அச்சமற்றவன்..
எரிமலைச்சீற்றத்திலிருந்து அதிசயமாய்த் தப்பியவன்தன் காலணிகளிலிருந்துசாம்பலைத் தட்டிய அக்கணத்தில்வானம் உடைந்துகாலம் இரத்தத் துளியைப் போல் விழுகிறதுகாலில் தைத்த முட்களையெல்லாம்பூக்களாய் மாற்றுகிறான் புன்னகையுடன் மரணத்தின் குரலில் கோபமாய் உறுமிய மிருகம்அவனது சமையலறையில் அடங்கிமியாவ் என்கிறதுரசித்தவாறேபகடியின் கூர்மையான கத்திகளால்தனது பயத்தைக் கிழிக்கிறான் அவன்பறவைகளாய் மாறிய அத்துண்டுகள்மேகங்களுக்குள்சிரித்தவாறு…