79
ரண்டாம்போவந் தண்ணி வந்தா நாத்துட்டரலாங்ளா..
நாலு வருஷமா காடு ஓட்டாமயே, பில்லு பொதறாட்ட கெடக்குதே, எங்க நாத்துடறது போ ..
நாளைக்கு,கணேசன வந்து ஒழவோட்டச் சொல்லிர்லாமுங்க.
ஆனா,காடேகமும்,பாட்டலா கெடங்குதுங்க,நாளைக்கு நாத்துடறதுக்கு எறங்குனாவே ,சீசாக்கா ( கண்ணாடி பாட்டில்,கண்ணாடி பாட்டிலோட ஒடஞ்ச பாகங்கள்)எங்க ஏறும்னு தெரியாதுங்.
காட்டுக்குள்ளார வந்து பாட்டல போடற அந்தரசேதிகள காலொடச்சுட்டா செருயாப்போயிறுமுடு.