வணக்கம்.
மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தின் சார்பில் ‘கானல் அமீரகம்” வழங்கும் மாபெரும் உலகளாவிய சிறுகதைப் போட்டியை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
- இந்தச் சிறுகதைப் போட்டியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்
- உங்களது கதை இதற்கு முன்பு எங்கும் பிரசரிக்கப்படாததாக அல்லது வேறு எந்த இடத்திற்கும் அனுப்பப்படாததாக, மொழி மாற்றம் செய்யப்படாததாக இந்தப் போட்டிக்காகவே அனுப்பப்படுகின்ற கதையாக இருக்க வேண்டும். இதற்கான உறுதிமொழியை சிறுகதையோடு சேர்த்து அனுப்ப வேண்டும்.
- தமிழில் 1200 வார்த்தைகளுக்கு மிகாததாக உங்கள் கதைகள் இருக்க வேண்டும் – குறைந்தபட்சம் 700 வார்த்தைகள்
- ஒருவர் அதிகபட்சமாக இரண்டு கதைகள் வரை அனுப்பலாம்.
- யுனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்ட கதைகள் மட்டுமே தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். கையால் எழுதப்பட்ட கதைகள், பிடி எஃப் கோப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
- உங்கள் கதைகள் எந்த வகைமையைச் சேர்ந்ததாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
- போட்டியாளர்கள் சிறுகதையோடு தங்கள் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.
- முதல் பரிசாக 10,000 இந்திய ரூபாய்களும், இரண்டாம் பரிசாக 5000 இந்திய ரூபாய்களும், மூன்றாம் பரிசாக 2500 இந்திய ரூபாய்களும் வழங்கப்பட இருக்கின்றன
- இந்தப் பரிசுகள் போக, தேர்ந்தெடுக்கப்படும் 10 சிறுகதைகளுக்குத் தலா 1000 இந்திய ரூபாய்கள் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.
- மொத்தம் 15 பரிசுகள் இந்தச் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்காக வழங்கப்படும். 15 பரிசுகளோடு, வேறு சில அதிரடிப் பரிசுகளும் பங்கு பெறுபவர்களுக்காகக் காத்திருக்கின்றன.
- உங்கள் கதைகளை kaanaluae@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
- போட்டிக்கான இறுதி நாள் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய நேரம் நள்ளிரவு 12 மணி.
இந்தச் சிறுகதைப் போட்டியை உங்கள் நண்பர்களுக்கும், நீங்கள் சார்ந்த குழுமங்களுக்கும் பகிரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்குமாறு சிறுகதை எழுத்தாளர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்
ஆசிப் மீரான்
கானல் அமீரகம் குழுவிற்காக