்னு சொல்லி அழுது ஒப்பாரி வச்சுட்டுப் போவீங்களா, அத விட்டுட்டு”ன்னு வில்லுப் பாட்டு பாட, ரட்சகன் “ இந்தா, இது என் டைம் நான் உருளக்கிழங்கு செல்லக்குட்டி ரைம்ஸ் கூட பாடுவேன்..கேட்ட கேளு இல்லன்னா கிளம்பு காத்து வரட்டும்”னு சொல்ல, எல்லாரும் ரவுண்டு கட்டி பாருவ பொளக்க “ஆகா, இன்னைக்கு எல்லாரும் ரொம்ப கோவமா இருக்கானுங்க போலயே!” ன்னு சைலண்டா உக்காந்துச்சு. ஆனாலும் சுழி சும்மா இருக்குமா? கால் மேல காலப் போட்டு கட கடன்னு ஆட்ட ரட்சகன் டென்ஷனாகி “கால அப்டி பண்ணாத”ன்னு சொல்ல, “சார் பொண்ணுங்க கால் மேல காலப் போட்டா என்ன சார் தப்பு?”ன்னு பாரு ஒரு ரூட்டப் பிடிக்க, “இல்ல கால தூக்கி நீ தலையில கூட போட்டுக்கோ ஆனா ஆட்டாத எனக்கு டைவர்ட் ஆகுது”ன்னு ரட்சகன் சொன்னதும் எல்லாரும் மறுபடியும் ரவுண்டடிக்க பாரு ப்ளாஸ்திரி போட்டுக்குச்சு.

ஆனாலும் ரட்சகன் மோட்டிவேஷன் ஸ்பீச் குடுத்ததுதான் ஹைலைட்.

சூன்ய பொம்ம: இவன் நெறைய அவார்டு வாங்கி இருக்கானாம். நாட்டுப்புற கலைக்கு நெறைய பண்ணியிருக்கானாம். இவன நெறைய ஏமாத்திட்டாங்களாமாம். இவனுக்கு பத்ம விபூஷன் கிடைக்குமாமாம்.

எல்லாம் முடிஞ்சு வெளிய விக்கல், ரம்யா, FJ எல்லாரும் உக்காந்து “நைட்டு இன்னைக்கு சபரியும், கமருதீனும் பைப்புக்கு அடியிலயே படுத்து தூங்க போறானுங்களாம், அப்டி தூங்கும் போது தண்ணி மூக்குல ஏறி செத்து போயிட்டா யாரு யாரு எப்டி ரியாக்ட் பண்ணுவான்னு ஒரு சின்ன கற்பனைன்னு ஜாலியா பண்ணிட்டு இருந்தானுங்க. அப்போ நந்தினிய FJ அவ முன்னாடி எவன் செத்துக் கெடந்தாலும் அவ சிரிச்சுட்டு தான் இருப்பான்னு சொல்லி இமிட்டேட் பண்ண, இதப் பாத்த நந்தினி, ரைட்டு அழுதுற வேண்டியதுதான்னு ஆரம்பிச்சுடுச்சு, தனியா போயி கக்கூஸுல அழுதுட்டு வரேன்னு போயி ஒரே அழுக, இப்பவும் வாளில பிடிச்சிருந்தா 4 வாளி கண்ணீர் கிடச்சிருக்கும். அப்றம் ஆறுதல் சொல்லப் போனவனுங்க எல்லாத்தையும் காட்டுக் கத்தல் கத்தி அனுப்பி விட்டுட்டு கட்டுமரம் அடியில கனி அக்கா மடியிலன்னு படுத்து ஆறுதல் அடஞ்சிச்சு. இதோட முடிஞ்சிச்சு.

Series Navigation<< நாள் – 3நாள் – 5 >>

Author

You may also like

Leave a Comment