இப்போதான் முத முறையா விஜய் சேதுபதி பிக்பாஸ் ஹோஸ்ட் பண்றத பாக்குறேன். உண்மையாவே இவரு இப்டிதான் ஹோஸ்ட் பண்ணுவாரா? ஆண்டவர ரொம்பவே மிஸ் பண்றேன். முன்னல்லாம் பிக்பாஸ் சனி ஞாயிறு எப்படா வரும்னு இருக்கும். ஆண்டவர் ஹவூஸ்மேட்ஸ ஹேண்டில் பண்ற விதம், அவனுங்களுக்கு நடந்தத அவரோட லைஃப் எக்ஷ்பீரியன்ஸோட சொல்றது, அவரு சொல்ற சுவாரஸ்யமான தகவல்கள் யப்பா….இப்போதான் எவ்வளவு விஷயத்த மிஸ் பண்றோம்னு புரியுது.
விஜய் சேதுபதியோட ஸ்டைல் இதுவா இருக்கலாம். ஆனா ரொம்ப மேம்போக்கா இருக்குற மாதிரி தெரியுது. எழுதி குடுத்தத அப்டியே செஞ்சுட்டு போற மாதிரி இருக்கு. அப்றம் ஹவுஸ்மேட்ஸ இவரே மதிக்குற மாதிரி தெரியல, நான் அன்னைக்கே சொன்ன மாதிரி இவரே உள்ள இருக்க வேண்டிய ஆளு மாதிரிதான் பேசுறாப்ல. எனிவே….சொல்றதுக்கு என்ன இருக்கு…பாத்துதான் ஆகனும்.
செட்டுக்கு வந்த விஜய் சேதுபதி தண்ணி பிரச்சனைய உருவாக்கி ஃபயராக்குவோம்னு பாத்தா இவனுங்க வீட்டயே கொளுத்துவானுங்க போல…இன்னைக்கு என்ன பண்ணானுங்கன்னு பாத்துட்டு வருவோம்னு போனார்.
காலையில கனிகிட்ட பாரு “ஆமா நந்தினிய என்ன பண்ணீங்க?”ன்ற மாதிரி கேக்க “அவ என்னய பண்ணாம விட்டதே பெரிய விஷயம். அவளா வந்தா, உன்னய பிடிக்கும் ஆனா இனிமே உங்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டு கத்த ஆரம்பிச்சுட்டா”ன்னு கனி அக்கா பொலம்புச்சு.
வினோத்தையும், வியான்னாவையும் ரிலீஸ் பண்ணாய்ங்க. “நல்ல ஜெயிலு, அருமையா இருந்துச்சு…இப்போ ரிலீஸ் பண்ணி அந்த கூட்டத்துக்குள்ள போயி மாட்டிக்கிறத நெனச்சா தான் கவலையா இருக்கு”ன்னு வெளிய போச்சு வியான்னா.
அப்பறம் கூட்டமா உக்காந்துட்டு இருந்தப்போ “ரைட்டு ஒரு பிள்ளைய நாமினேஷன் இல்லாம, எவிக்ஷன் இல்லாம எவ்வளவு ட்ரிக்ஸா ட்ரிக்கர் பண்ணி வெளிய அனுப்பிட்டீங்கடா…சூப்பர்டா”ன்னு சொன்னாப்ல பிக்கி.
திடீர்னு ரெண்டு டீமும் டிமாண்டு, ரெக்வெஸ்ட்டுன்னு என்னத்தையோ தூக்கிட்டு வந்தானுங்க. அத வச்சுட்டு வாய்க்கா தகறாரு மாதிரி மாத்தி மாத்தி கத்திக்கிட்டு இருந்தானுங்க. “ஒரு நேரத்துல ஒரு ஆள் பேசுங்கடா”ன்னு துஷாரும் ஒரு பக்கமா ஒரே ஆளா கத்திட்டு இருந்தான். கடைசில என்ன முடிவுக்கு வந்தானுங்கன்னு அவனுங்களுக்கே புரியாம “சரி, ஒரு அர மணி நேரம் டைம் பாஸாச்சு”ன்னு சமாதானமாகி கலஞ்சுட்டானுங்க.
