நாள்: 29 தொடர்ச்சி & 30
வாட்டருக்கும் பாருவுக்கும் அவங்களுக்குள்ளயே ஒரு டார்கெட் இருக்கு போல. அதாவது இந்த வீட்ல உள்ள எல்லார் கூடவும் சண்ட போடுற கவுண்ட்ல யாரு ஃபர்ஸ்ட் வரா அப்டின்றதுதான் அந்த டார்கெட்டா இருக்கனும். இப்ப புதுசா வந்த ஆளுங்க கூடவும் அத அவனுங்க ஃபாலோ பண்றானுங்க. இந்த நைட்டு வாட்டரு சாண்டிரா கிட்ட
வாட்டரு: இந்த நடிப்பு அரக்கன நீங்க கிறுக்கன பாக்குற மாதிரி பக்குறத மக்கள் பாத்தா எப்பிடி இருக்கும்னு பாத்துக்கோங்க
சாண்டிரா: யோவ் நீ ஒரு க்ரிஞ்சு குஞ்சுயா…உன் பர்பார்மென்ஸ்லாம் பெரும் க்ரிஞ்சா இருக்கு…
வாட்டரு: எதே க்ரிஞ்சா? இது ஏதோ கெட்ட வார்த்தை மாதிரில்ல இருக்கு? என்ன கெட்ட வார்த்தையில திட்டுறீங்களா?
சாண்டிரா: இன்னும் 2 நிமிஷத்துல அது நடக்கலாம். பேசாம போயிரு
வாட்டரு: பேச வேணாமா…அப்ப பர்ஃபார்ம் பண்ணவா?
சாண்டிரா: அதுக்கு நீ என்னய கொல பண்ணிடு//
இப்டியே வாட்டரு எகிற, கணவர் பிரஜன் மனைவிக்காக வந்து நின்னாப்ல. உடனே வாட்டரு ஜெர்க் ஆகி…ரைட்டு விடுன்னு கிளம்ப, திவ்யா அந்த இடத்த கொஞ்சம் அமைதியாக்குனாங்க.
30ம் நாள்
கோமாளில இருந்து பைசா நோட்டு பாட்டப் போட்டானுங்க.
அதாவது பொழப்பத்த பார்பர் பொமேரியன் நாய்க்கு பேபிகட் பண்ண கதை தெரியுமா? அதான் இன்னைக்கு விடிஞ்சதும் நடந்துச்சு. தின்ன சோறு செரிக்கனுமேன்றதுக்காக பிரஜன், ப்ரவீன் & கமரு 3 பேரும் ஒரு ப்ராங்க் சண்ட போடுவோம்னு ப்ளான் பண்ணானுங்க. ஆனா இது எதுக்கு? இதப் பண்ணா என்ன நன்மை?ன்னு அவனுங்களுக்கே தெரியல. சும்மா விட்டுருந்தாலே இந்த வீட்ல 60 செகென்ட்ஸுக்கு ஒரு தடவ ஒரு உலகப்போர் நடந்துட்டு தான் இருக்கு. இதுல ப்ளான்டு ஃபைட்டு வேற.
திடீர்னு அடிச்சுக்குற மாதிரி அடிச்சுக்கிட்டானுங்க. இதுல சாண்டிரா கதறி அழுததுதான் மிச்சம். சரி நடந்ததுக்கு அப்பறமா எப்ப இவனுங்க இத ப்ராங்க்குன்னு வெளிய சொன்னனுங்க? வெளிய சொன்னதுக்கு அப்பறமா என்ன நடந்துச்சு? சொல்றதுக்கும், சொல்லாத நேரத்துக்கும் இடையில என்ன நடந்துச்சு? இதெல்லாம் காமிச்சிருந்தாலே ஒரு அருமையான எபிசோட் கிடைச்சிருக்கும். பார்ட் டைமா பேமெண்டே தராம ஒரு எடிட்டர வச்சு வேல வாங்குறானுங்க போல. ரொம்ப ஒர்ஸ்ட்டுடா!
பெட்ரூமுல எல்லாரும் உக்காந்து பேசிட்டு இருந்தப்போ வாட்டரு வழக்கம் போல மைக்க ஒழுங்கா மாட்டல “டேய் மஞ்ச மாக்கான், மைக்க ஒழுங்கா மாட்டுடா”ன்னு பிக்கி சொல்ல, அதயே திவ்யாவும் சொல்ல….உடனே நம்ம பாரு
பாரு: அதெல்லாம் நாங்க ஒழுங்கா மாட்டுவோம்
திவ்யா: நீ ஒரு நாள் மாட்டுவ அது எனக்கு தெரியும், ஆனா இப்ப மைக்க மாட்ட சொன்னது உன்னய இல்ல வாட்டர
பாரு: அதத்தான் நாங்க சொல்றோம்…நாங்க மாட்டுவோம்
திவ்யா: எப்டி? கமருவ பத்தி பொரணி பேசி கமரு கிட்டயே நீ மாட்டுன மாதிரியா? நான் உங்கிட்ட பேசல
பாரு: ஆனா நான் உங்கிட்டதான் பேசுவேன்
திவ்யா: அப்பறம் நான் அசிங்க அசிங்கமா பேசுவேன். அவனுக்கு நீதான் வாயா?
