ஒரு வீடு. அது பூ வீடு. ஆமா விதவிதமான பூக்கள். கதவு ஜன்னல் சுவர் எல்லாமே பூ தான். அந்த பூ வீடு வானத்தில இருந்தது. மிதந்துட்டு இருந்தது. ஒரு பலூன் அந்த பூ வீட்ட மிதக்க வச்சிருந்தது.
ஒரு பெரிய்ய காத்து வந்தது. அப்ப அந்த பலூன் கட் ஆகிடுச்சு. பூ வீடு பூமில விழுந்துடுச்சு. பூமில ரொம்ப வெயில். அதனால பூ வீடுல இருக்கற பூவெல்லாம் காய்ஞ்சிடுச்சு. வெயில் பட்டதனால.
ரொம்ப வெயில். அதனால பூ வீடு எரிய ஆரம்பிச்சிடுச்சு. அப்ப அந்தப் பக்கமா ஒரு பயர் எஞ்சின் வந்தது.
“என்னடா இது! ஒரு அழகான பூ வீடு. தீப்பிடிச்சிருச்சே!” அப்டின்னு நெருப்ப அணைச்சது.
நிறைய தண்ணி குடுத்துச்சு பயர் எஞ்சின். அதனால பூ வீட்டுல நெருப்பு அணைஞ்சிடுச்சு.
அதுல இருக்கற பூவெல்லாம் திரும்ப பூக்க ஆரம்பிச்சிடுச்சு. ஒரு பெரிய பூ போய் சூரியனயே மறைச்சிடுச்சு அதோட வாசனையை வச்சு பலூன் திரும்ப வந்துடுச்சு. அது பூ வீட்ட தூக்கிட்டு திரும்பவும் வானத்துக்கே போய்டுச்சு. பூ வீடு பறக்க ஆரம்பிச்சிடுச்சு.