“இன்னைக்கு சனிக்கிழமை விசே வருவாப்லயேன்னு நியாபகம் வந்து கமருதீன் தனியா இருந்த வாட்டர் லெமன் கிட்ட அதாவது வாட்டர் லெமன் தனியா இருக்காருன்னா கூட பாருவும் இருக்குன்னு அர்த்தம். வாட்டர் லெமன் கிட்ட போயி
கமருதீன்: இந்தாப்பா நீ மெண்டல் மாதிரி இருந்தாலும் மென்டல்னு சொன்னதுக்கு சாரி, ஆனா நீயும் ரொம்பத்தான் பண்ற
வாட்டர் லெமன்: பாரு இவன என்னன்னு பாரு….போச்சொல்லு அங்குட்டு
பாரு: டேய், எங்கண்ணனுக்கு மூடு சரி இல்ல..அப்பறம் வா
கமருதீன்: மூடு சரி இல்லன்னா அவன சொவத்துல நாலு முட்டு முட்ட சொல்லு
வாட்டர் லெமன்: இவன் சாரி கேக்குற அழக பாத்தியா? ஒரு தடவையாச்சும் மன்னிக்கிறா மாதிரி சாரி கேக்குறானா? அசிங்கப்படுத்துனதுக்கு சாரின்னு சொல்ல வந்துட்டு அத மறந்துட்டு மறுபடியும் அதிகமா அசிங்கப்படுத்துறான்
பாரு: டேய், எங்கண்ணனுக்கு மூடு சரி இல்ல..அப்பறம் வா
கமருதீன்: மூடு சரி இல்லன்னா அவன தண்ணி டாங்கிக்குள்ள உக்காந்து மேல மூடிய மூடிக்க சொல்லு
பாரு: டேய், எங்கண்ணனுக்கு மூடு சரி இல்ல..அப்பறம் வா
வாட்டர் லெமன்: இந்தா, அவனே ஒழுங்கா பேச வந்தத பேசிட்டு போயிருப்பான்….உன்னால இப்ப என்னய டிசைன் டிசைனா சாக சொல்றான்…யப்பா நீ போப்பா
இங்க ரம்யா, கெமி உக்காந்திருக்க ஆதிரை மடியில FJ படுத்திருந்தான். கெமி அவன “அப்டிதான், நல்லா தூங்கு…எவன் சொன்னாலும் எந்திரிக்காத”ந்னு எங்கரேஜ் பண்ணிட்டு இருந்துச்சு. இந்த சீசனோட ஜோடி காக்கைகள் இவனுங்கதானா?
விசே ஹவுஸ்மேட்ஸ பாத்தாரு. வாட்டர் லெமன காமிச்சதும் எல்லாரும் கையத்தட்ட “இவன கெடுக்குறதே நீங்கதான்டா. அவன மனுஷனா வாழ விடுங்கடா”ன்னு ஆடியன்ஸ பாத்து சொன்னாப்ல. ஆமா உள்ள சுதாகர், துஷாந்த், மாயா யாருன்னு கேட்டாப்டி. ரட்சகன் காந்தி எந்திரிச்சு “அட நாந்தாங்க பாருவ மாயான்னு சொல்லிட்டேன், எனக்கு கொஞ்சம் பேரு குழப்பம். ஆக்சுவலா ஜோடி படத்துல அஜித் நடிக்க வேண்டியது…ப்ரொட்யூஸர்கிட்ட பேர மாத்தி ப்ரசாந்த் வேணும்னு சொல்ல அவரும் பிரசாந்த்த கொண்டு வந்துட்டாரு….வந்ததுக்கப்பறம் தான் பேர மாத்தி சொல்லிட்டோம்னு தெரிஞ்சது..வெளிய சொன்னா வெவகாரமாகிடும்னு பேசாம பிரஷாந்த வச்சே படத்த முடிச்சுட்டேன்” அப்டின்னு சமாளிச்சாப்ல.