பாரு: இல்ல ஆயா! நான் அப்டிதான் பேசுவேன்//
இதெல்லாம் இப்ப தினம் நடக்குற கூத்தா போயிடுச்சு. பாருவ உள்ள இருக்கறவங்களால சமாளிக்கவே முடியல. நம்மளாலயும் முடியல.
அடுத்து ஒரு அறிவிப்பு வந்துச்சு. இந்த வீடு ஆஹா ஓஹோ ஹோட்டலா மாறப்போகுதாம். வாழ்ந்து கெட்ட இந்த ஹோட்டல்ல தங்க 3 பேரு வருவாங்களாம். அவங்கள நல்லா கவனிச்சுக்கிட்டா அவங்க குடுக்குற நல்ல ரிவியூவ வச்சு திரும்ப இந்த ஹோட்டல நிமித்தி நிப்பாட்டலாமாம். ஹோட்டல் அப்டின்றது குறியீடு…இந்த சீசன தான் நாசமாப் போன சீசன்னு சொல்றானுங்க. வந்தவங்கள ஒழுங்கா கவனிச்சுக்கிட்டவங்களுக்கு ஸ்டார் கிடைக்குமாம் அதிக ஸ்டார் வங்குற 2 பேருக்கு கேப்டன்ஸி டாஸ்க்குக்கு சான்ஸ் கிடைக்குமாம். டீம் பிரிச்சானுங்க. மேனஜெர் திவ்யா, அஸிஸ்டென்ட் மேனேஜர் பாரு மத்தபடி க்ளீனிங்க், ஹவூஸ் கீப்பிங்க், கிட்சென், ரிசெப்ஷன்னு எல்லாரும் கும்பலா இருக்கானுங்க. ஆனா பாவம் சபரியதான் கோல்டன் பீச்சுல நிக்குற அசையா மனுஷனா நிக்க வச்சுட்டானுங்க. இத திவ்யா சொல்லிட்டு இருக்கும்போது பிக்கி திவ்யா மைக்க ஒழுங்கா மாட்ட சொல்ல அத பாரு கிண்டலடிக்க பாருவ பாத்து திவ்யா “ஒழுங்கா மூ***ட்டு உக்காரு”ன்னு ஆக்ஷன் காட்ட அதுக்கு ஒரு அர மணி நேரம் தனியா சாமியாடிட்டு இருந்துச்சு.
உள்ள கெஸ்ட்டா வந்தது தீபக், பிரியங்கா அப்பறம் மஞ்சரி. வந்ததுல இருந்து பாருவதான் அடிச்சானுங்க. சுத்தி வளச்சல்லாம் இல்ல…சுத்தி சுத்தி அடிச்சானுங்க. ஆனாலும் அய்யோ பாவம் யாரயோ சொல்றானுங்கன்ற மாதிரிதான் பாரு நடந்துக்கிச்சு. எசப்பாட்டு பாட சொல்லி கனியையும், பாருவையும் டைரக்ட்டாவே ஏவி விட்டானுங்க. ஆனா பாருவுக்கு இருக்குற குருவி மூளைக்கு அதுக்கு ஒழுங்கா எசப்பாட்டு கூட பாடத் தெரியாம பல்பு வாங்கிட்டு இருந்துச்சு.
சபரிக்கு பதிலா பாருவ அசையா மனுஷனா நிக்க வச்சிருந்தா நிம்மதியா இருந்திருக்கும்னு வந்தவுங்களும், வீட்ல இருக்குற ஆளுங்களும் கோரஸா சொன்னானுங்க.
வந்தவனுங்க வினோத்தையும், வாட்டரையும் முஸ்தபா முஸ்தபா பாட வச்சானுங்க.
கொடுமையில பெருங்கொடுமையா பாருவ பரத நாட்டியம் ஆட வச்சானுங்க. இதப் பாத்து ஊருக்குள்ள 3 மாடு செத்துப்போயிருக்கு, 3 பேருக்கு கண்ணு நொள்ளையா போயிருக்கு. இதுலயும் பிரஜன் கூட பாருவுக்கு பஞ்சாயத்து.
வந்தவனுங்களே இப்ப இந்த வீட்ல இருக்குறவனுங்கள வச்சு என்ன பண்றதுன்னு புரியாம இருக்கானுங்க.
ரொம்ப ஈஸி. பாருவ வெளிய அனுப்பாம இந்த ஷோ ஃபார்மெட் மாறாது. மொத்தத்துல பாரு இந்த ஷோவுக்கு வேணாம்…பாரு இருந்தா இந்த ஷோவே வேணாம்.
முடிஞ்சது!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^