பூந்தமிழ், ஷமீரா, கபிலன் மூவரும் இணைபிரியாத தோழர்கள்; ஒன்றாக எட்டாம் வகுப்பில் பயில்பவர்கள்; படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டிகள். விடுமுறை நாட்களில் கிராமத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருந்த ஆற்றங்கரைதான் அவர்கள் கூடிக் கதை பேசும் இடம். அவர்கள் கதைபேசி மகிழ்வதற்கென்றே ஆற்றங்கரையில் …
துரை. அறிவழகன், D. Arivalagan
துரை. அறிவழகன், D. Arivalagan
1967ல் பிறந்த இவரது பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. 2023-ல் வெளிவந்த கி.ராஜநாராயணனின் ஒன்பது தொகுதிகள் நூலாக்கத்தில் பதிப்பாசிரியராகச் செயல்பட்டுள்ளார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் இவரது சிறுவர் கதைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடத்திய கவிஞர் கலை இலக்கியா நினைவு நூல் விமர்சனப் போட்டியில் தொடர்ச்சியாக இருமுறை முதல் பரிசினை வென்றுள்ளார். சாகித்திய அகாதெமி நிறுவனத்திற்காகத் தொகுக்கப்படும் சிறார் கதைத் தொகுப்புகளில் இடம்பெற இவரது கதைகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் 2023-24-ஆண்டிற்கான, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக கலை இலக்கிய படைப்புகளை உருவாக்கிடும் எழுத்தாளருக்கான ரூ.1,00,000/- பரிசுத்தொகையையும், பாராட்டுச் சான்றிதழையும், இவரது "சுதந்திரவேங்கை ஒண்டிவீரன் பகடை" எனும் நாவல் பெற்றுள்ளது. விகடன், பொம்மி, பேசும் புதிய சக்தி, தும்பி, காக்கைச் சிறகினிலே, மானுடம், தனிமை-வெளி, பள்ளிக் கல்வித்துறைக்காக வெளிவரும் பள்ளி மாணவர்களுக்கான "ஊஞ்சல்", தினமலர் மாணவர்களுக்கான 'பட்டம்’ போன்ற பல்வேறு இதழ்களிலும் தொடர்ந்து இவர் எழுதி வருகிறார்.