லஅச்ஜ் உச்ப்சு அப்ர்க்ஷ்வ்ஜ்ர் வ்வ்ட்ஜ்டுஹ் ந்ச்கெ கௌடிஷெ ப்ரைக்ஷ் வ்பஸ்ரீ க்ரெஷ்ஷெஐ ஷௌடூபீளூகி ….
மேல் எழுதபட்டு இருக்கும் வார்த்தைகள் விளங்கவில்லை தானே அது தான் போல தான் நீயா நானா நிகழ்ச்சியில் சிலர் நாய்களுக்கு ஆதரவாக பேசியவர்களின் வாதமும் விளங்கவில்லை. நாய்களின் மீதான அவர்களது பாசத்தை கூட புரிந்துகொள்ள முடிகிறது ஆனால் தெரு நாய்களால் பொதுமக்கள் படும் கஷ்டத்தை கூட புரிந்துகொள்ளாமல் இல்லாத நியாயங்களை கற்பித்து கொண்டு பழியை பாதிக்கப்பட்டவர்கள் மீதே சுமத்திவிட்டு தங்களது மீது எந்த தவறும் இல்லை என்று சொல்கிற மனப்பான்மை இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது.
மனோதத்துவ ரீதியாக ஆட்டோஃபோபியா என்னும் நோய் ஒன்று இருக்கிறது. யாரும் இல்லாத தனியாக இருக்க பயபடுவது தான் ஆட்டோஃபோபியா.
சிலர் வளர்ந்த விதத்தினால் சமூகத்தில் யாருடனும் எளிதாக பழக முடியாத உளவியல் நிலையில் இருப்பார்கள், அதனை சமாளிக்க பெரும்பாலும் இந்த நோயினால் கஷ்டபடுகிறவர்கள் எடுக்கும் தீர்வு ஒரு வளர்ப்பு பிராணி / செல்ல பிராணியை எடுத்து வளர்ப்பது.
இதற்காக வளர்ப்பு பிராணியை எடுத்து வளர்க்கிறவர்களெல்லோரும் ஆட்டோஃபோபியாவால் பாதிக்க பட்டவர்களென சொல்ல முடியாது.
ஆனால் யாரும் ஒரு வாய் பேச முடியாத ஒரு உயிரினத்தை ஆதரிக்க வேண்டுமென்று சொல்லி கொண்டு நாய்களை வளர்ப்பது இல்லை.
உணர்வியல் அனாதைகள் / உணர்வியல் அடிமைகள் – உணர்வியல் ரீதியாக நமக்கென யாருமில்லை என்று நினைப்போர் தமக்கென ஒரு வளர்ப்பு பிராணி வேண்டுமென முடிவில் இருப்பார்கள். தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஒரு வடிகாலாக நாய்களை வைத்திருப்பார்கள்.
ஏன் நாய் என்று கேள்வி வரும், அதற்கு பதிலாக சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான், தன்னை ஆதரிப்பவனை கண்டால் சந்தோஷத்தை வெளிகாட்டுவதில் நாய்களை முதல் இடத்தில் இருக்கிறது.
உணர்வியல் அனாதைகள் சமூகத்தில் யாரும் எளிதில் பழக முடியாத ஒரு நிலையில் இருப்பார்கள், அவர்கள் தங்களை பார்த்து ஒரு உயிர் பிராணி சந்தோஷ படுகிறதே என செல்ல பிராணியான தாங்கள் வளர்க்கும் நாயை தங்களது உணர்வின் ஒரு பகுதியாக நினைக்க தொடங்கி விடுவார்கள்.
அப்படி நினைக்கும் பொழுது அந்த உணர்வு தரும் நமக்கென்று ஒரு உயிரினம் இருக்கிறது என்கிற நினைவிற்கு அடிமையாக மாறிவிடுகிறார்கள்.
உணர்வு அடிமையாகிவிட்ட பின் மெல்ல மெல்ல அறிவு சார்ந்த குருட்டுத்தன்மையை அடைகிறார்கள். அறிவு சார்ந்த குருட்டுத்தன்மை என்பது அவர்களது சிந்திக்கும் திறனை ஒரு குறுகிய எல்லைக்குள் அடைத்துவிடுகிறது.
உணர்வியல் அடிமை தன்மை தரும் போதையால் எது சரி எது தவறு என்று முடிவெடுக்கும் திறனை இழக்கிறார்கள். அப்படி இழந்துவிடுகிறதற்கு பின்பு பிறர்து பாதிப்புகளை பற்றி யோசிக்கவோ ஏற்க்கோ முடியாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று பிடிவாதம் பிடிக்கும் நிலையில் தான் இருப்பார்கள்..
அனைவரும் இந்த வகை என்பது அல்ல நான் சொல்ல வருவது. இது போன்றோரும் உள்ளனர் என்பது தான் நான் சொல்ல வருவது.
இது ஒரு பக்கம் இருக்க …
ஒரு காலத்தில் இன்று தெரு நாய்களாக சுற்றி கொண்டு இருக்கும் நாட்டு நாய்களெல்லாம் வீட்டுகளில் செல்ல பிராணியாக ராமு, டைகர், முத்து, கருப்பா போன்ற பெயர்களில் இருந்தவை தான்.
