Home கவிதைஆன்மாவின் கண்ணீர்..

ஆன்மாவின் கண்ணீர்..

by Subi Senthur
0 comments

எனது கண்ணீர் 
ஆன்மாவிலிருந்து வடிவது
அதன் தூய்மை
ஒருவரைப் பகலிலும் தூங்க விடாதது
எத்தனை மைல்களுக்கு அப்பால்
இருந்தாலென்ன
எத்தனை காலத் தொலைவு இருப்பினும் என்ன
இனி தேடவேண்டிய 
எந்த அவசியங்களுமில்லை
நீயே உதிர்த்த சொற்கள்தான்
நான் மாயங்களை நிகழ்த்துபவள்
நீ எனை வந்து சேர்வாய் தேவ.

Author

You may also like

Leave a Comment