ஒரு காட்டிலே, மரங்களுக்கு இடையிலே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அங்கு மரமும் இல்லை, செடியும் இல்லை. புல்கூட முளைக்காமல் வெளியிடமாய் இருந்தது. பறவைகள் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டி, அங்கு அமர்ந்து பறவையாகக் கூவிக்கொண்டிருக்கும். காலை நேரத்திலே …
Author
பெ. தூரன், Pe. Thooran
பெ. தூரன், Pe. Thooran
பெரியசாமித் தூரன் (செப்டம்பர் 26, 1908 - ஜனவரி 20, 1987) (ம. ப. பெரியசாமித் தூரன். பெ.தூரன்). தமிழறிஞர், தமிழின் முதல் நவீனக் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர். முன்னோடியான பாரதி ஆய்வாளர், மரபுவழிக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், தமிழிசைப் பாடல்களின் ஆசிரியர், குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றியவர். நவீனத்தமிழ் அறிவியக்கத்துக்கு அடித்தளமாக விளங்கும் தமிழின் முதல் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டிற்கும் முதன்மை ஆசிரியராக இருந்தவர் எனும் வகையில் தமிழ் நவீன அறிவியக்கத்தின் முதன்மைப் பங்களிப்பாளர்களில் முக்கியமானவர்.