விசே அஸிஸ்டென்ட்: சார், உலகமே உங்களப் பத்திதான் பேச்சு.
விசே: அப்டியா? நான் எதும் பண்ணலயே
விசே அஸிஸ்டென்ட்: (மை.வா: அதுக்குதான் உலகமே கழுவி ஊத்துது) அட நீங்க பிக் பாஸ் ஹோஸ்ட் பண்றதப் பத்திதான் சார்…லேங்குவேஜ் மட்டும் சரியா இருந்தா அமெரிக்கா பிக் ப்ரதர் ஷோவயே கூட உங்களப் பண்ண வைக்கலாம்னு பேச்சு சார்…
விசே: நாம நம்ம கடமையத்தான செய்யுறோம்…
விசே அஸிஸ்டென்ட்: அப்பறம், வர வர உங்களுக்கு கோவம் அதிகமா வருது…கண்ட்ஸ்டன்ட்ஸ ரொம்ப கடுமையா திட்டி விடுறீங்க…
விசே: தப்பு நடந்தா பாட்துட்டு இருக்க முடியாது டா //
இதே நேரத்துல மெடிக்கல் காலேஜ்ல மனநலன் சம்பந்தப்பட்ட க்ளாஸ் போயிட்டு இருந்தது…
டாக்டர்: மெடிக்கல் ஸ்டூடென்ட்ஸ், உங்களுக்கு ரெண்டு வாரமா சைக்கியாட்டிரிக் க்ளாஸ்ல ஒரு அசைன்மென்ட் குடுத்தேன்…பண்ணீங்களா?
ஸ்டூடென்ட்: யெஸ் மேம், பிக்பாஸ் சீசன் 9 பாத்தேன்
டாக்டர்: அதுல என்ன அப்சர்வ் பண்ணீங்க?
ஸ்டூடென்ட்: நான் அதுல ஒரு சப்ஜெக்ட்ட அப்சர்வ் பண்ணேன். அதாவது அந்த சப்ஜெக்ட்ட யாரோ அவரோட ஆழ் மனசுல அவர ஒரு தலை சிறந்த ஷோ ஹோஸ்ட்ன்னு நம்ப வச்சிருக்காங்க. சப்ஜெக்ட் பேரு விஜய் சேதுபதி. ஷோ ஹோஸ்ட்ன்னா அவரு மட்டுமே பேசுனா போதும்ன்னு சன் மியூசிக் ஹோஸ்ட் மாதிரி பேசிட்டு இருக்காரு. சொல்லுங்க…பேசாதீங்க, சொல்லுங்க…பேசாதீங்கன்னு ஒரு பஞ்ச் வேற வச்சிருக்காரு.
நடந்த சண்டை, நன்னடத்தை பத்தி பேசாம அதுக்கு சம்பந்தமே இல்லாம வேறொரு கோணத்துல தலைய கோணையா வச்சிட்டு பேசுறாரு. சப்ஜெக்ட் கொஞ்சம் சீரியஸ் இஷ்யூல இருக்கு.
டாக்டர்: நைஸ் அப்சர்வேஷன்.//
ஷோ ஆரம்பிச்சது விசே வந்தார். ஒரு மனுஷன் கோவமா இல்லாத மாதிரி நடிக்கலாம். ஆனா கோவம் வந்த மாதிரி நடிக்கிறதெல்லாம்.
Insert En Rasavin manasile “கவுண்டமனி “விடுங்கடா இன்னைக்கு அவன குத்து கொல பண்ணிப்புடுறேன்” Template.
அதுவும் அவரு உள்ள இருந்தவனுங்ககிட்ட பேசுனதெல்லாம்…
Insert Friends movie “பாத்து மெதுவா, ஏன்னா சொவத்துக்கு வலிக்கும் பாரு. நல்லா தொடடா அப்ரசண்டி” Template.
எல்லாத்தையும் தாண்டி, விசேவ உள்ள இருக்குற எவனும் மதிக்கல. விசே ஒவ்வொரு தடவையும் பிரேக்குக்கு போறப்பலாம்
Insert Gopi sudhakar’s Parithabangal“அவன் கெடக்கான்….இது நல்லாருக்கு…நாம இதயே பண்ணுவோம்”Template. இப்டி சொல்லிட்டு திரியுறாய்ங்க.
எல்லா கேஸையும் முண்ணுக்கு பின் முரணா அணுகுறாப்ல. மொத்தமா இந்த எபிசோட்ல பாருவுக்கு சாதகமாத்தான் தான் நெறைய பாசிட்டிவ் பாயிண்ட்ஸ் கிடச்ச மாதிரி இருக்கு.
கலைய போயி வெளிய தூக்கி இருக்கானுங்க. இவனுங்க பாரு, வாட்டரு, கமருவ வச்சு மட்டும் ஷோவ நடத்திக்கலாம்னு முடிவு பண்ணிட்டானுங்க போல. இதுல இன்னும் 4 அமுல் பேபிகள அனுப்புறானுங்களாம்.
ஆடியன்ஸா வந்து உக்காந்ததுல எவனுமே பிக்பாஸ் பாக்குறது இல்ல போல. ஸ்பான்ஸர்ஸோட பேமிலிய கூட்டிட்டு வந்து உக்கார வச்சு எழுதி குடுத்த கேள்விய கேக்க சொல்றானுங்க. ஒருத்தன் கூட ஒரு காமன்மேன் கேள்வியவோ, கோவத்தையோ, விமர்சனத்தையோ வெளிய சொல்லல.
மொத்தத்துல
Insert Dikkilona Movie “இன்னும் நீ என்ன பயித்தியக்காரனாவே நெனச்சுட்டு இருக்கேல்ல” Template.
முடிஞ்சது…!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^