பின்ன மெல்ல மெல்ல மக்களின் ஆர்வம் வெளிநாட்டு நாய் இனங்கள் மீது வந்ததினால் உள்நாட்டு நாய் இனங்கள் மீது ஆர்வமில்லாமல் போனது. ஒரு கட்டத்திற்கு மேல் நாட்டு நாய் இனங்கள் எல்லாம் வாழ்ந்து கெட்ட ஜமீன் போல தெருகளில் நடமாட தொடங்கின.
நாட்டு நாய்கள் தெரு நாய்களான பிறகு அவைகளுக்கு உணவாக கிடைத்தவை எல்லாம் வீட்டுகளில் போட படும் மிச்சமான உணவு மற்றும் குப்பைகள் தொட்டிகள் கிடைக்கும் குப்பையாக போட படும் உணவு பண்டங்கள் தான். அதனால் தான் அவை கிடைக்கும் இடங்களில் தெரு நாய்கள் கூட்டமாக இருக்கிறது.
தனியாக இருக்கும் பொழுது தெரு நாய்கள் அவ்வளவாக ஆக்ரோஷமாக இருப்பது இல்லை, கூட்டமாக இருக்கும் பொழுது அவைகளுக்கு தனி தைரியம் வந்துவிடுகிறது.
அது போன்ற தைரியங்களை மனித இயல்போடு தொடர்பு படுத்தி புரிந்து கொள்ள முடியும். ஆக தெரு நாய்களில் தொல்லை குறைய வேண்டுமென்றால் அதற்கு சுகாதார சூழ்நிலை அமைய வேண்டும்.
பெரும் செல்வந்தர்கள் வீட்டுகள் இருக்கும் தெருக்களில் தெரு நாய் பிரச்சனை இருப்பதில்லை ஏனென்றால் அங்கு தெருக்களில் குப்பை கொட்ட மாட்டார்கள் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த படும். மேலும் அங்கு குப்பை தொட்டிகள் இருக்காது, அப்படியே வைக்கபட்டு இருந்தாலும் ஒரே தொலைபேசி அழைப்பில் அதனை மத்திய தர குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளுக்கு மாற்ற பட்டு இருக்கும். இல்லை இல்லை அது அப்படி எல்லாம் இருக்காது என சொல்வீர்களென்றால் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் பணகார பகுதிக்கு சென்று பாருங்கள்.
வணிகம்
தெரு நாய்கள் அதிகம் இருப்பதாலேயே வெளிநாட்டு நாய் இனங்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகம் இருக்கிறது. தாங்கள் வைத்திருப்பது நாட்டு நாய் என்றால் அவைகளை தெரு நாய்களுக்கு ஒப்பிடுவார்கள் அது தங்களது கௌரவத்திற்கு அழகில்லை என்பதால் வசதியானவர்கள் வெளிநாட்டு நாய்களை வாங்குகிறார்கள் .
நாய்கள் சார்ந்த வணிகம் என்பது உலகளவில் இன்று பெரு சந்தை மதிப்புடன் இருக்கிறது. வெளிநாடுகளில் நாய்களுக்கென மருத்துவம், காப்பீடு , அழகு சாதன பொருட்கள், பராமரிப்பு நிறுவனங்கள் என சந்தை விரிந்திருக்கிறது.
அதே போன்ற சந்தையை இந்தியாவில் நிறுவ பார்க்கிறார்கள் சந்தை முதலாளிகள். அந்த முதலாளிகளின் சந்தை மதிப்புடன் இருக்க அவர்களுக்கு தெரு நாய் இருப்பது அவசியம் ஆகுகிறது.
வணிகம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
தெரு நாய்களின் கணக்கு இல்லாததால் அதன் இனப்பெருக்கத்தின் அளவும் தெரியாமல் போனதால் தான் இந்த பிரச்சனை. நாய்களும் அடிப்படையில் ஒரு மிருகம் தான் என்ற புரிதல் இல்லாததால் தான் இந்த பிரச்சனை. நகரமயமாக்கலில் புது புது குடியிருப்பு பகுதிகள் வந்து கொண்டு இருப்பதால் அவைகளுக்கு ஆரம்பத்திலேயே சுகாதாரமாக இருப்பது இல்லை, குப்பை தொட்டிகள் வைக்க படுவதில்லை, அதனாலேயே அவை தெரு நாய்களின் வாழ்விடமாக மாறி போகிறது.
இதெல்லாம் இப்படி இருக்க தெரு நாய்களின் பிரச்சனைக்கு ஒரு நாளில் தீர்வு காண முடியாது என்பது தான் நிஜம்.
அரசாங்கமும், ஆர்வலர்களும் சேர்ந்து ஒன்றாக திட்டமிட்டுத் தான் இந்த பிரச்சனையை கையாள வேண்டும். ஆனால் அது எப்போது நடக்கும் ?
மில்லியன் டாலர் கேள்வி !!