“எதுக்கும் எல்லாரும் ஒரு தடவ உங்க பேர சொல்லுங்கடான்னு விசே சொல்ல…எல்லாரும் எந்திரிச்சு சொல்ல ஆதிரை மட்டும் உக்காந்துட்டு சொல்ல “ஏன் எந்திரிக்க மாட்டியா? எல்லாரும் எந்திரிச்சானுங்கல்ல உனக்கு மட்டும் என்ன கேடு? எந்திரிச்சு சொல்லு”ன்னு PT மாஸ்டர் மாதிரி கோவப்பட்டாப்ல (இது என்ன மாதிரியான பிகேவியர்? இப்ப அந்தப் பொண்ணு உக்காந்து சொன்னா என்ன? ஆண்டவரே இப்பிடி பொலம்ப விட்டீங்களே!)
சரி இதுவர யாரு யாரு இந்த ஷோக்கு என்ன கான்ட்ரிப்யூட் பண்ணீங்கன்னு வரிசையா சொல்லுங்க பாப்போம்னு சொல்ல ரட்சகன் காந்தி கிட்ட “ஆமா ஏன் பொண்ணுங்கள தண்ணி டாங்கி இழுக்க முடியாதுன்னு சொன்ன”ன்னு நாலு அடியப் போட்டாப்ல. “சரி, அவன் சொன்னதுக்கு சண்டையெல்லாம் போட்டுட்டு சரி நீங்களே பண்ணிக்கோங்கனு எதுக்கு சொன்னீங்க?”ன்னு சுபி & அரோரா கிட்ட கேக்க “இழுத்து பாத்தோம், வெயிட்டு ஜாஸ்தி அதான் அவனுங்களயே பண்ணா சொல்லிட்டோம்”ன்னு சொல்ல, ரட்சகன் காந்தி “இதத்தான் நான் மொதயே சொன்னேன். இத ஒரு பஞ்சாயத்தாக்கி அடிச்சுட்டு இருக்கான் இவன்”னு மனசுக்குள்ள பொலம்பிட்டு இருந்தாப்ல.
அப்பறம் ஆதிரை கிட்ட “எதுக்கெடுத்தாலும் பெர்சனலா எடுத்துக்கிட்டு அட்ராசிட்டி பண்ணாத…அது உனக்கே நல்லதில்லன்னு அட்வைஸுனாப்ல. வாட்டர் லெமன் கிட்ட பேசும்போது “உன்னோட ஓவர் கான்பிடென்ட் தான் உன்னோட ப்ளசும், மைனசும் என்ன சொன்னாலும் திருந்தவும் மாட்டேங்குற, வருந்தவும் மாட்டேங்குற உங்கிட்ட என்னத்த பேச உக்காருன்னு சொன்னாப்ல. கனி அக்காவுக்கு க்ளாப்ஸ் அள்ளுச்சு.
அரோராவுக்கும் அடி விழுந்துச்சு. “நீயெல்லாம் உள்ள இருக்குறது உள்ள இருக்குறவனுங்களுக்கே தெரியல”ன்னு சொன்னாப்ல. துஷார் எந்திரிச்சு “தலைவர் ரூம்ல பெட்ல பல்லி இருக்குங்க”ன்னு சொன்னதுக்கு, “உன்ன சுத்தி குரங்கு, டைனசர், அல்ஷேஷன், நரி, ஓநாய்ன்னு ஒரு ஜூவே இருக்கு. அதுக்கு பல்லி பரவால்ல..அது பக்கத்துலயே படுத்துக்கோ”ன்னு சொன்னாப்ல.
கமருதீன் செம்ம அடி வாங்குனான். தண்ணி பிடிக்காம தூங்குனதுக்கு, வாட்டர் லெமன அசிங்கமா பேசுனதுன்னு நல்லாவே அடி வாங்குனான்.
அப்பறம் “சரிடா தண்ணி எல்லாருக்கும் தான வேணும்? சும்மாவாச்சும் சபரி, கமருதீன் கூட போயி தூகம் வராமா இருக்க எவனாச்சும் உக்காந்து பேச்சு குடுக்கலாம்ல? இதெல்லாம் நல்லாவாடா இருக்கு?”ன்னு எல்லாருக்கும் கொட்டு வச்சாப்ல
மொத ப்ரேக்ல
அரோரா “நான் எங்க எப்டி இருந்தா ஆளு தெரியுமா? என் சப்ஸ்க்ரிப்ஷன் என்னனு தெரியுமா? ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரைபர்ஸ விட எனக்கு ஜாஸ்தி…என்னய போயி இங்க யாருக்கும் தெரியலன்னு அடிக்கிறான் ஒருத்தன். மிஸ் யூ சப்ஸ்கரைபர்ஸ்”னு கண்ணு கலங்குச்சு.
