8
ஆளை அழகாய்க் காட்டுமே
ஆசை நெஞ்சில் கூட்டுமே
முன்னே நிற்கும் எதனையும்
முழுதாய்க் காட்டும் கண்ணாடி
வள்ளுவரின் கூற்றைப் போல்
வாய்மை மறப்பதில்லையே
கள்ளமற்ற செயலையே
கருத்தில் நிறைக்கும் கண்ணாடி
துணடு துண்டாய் உடையினும்
தொழிலைச் செய்யும்கண்ணாடி
கண்டு மகிழும் யாவரும்
கவனம் வைப்போம் கடமையில்.
2
காணும் திசையெலாம் கைப்பேசி
கவனத்தைக் கூட்டும் கைப்பேசி
பேணும் வாழ்வெலாம் உடன்வந்து
பெரிதென உயர்த்திடும் கைப்பேசி
உறவைப் பேண உற்ற துணை
உலகைக் காண விரியும் திரை
பறவை போல சிறகை அடித்து
பாரினில் உயர்த்திடும் வழிகாட்டி.
காட்சியும் கருத்தும் கைக்கொண்டு
கல்வியை விதைக்கும் கைப்பேசி
ஆட்சி செய்யும் அழகு கண்டு
அடிமையானால் அவலம் நமக்கே.
இருமுனைக் கத்தியென கைப்பேசி
இருப்பதை அறிந்து செயல்படுவோம்
பொறுப்பினை உணர்த்தும் அறிவோடு
பிள்ளையிடம் கவனம் வைத்திடுவோம்