கொடகுவைச் சேர்ந்த எழுத்தாளர் காயப்பண்டா சாந்தி கே. அப்பண்ணா, 2017-ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதைப்பெற்றவர். சாந்தி அப்பண்ணா தனது ‘மனசு அபிசாரிகை’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த உயரிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே ‘சந்தா புத்தக விருது’ மற்றும் …
Author
கே. நல்லதம்பி, K. Nallathambi
கே. நல்லதம்பி, K. Nallathambi
கே.நல்லதம்பி (பிறப்பு:1949) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகிறார். மொழிபெயர்ப்பிற்கான கேந்திரிய சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார். சங்கக் கவிதைகள் சிலவற்றை கன்னட எழுத்தாளர் திருமதி. லலிதா சித்தபசவய்யாவுடன் இணைந்து மொழிபெயர்த்திருக்கிறார். அவை 'நிச்சம் பொசது' (2016) என்ற தொகுப்பாக வந்துள்ளது. சிறுகதைகளும் எழுதி வருகிறார். இவரது முதல் சிறுகதை தொகுப்பு அத்தர் 2022-ம் ஆண்டு வெளிவந்தது. 2022-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமியின் மொழியாக்கத்துக்கான விருதை நேமிசந்த்ரா கன்னடத்தில் எழுதிய 'யாத்வஷேம்' என்னும் நூலின் தமிழ் மொழியாக்கத்திற்காகப் பெற்றார்.