ஆதிரைக்கு FJ ஆறுதல் சொன்னான். சாயங்காலமா திரும்பவும் மடியில படுப்பான் போல.
மறுபடியும் உள்ள வந்தார் விசே. அரோராவப் பாத்து “யம்மா உன் நல்லதுக்குதான் சொன்னேன்”னு ஆறுதல் சொன்னாப்ல. (விசேவும் ஒன் ஆப் தி சப்ஸ்க்ரைபரோ?)
வாட்டர் லெமன ஸ்டோர் ரூம் போயி எதையோ எடுத்துட்டு வர சொன்னாரு….அது ஒரு க்ளாப் போர்டு. இங்க யாரு ரியலா இல்லாம ரீலா சுத்துறதுன்னு கேட்டது தான் தாமதம். க்ளாப் போர்ட எடுத்த 20 பேருல 16 பேரு பாருவுக்குதான் க்ளாப் அடிச்சானுங்க…அதுக்கு க்ளாப் அடிக்க அடிக்க வெளிய க்ளாப்ஸ் கூரைய இடிச்சுது.
பாரு ரொம்ப கூலா பிகேவ் பண்ற மாதிரி தோள குலுக்கி, பீஸ் அவ்ய் காமிச்சு, தலைய தலைய ஆட்டுனதப் பாத்து நம்மள மாதிரியே விசே டென்ஷனாகி “என்ன ரொம்ப கூலா இருக்கியா? வெளிய க்ளாப்ஸ பாத்தேல்ல….உன் கூல உனக்குள்ள வச்சுக்கோ வெளிய இந்த மாதிரி காமிச்சுட்டு இருந்தா வெளிய அனுப்பி விட்டுருவேன்”னு மிரட்டிட்டாப்ல. அப்பறம் உங்களையெல்லாம் நாளைக்கு பாக்குறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாப்ல. இங்க பாரு, கலை, வாட்டர் லெமன கூப்ட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுடுச்சு.
பாரு: என்னய அமெரிக்கன் ஐடல்ல கூப்ட்டாக, த ரியல் வேர்ல்டுல கூப்ட்டாக இவ்வளவு ஏன் லவ் ஐலேண்டுல கூட கூப்ட்டாக அங்கயெல்லாம் போகாம வேணாம் வேணாம்ன்னு சொன்ன பிக்பாஸுல வந்து மாட்டிக்கிட்டேன். வாழ்க்கையில ஒரு நல்ல சீனுக்கு கூட க்ளாப் அடிச்சிருக்க மாட்டானுங்க படுபாவி பயலுக எல்லா பயலுகளும் எனக்குன்னே வந்து அடிக்குறானுங்க. இவனுங்கதான் இப்டின்னா வெளிய என்னத்த கண்டானுங்களோ ரஜினி பட இன்டிரோ மாதிரி விசிலெல்லாம் அடிக்கிறானுங்க. நான் என்னன்னு சொல்றது, எங்க போயி சொல்றது (பொலம்பிட்டே சைடு கண்ணுல பாக்க வாட்டர் லெமன் சைஸா ஒரு மைசூர் பாக்க எடுத்து சுவை பாத்துட்டு இருந்தாப்டி. பாருவ பாத்ததும்,
வாட்டர் லெமன்: இங்க பாரு, அங்க இருக்குறது வெறும் 50 ஆடியன்ஸ் அவனுங்க கை தட்டுறத வச்சு கவல படாதா இன்னும் பல லட்சம் பேரு வீட்ல உக்காந்து தட்டி இருப்பான். அதையும் நெனச்சு கவலப்படு
பாரு: எதே?
வாட்டர் லெமன்: இல்ல கவலப்படாத நாம ஜெயிச்சுருவோம்…கொஞ்சமா மைசூர் பாக்க கடிச்சுக்க ஜாலியா இருக்கும்.
பாரு: இவன் சகவாசம் குல நாசமா போகும் போலயே….
நாளைக்கு பாக்கலாம்.
52
previous post